Maiem Tamil Movie Audio Launch

717

1

 

 

சினிமா சாத்தியப்பட வேண்டி  கோடம்பாக்க தெருக்களில் அனுதினமும் பலர்  தலையால் தண்ணி குடித்துக்கொண்டு இருக்கும் வேளையில்…

சென்னை எஸ்ஆர்எம் கல்லூரியில்  மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிக்கும் மாணவர்  அதித்தயா பாஸ்கரன் இயக்கி இருக்கும்  திரைப்படம் மய்யம்… இந்த திரைப்படத்தை ஸ்ரீதர் அவர்கள் தயாரித்துள்ளார்.

சினிமா ஷுட்டிங்கை  நேரில் பார்த்திராத… 12 பேர் இந்த திரைப்படத்தில் வேலை பார்த்து இருக்கின்றார்கள் என்பதோடு…  மணிரத்னமோடு  பணியாற்றிய ஜாம்பவான்களும் ஈகோ இல்லாமல் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றார்கள் என்பதையும் குறிப்பிட்டு சொல்ல   வேண்டும்…

ரொம்பவும் லோ பட்ஜெட் திரைப்படம்…

இந்த படத்துக்கு  முருகானந்தம் வசனம் எழுதி இருக்கிறார்.. முக்கிய பாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ளார்.

இந்த படத்தின்  பாடல்களை கமலஹாசன் கவுதமி  அவர்கள் ஆழ்வார்  பேட்டை இல்லத்தில் வெளியிட…மாணவர்கள் பங்கு பெற்ற இந்த திரைப்படத்தை கமல் வாழ்த்தி பேசினார்.. ஆழ்வார் பேட்டை இல்லத்தில் கால் பதித்தவர்கள் பிற்காலத்தில் பெரும் புகழ் பெற்றவர்கள் என்பதை குறிப்பிட்டு பேசினார்.

மய்யம் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு  பிரசாத் ஸ்டுடியோடிவில் நடைபெற்றது..

தயாரிப்பாளர் ஸ்ரீதர் சினிமா அரிச்சுவடி தெரிந்தவர் என்பதால்  மிக அழகாக  மாணவர்களிடம் வேலை  வாங்கியுள்ளார்..

2

கடந்த வருடம் எஸ்எல்ஆர் கேமராவில் பொதுமக்களிடமும் போலிசிடமும் திட்டு வாங்கி கொண்டு படம் எடுத்த என்னை இந்த அளவுக்கு வாய்ப்பு கொடுத்து என் திறமையை கண்டுஉணர்ந்த ஸ்ரீதர் அவர்களுக்கு இயக்குனர் ஆதித்தயா பாஸ்கரன்  நன்றி தெரிவித்தார்.

 

 

 

Previous articleActress Shruthi Reddy New Photoshoot Images
Next articleJippaa Jimikki tamil movie Press Meet