பாகுபலி இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்துக்கொண்டு இருப்பது பெரிய விஷயமே இல்லை.. ஆனால் தமிழ் நாட்டில் பாகுபலி ரிலிஸ் அன்று ஒரு பெரிய மாஸ் நடிகருக்கு கிடைக்க வேண்டிய ஓப்பனிங்கை பாகுபலி படத்துக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்தது சினிமாக்காரர்களையே ஆச்சர்யத்தில் வாய் பிளக்க வைத்தது என்றால் அது மிகையில்லை…
இப்போதைக்கு பாகுபலியும் பாபநாசமும் பேமிலி ஆடியன்ஸ்களால் திரையரங்குகள் நிரம்பி வழிகின்றன…பாகுபலி தமிழில் வெற்றி பெற்றதற்கான நன்றி தெரிவிக்கும் கூட்டம் நேற்று சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது.,… விழாவில் பிரபாஸ் மற்றும் ரம்யா கிருஷ்ணன் கலந்துக்கொண்டு சிறப்பித்தார்கள்…. இயக்குனர் ராஜமவுலி வரவில்லை.. காரணம் மூன்று வருட காலம் இந்த படத்தோடு பட்ட அவஸ்த்தைக்கு ரிலாக்சாக…குடும்பத்தோடு வெளிநாட்டுக்கு கிளம்பி விட்டதாக கேள்வி..
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா… பாகுபலி திரைப்படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
பிரபாஸ் பேசுகையில் இப்படியான ஓப்பனிங் கொடுத்து சக்சஸ் அடைய செய்த தமிழ் ரசிகர்களுக்குட்ம பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்…
மேலும் பிரபாஸ் பாகுபலி இரண்டாம் பாகம் கண்டிப்பாக 2016 இல் வெளிவரும் என்றும், 40 சதவிகித படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளதாக பத்திரக்கையாளர்கள் கேள்விக்கு பதில் சொன்னார்… அது மட்டுமல்ல.. சத்யராஜ் போன்ற சீனியர் ஆர்ட்டிஸ்ட்… தன் காலை தலையில் வைத்து நடித்து கொடுத்தது எல்லாம் உடம்பையே சிலிர்க்க செய்த செயல் என்றதோடு… தமன்னா உங்களை டார்லிங் என்று அழைப்பதன் நோக்கம் என்ன என்று ஒரு பத்திரிக்கையாளர் வினவ…
ஆந்திராவில் ஆண் பெண் எல்லோரும் என்னை செல்லமாக டார்லிங் என்றுதான் அழைப்பார்கள் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.. அதே போல பாகுபலி முடிந்தவுடன் தன் திருமணம் என்பதும் வதந்தியே என்று தன் பேச்சுனுடே தெரிவித்தார்…