Jippaa Jimikki tamil movie Press Meet

 

3

முன்னாள் பத்திரிக்கையாளர் ராஜசேகர்  எழுதி இயக்கும் திரைப்படம் ஜிப்பா ஜிமிக்கி… ஆண் பெண் குறீயிட்டை உணர்த்தும் விதமாக இந்த  தலைப்பை  வைத்து இருப்பதாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரவித்தார்…

மேலும் கன்னடத்தில்  திரைப்படங்களை தயாரித்து  அனுபவம் பெற்ற தயாரிப்பாளர்  திவாகர் அவர்களின் மகன்  கிரிஷிக் திவாகர்  ஜிப்பா ஜிமிக்கி திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகின்றார்… நாயகியா வட இந்தியாவை சேர்ந்த  குஷ்பு பிரசாத்  நாயகியாக அறிமுகமாகின்றார்..

மேலும் தயாரிப்பாளர் திவாகர் அவர்கள் பேசும் போது கன்னடத்தில் நிறைய திரைப்படங்கள் தயாரித்து  இருந்தாலும்… தன் மகன் தமிழ்  படத்தில் அறிமுகமாவதையே தான்  விரும்புவதாக தெரிவித்தார்.. மேலும் இந்த படத்தி ஆடுகளம்  நரேன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்..

படத்தின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது.. ஒளிப்பதிவாளராக சரவணநடராஜன் பணி புரிந்துள்ளார்.  இவர்  ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் உதவியாளர்  என்பது குறிப்பிடதக்கது.

மனதளவில் ஒத்துப்போகாத இரண்டு பேர்  பயணம் செய்யும் போது ஏற்படும் சுவையான நிகழ்வுகளே இந்த திரைப்படம் என்று இயக்குனர் ராஜசேகர் தெரிவித்தார்.