Mellisai Official First Look Teaser | Vijay Sethupathi | Gayathrie | Ranjit Jeyakodi

unnamed

விஜய் சேதுபதியில் மிரட்டல் அவதாரம் மெல்லிசை….

புதிய இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடியின் இயக்கத்தில் , ரெபெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில்  விஜய்  சேதுபதி ஜோடியாக காயத்ரி நடிக்கும் ‘மெல்லிசை’ படத்தின் டீசர் இன்று மாலை சொன்ன நேரத்தில் வெளியிட்டு விட்டார்கள் .

சமீபத்தில் வெளி வந்த இப்படத்தின் போஸ்டர்ஸ் மிக பெரிய அளவில் ரசிகர்களை சென்று அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இதை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி  கூறும் போது ‘இன்றைக்கு வெளி வர உள்ள ‘ மெல்லிசை’ டீசர்  எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் தொழில் நுட்பத்திலும் , ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் இருக்கும்.

முதல் போஸ்டருக்கும், முதல் டீசருக்கும் கிடைக்கும் வரவேற்ப்பு ஒரு இயக்குனருக்கு கிடைக்கும் பெரிய கௌரவம். அது எனக்கு இந்த டீசர் மூலம் கிடைக்கும் என்பதே மிக்க மகிழ்ச்சி என்கின்றார் ரஞ்சித் ஜெயக்கொடி

டீசரை முழுதாய் பார்த்த வரையில் மெல்லிசை திரைப்படம் சென்னையின் கருப்பு பக்கத்தை சொல்லும் திரைப்படமாக இது வரும் என்று எதிர்பார்க்கலாம்.

 

 

 

Previous articleYatchan ( 2015) Movie Review
Next articleTrisha Illana Nayanthara – Bittu Padam song | G.V. Prakash Kumar, Anandhi