Achcham Yenbathu Madamaiyada Teaser review

Acham-Enbathu-Madamaiyada-Movie-poster

 

கவுதம்மேனனின் காதல் படங்களில் மாஸ்டர் பீஸ்…. விண்ணைதாண்டி வருவாயா என்று சொல்லுவார்கள்…

ஆனால் என்னை பொறுத்தவரை அவருடைய மாஸ்டர் பீஸ் எதுவென்றால்… நீதானே பொன்வசந்தம்… அந்த படத்தில் இருக்கும் உணர்வுக்குவியல் வேறு எந்த படத்திலும் நான் கண்டதில்லை…

அதே போல…அந்த படம் பெரிய அளவில்
கொண்டாடபடவில்லை என்பதில் எனக்கு வருத்தமே…

ஆனால் விண்ணைதாண்டி வருவாயா? திரைப்படம் காதல் திரைப்படங்களில் மிகவும் சிறந்த படம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை என்றாலும் கவுதமின் மாஸ்டர் பீஸ் நீதானே என் பொன் வசந்தம்தான் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்துஇல்லை..

திரும்பவும்… கவுதம் சிம்பு ரகுமான் கூட்டனியோடு களம் இறங்கி இருக்கிறார். டீசர் அசத்துகிறது..யோவ் டீசருக்கு எல்லாம் ரிவியூவ் ஓவர் என்று முனக வேண்டாம்.. ஆனால் இந்த டீசர் குறித்து உங்களிடத்தில் பேச என்னிடத்தில் நிறைய விஷயம் இருக்கின்றது.. அதனால் அதை வீடியோவாக செய்து இருக்கிறேன்..

அவளும் நானும் அமுதும் தமிழும்….
அவளும் நானும் அலையும் கடலும்….
அந்த குரல் இயக்குனர் கவுதம்மேனடையது என்று யூகித்து இருக்கிறேன்.. சரியா?

யாராவது அப்படி பீல் பண்ணி இருக்கிங்களா.–???

ஆனால் திரும்ப திரும்ப அந்த கடைசி வரியை நூறு முறைக்கு மேல் கேட்டு கவுதம்தான் என்று முடிவு செய்து அவர் தான் பாடிஇருக்கின்றார் என்று பேசி இருக்கிறேன்..

பார்போம்…99 சதவிகதம் கவுதம்தான் பாடி இருக்கிறார் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.. அப்படி இல்லையென்றால் வீடியோவில் எடிட் செய்துக்கொள்ளலாம்…

போஸ்டர் அதுவும் அந்த புல்லட்… சான்சே இல்லை….

பட்..டீசர் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது நிஜம்

அச்சம் என்பது மடமையடா கலக்கல் டீசர்.

 

 

===========

 

 

அச்சம் என்பது மடமையடா டீசர் ரிவியூவ்.

 

https://youtu.be/XLoObaihUCk