ஒரு காலத்தில் விக்ட்டோரியா தியேட்டர் ,ராஜா தியேட்டர், என்று அழைக்கப்பட்ட கிண்டி ஆலந்தூர் எஸ்கே தியேட்டர்… தற்போது எஸ்கே மர்லின் தியேட்டர் என்று அழைக்கப்படுகிறது…
எஸ்கே மார்லின் தியேட்டர் சென்னையில் எங்குள்ளது..?
கிண்டி கத்திப்பாரா பாலத்துக்கு கீழே… விமான நிலையம் செல்லும் சாலையில்… வலது பக்கம் ஒரு பெரியர் சிலை ஒன்று வரும்… பெரியார் சிலை மற்றும் அன்னபூர்னா ஹோட்டலுக்கு , நடுவில் ஒரு சாலை செல்லும் ….அந்த சாலையில் எங்கேயும் வளையாமல் நேராக சென்றால் கற்பக விநாயகர் ஆலயம் வரும்… கோவிலின் இடப்பக்கம் வளைந்து 100மீட்டர் கடந்தால் எஸ்கே மார்லின் சினிமா உங்களை கலர்புல்லாக வரவேற்கும்.
பெரிய தியேட்டராக இருந்த எஸ்கே தியேட்டரை கோடிகளை கொட்டி மினி தியேட்டராக மாற்றி இருக்கின்றார்கள்… ஆன் லைனில் புக் செய்து விட்டு குடும்பம் குடும்பமாக வந்து திரைப்படத்தை குதுக்கலத்தோடு கண்டுகளிக்கின்றார்கள். எதிர்காலத்தில் இன்னும் நிறைய தியேட்டர் ஸ்கிரின்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இதன் மேனேஜர் லிங்கேஷ்…
மிக அருமையான உள் கட்டமைப்போடு முழுவதும் ஏசி செய்யப்பட்ட மினி தியேட்டராக எஸ்கே மார்லின் விளங்குகிறது .. ஒளி,ஒலிக்கு பெரிய பெரிய மால் தியேட்டர்களுக்கே சவால் விடும் வகையில் இருப்பதுதான் ,
எஸ்கே மார்லின் சினிமா வின் சிறப்பு என்று சொல்லலாம்..
துல்லியமான கியூப் புரொஜக்ஷன், டிடிஎஸ் சவுண்ட்…அருமையான ஆம்பியன்ஸ் காரணமாக திரைப்படத்தை மிகுந்த ரசனையோடு கண்டுகளிக்கலாம்.பொதுவாக தியேட்டருக்கும் வரும் பொதுமக்களிடம் கேண்டினில் கொள்ளை விலை வைத்து விற்பார்கள்… ஆனால் எஸ்கே தியேட்டரில் மிக குறைவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.. அது மட்டுமல்ல திரைப்படம் பார்க்கும் முன் போராடித்தால் புட் கோர்ட்டில் புட் ஆர்டர் செய்து சுவைக்கலாம்.
வெள்ளிக்கிழமையானால் புது புது திரைப்படங்களை திரையிட்டு அசத்துகிறது கிண்டி எஸ்கே மார்லின் சினிமா…. இளைஞர்களால் நடத்தப்படும் திரையரங்கம் என்பதால் இளைஞர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சகல வசதிகளோடு அப்படியே புதியதாக மினி தியேட்டராக மாற்றியுள்ளார்கள்.
குடும்பத்தோடு திரைப்படத்தை கண்டுகளிக்க எஸ்கே மார்லின் சினிமா தியேட்டர் மிக சிறந்த தியேட்டர் என்பதில் ஐயம் இல்லை.. ஒரு முறை கிண்டி எஸ்கே மார்லின் சினிமாவில் படம் பாருங்கள்… அருமையான அனுபவத்தை உணர்வீர்கள்..
எஸ்கே மார்லின்சினிமாவில் படம் பார்த்த அனுபவத்தை ஜாக்கிசினிமாஸ் காமென்ட் பகுதியில் குறிப்பிடவும் , ஈ மெயில் செய்யவும் மறவாதீர்.