AIR FORCE ONE (1997) MOVIE LOVELY SCENE

https://youtube.com/watch?v=WhWEJ57IDGk%3Frel%3D0

air_force_one_ver2

 

1997 ஆம் ஆண்டு வெளியான ஏர் போர்ஸ் ஒன் திரைப்படம் பார்த்துஇருக்கின்றீர்களா,-??

அதில் ஒரு காட்சி அப்படியே மெய் சிலிர்க்க வைக்கும்… அதை எத்தனை பேர் ரசித்தார்கள் என்று தெரியவில்லை… எந்தனை முறை அந்த படம் பார்த்தாலும் நான் அந்த காட்சியை மெய் மறந்து ரசிப்பேன்…
நல்ல திரைக்கதைக்கும் நல்ல இசைக்கும் மேக்கிங் மற்றும் எடிட்டிங்க்கும் அந்த காட்சியை உதாரணமாக சொல்லுவேன்….

அக்காலத்தில் மிக பிரபலமாக பேசப்பட்ட திரைப்படம் அது…. ஹாரிசன் போர்டு அமெரிக்க ஜனாதிபதியாக நடித்து இருப்பார்.

நிஜத்தில் கிளின்டன் ஆட்சி செய்துக்கொண்டு இருந்த நேரம்..

கயவர்களால் அமெரிக்க ஜனாதிபதி அவரின் பிரித்யோக விமானமான ஏர்போர்ஸ் ஒன் இல் இருந்தே கடத்திப்பட்டு விடுவார்.

பல போராட்டங்களுக்கு பிறகு பிரசிடென்ட் மீட்களாம் என்று இருக்கும் போது அவரை ஒரு இராணுவ விமானத்தில் சென்று காப்பாற்ற வீரர்கள் முயற்சிக்கும் அதே வேளையில்… கீழே அமெரிக்காவின் பெருந்தலைகள் வட்ட மேஜை மாநாடு போட்டு உட்கார்ந்து கொண்டு நகம் கடித்துக்கொண்டு பிரசிடென்டுக்கு ஒன்றும் ஆக கூடாது என்று பிரார்த்திக்கொண்டு இருப்பார்கள்…. கூடவே பத்திரிக்கையாளர்களும் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு இருக்க….
ஏர்போர்ஸ் ஒன் விமானம் கடலில் விழும் நிலைக்கு செல்ல…. பிரசிடென்ட் காப்பாற்ற போகும் நேரத்தில் விமானம் கடலில் விழந்து விடும்… ஆனால் பிரசிடென்ட் இராணுவ விமானத்தில் இருந்து தொங்கும் கயிற்றில் தொங்கிக்கொண்டு இருப்பார்.
எர்போர்ஸ் ஒன் டவுன் என்று இராணுவ விமான காமான்டர் தரைக்கு தகவல் அனுப்பி விடுவார்…

புளுஸ்டார் ஏர்போர்ஸ் ஒன் இஸ் டவுன் ஐ ரிப்பீட் ஏர்போர்ஸ் ஒன் ஈஸ் டவுன்.

அதாவது பிரசிடென்ட் விமானம் கடலில் விழுந்து விட்டது…

கீழே இருந்து கேட்பார்கள்… அப்ப பிரசிடென்ட் எங்கே…?

பதில் சொல்ல முடியாது…?

காரணம் பிரசிடென்ட் கயிற்றில் தொற்றிக்கொண்டு, காற்றில் மிதந்துக்கொண்டு இருக்கின்றார்..

என்னத்தை சொல்வது…

முந்திரிக்கொட்டை போல அதிகாரபூர்வமற்ற தகவலோ அல்லது தேவையில்லாத பேச்சோ கூடவே கூடாது…

மெல்ல கயிற்றை விமானத்தை நோக்கி இழுத்துக்கொண்டு இருக்கின்றார்கள்… தரையில் இருந்து பதட்டத்துடன் பிரசிடென்ட் எங்கே எங்கே என்று தொன தொன என்று கேட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்…
எங்க தலைவரு எங்கடா? சொல்லிடா என்று எல்லாம் கேட்டு தலைவனுக்கு உழைக்கும் உண்மை தொண்டனாக எல்லாம் அங்கே சீன் காட்டிக்கொள்ள முடியாது… மூஞ்சியை பேத்து விடுவார்கள்..
ஒரு ஆள் அப்படியும் கேட்பார்….

லிமினிட்டி டூ யூ ஹேவ் பிரசிடென்ட்.

ஸ்டேன்ட் பை என்று சொல்லிவிட்டு

10 வினாடி மவுனம்…

பிரசிடென்ட் கயிற்றில் தொங்கி கொண்டு இருந்தவரை… இராணுவ வீரர்கள். காப்பாற்றி விட்டார்கள்…… இது சீன்….
நம்ம படமாக இருந்தால் …..

பிரசிடென்ட்டை காப்பாத்திட்டோம் ஓவர்……..

அவர் நலமா இருக்கார் ஓவர்…

உயிரை பணயம் வச்சி அவரை காப்பாத்திட்டோம் ஓவர் என்று இப்படித்தான் நம்முடைய ரிப்ளையாக படங்களில் இருக்க வாய்ப்புள்ளது…
ஆனால் அந்த படத்தில் …………
இராணுவ விமானி தகவலை படப்படப்போடு இருக்கும் பெரும் அமெரிக்க தலைகளுக்கு இப்படி மைக்கில் சொல்லுவார்….
பிரசிடென்ட் மீட்க பட்டதும்…
லிமினிட் போர் சேன்ஜிங் கால் சைன்…
லிமினிட்டி போர் நவ் ஏர்போர்ஸ் ஒன்………. என்று சொல்ல….

கீழே பெரும் தலைகளும், பத்திரக்கையாளர்களும் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பார்கள்…

படம் பார்க்கும் நமக்கும் கண்ணீர் முட்டும்…

பிரசிடென்ட் கேட்சிங்….

பிரசிடென்ட் ரெக்கவர்…..

பிரசிடென்ட் வித் அஸ் என்று எல்லாம் சொல்லாமல் இப்படி ஒரு டயலாக்கை ஏன் வைத்தார்கள்…????

இராணுவ விமானத்தில் பிரசிடென்ட் வந்த அடுத்த வினாடி அந்த விமானம் தற்போதைக்கு ஏர்போர்ஸ் ஒன் என்று அழைக்க வேண்டும் என்று சொல்வது.. பிரசிடென்ட் காப்பாற்ற பட்டுவிட்டார் என்பதை எவ்வளவு ஆழகாக சொல்லி இருக்கின்றார்கள்…
அதே போல பிரசிடென்ட் காப்பாற்று பட்டு விட்டார் வீரர்கள் எல்லாம் உணர்ச்சி வசப்பட்டு காலில் விழுந்து எல்லாம் வணங்காமல்…

எல்லா வீரர்களும் ராணுவ சல்யூட் அடித்து விட்டு…

மிஸ்டர் பிரசிடென்ட்… வெல்கம் டூ போர்ட் சார் என்று சல்யூட் அடிப்பார்கள்…

அது மட்டுமல்ல திடிர் என்று ஐந்து f16 ரக விமானங்களில் வந்து தற்காலிக ஏர்போர்ஸ் ஒன் ராணுவ விமானத்துக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்…

அதாவது காட்சி அடித்து விடுவதுதான் என்றாலும் பார்ப்பவன் நம்புவது போல காட்சிகள் அமைப்பதில் ஹாலிவுட்காரர்கள் கில்லாடிகள்….

நான் எப்போது இந்த படத்தை பார்த்தாலும் இந்த காட்சியை நான் பார்க்க தவறுவதேயில்லை…

நீங்களும் இந்த காட்சியை தவற விட்டு இருந்தால் திரும்ப ஒரு முறை பாருங்கள்…

நான் மிகவும் ரசித்த காட்சி…

 

 

 

https://youtube.com/watch?v=WhWEJ57IDGk%3Frel%3D0

https://youtube.com/watch?v=WhWEJ57IDGk%3Frel%3D0