Baagupali Movie (2015) review | பாகுபலி திரைவிமர்சனம்

baahubali

இந்திய சினிமாவின் பிரமாண்டம் என்ற அடை மொழி…. மூன்று வருடகால தவம்.. 250 கோடிக்கு மேல் ஏப்பம் விட்டு கிடக்கும் திரைப்படம்… அப்படி என்றால் அந்த படத்தை எப்பை சோப்பையாகவா எடுக்க முடியுமா??? அதே போல மொக்கையாகவா அந்த படத்துக்கு விளம்பரம் செய்வது??? அதனால் பாகுபலி படத்துக்கான விளம்பரம் அதிகம் என்றால் அது மிகையில்லை.. அதே போல பாகுபலி படக்குழுவினர் மிக அழகாக ரசிகர்களுக்கு டெம்ட் ஏற்றினார்கள் என்றே சொல்ல வேண்டும்… இந்த அளவுக்கு பிராண்டிங் செய்ததே இந்த படம் எந்த மாதிரி எதிர்வினை ஆற்றினாலும் படம் ஓடி விட வேண்டும் என்ற ஒரு கார்பரேட் கால்குலேஷன்தான்…

ராஜமவுலிக்கு செக்கு எது சிவலிங்கம் எது என்று கணிக்க முடிகின்றது.. காரணம் சில வருடகாலம் எடிட்டிங் டேபிளில் வயிற்று பிழைப்புக்கு தவம் இருந்து இருக்கின்றார்…. அதனால் எந்த இடத்தில் ரசிகனை கட்டிபோட வேண்டும் என்று தெரிகின்றது..

அதனால்தான் ஹாட்ரிக் வெற்றி சாத்தியமாகி இருக்கின்றது.

பாகுபலி போன்ற பிரமாண்ட புராஜெக்ட்டை கையில் எடுக்கும் போது அவரிடம் இரண்டு கேள்விகள் முன் வந்து இருக்க வேண்டும்… வித்தியாசமான கதையா? அல்லது இந்திய மனங்களில் ஆழ பதிந்து இருக்கும் கதையா?? புதிய கதையை சட்டென கிரகித்து கொள்ள முடியாது…மன ஆழத்தில் பதிந்த கதை என்றால் பிரச்சனை ஏதும்இல்லை…இன்னும் சொல்லபோனால் படம் இன்னும் மக்களுக்கு நெருக்கமாக இருக்கும்..

சரி பிரமாண்ட எபிக் திரைக்கதை என்றால் ?? உதாரணத்துக்கு மகாபாரதம்…. என்னதான் பிரமாண்டமாக ராஜமவுலி எடுத்தாலும் டிடி தொலைகாட்சியில் கழுவி கழுவி ஊற்றிய கதை… அதனால் கொஞ்சம் மகாபாரதத்தை நகாசு செய்து பாகுபலி என்ற கற்பனை எபிக் கதையை கையில் எடுத்துக்கொண்டார்..… அதனால் சேப்ட்டியாக தப்பித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

தமிழில் ராவணன் திரைப்படம் என்னவாகியது என்பது எல்லோருக்கும் தெரியும்.. ஆனால் தளபதி ஓடியது… கொஞ்சம் மகாபாராத சாயல் என்றாலும்… பெரிய ஸ்டார் காஸ்ட்.. ஆனால் ராவணன் ஐஸ்வர்யா தவிர்த்து பெரிய ஸ்டார் காஸ்ட் இல்லை… தெரிந்த கதை… என்பதால் பெரிய சுவாரஸ்யம் இல்லை… ஆனால் தளபதியில் ரஜினியை எந்த அளவுக்கு வேலை வாங்கி இருக்கின்றார் பிரேமுக்கு பிரேம் பார்த்து ரசிக்க ரசிகர்கள் இருந்தார்கள் ரசித்தார்கள்…ஆனால் விக்ரமுக்கு அப்படியான ரசிக ஜனங்கள் இல்லை…

அது போன்ற பிரச்சனை தன்படத்துக்கு வந்து விடக்கூடாதுஎன்பதில் உறுதியாக இருந்தார்… அதனால் சின்னதாக மகாபாரதத்தை நகாசு செய்து பாகுபலி என்ற கற்பனை கதையாக்கி விட்டார்… வித்தியாசம் செய்கின்றேன் என்று ராஜமவுலி நினைத்து இருந்தால் மண்ணை கவ்வி இருப்பார்… வித்தியாசமான படம் வேண்டும் என்று கேட்கும் நம்மவர்கள் வித்தியாசமான கதைகளன் உள்ள படத்தை பெரிய அளவுக்கு வெற்றி பெற வைத்ததில்லை..
அதனால் ராஜமவுலி சேப்ட்டியாக டிராவல் செய்து இருக்கார் என்றே சொல்ல வேண்டும்…

பிரபாஸ் மூன்று வருடத்தை படத்துக்கு கொடுத்ததோடு ராஜமவுலி சொன்னதை எல்லாம் செய்து இருக்கின்றார்.
அனுஷ்கா முதல் பாகத்தில் அவரை பார்க்கும் போதே பாவமாக இருக்கின்றது… இரண்டம் பாகத்தில் அசத்துவார் என்று நினைக்கின்றேன். அதில் அனுஷ்கா ரசிக கண்மணிகளை திருப்தி படுத்த வேண்டும் இல்லை என்றால் அவர்கள் சாபம் சும்மா விடாது..

தமன்னா சான்சே இல்லை… தேவதை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்… கத்தி சண்டை காட்சியில் நன்றாக நடிக்கவும் செய்து இருக்கின்றார்..முறுக்கி ஏறி ஓடும் அந்த ஓட்டம் டெடிகேஷன்.

ரானா டகுபதி… தன் வலிமையான உடலால் அசத்துகின்றார்..

நாசர் சகுனி வேடத்தில் வழக்கம் போல கலக்கல்..

.ரம்யா கிருஷ்ணன்.. சான்சே இல்லை என்ன பாடி லாவேஜ்…??? முதல் காட்சியில் முக்கிய கேரக்டரை தாங்கி பிடிக்கும் கம்பீரம்.

ரோகினியும் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளார்.. சத்யராஜ் திரைப்பட வரிசையில் அற்புதமான படம் பாகுபலி… மனிதர் பின்னுகின்றார்… அதுவும் பிரபாஸ் காலை தலையில் வைத்து தன்னுடைய விசுவாசத்தை காண்பிக்கும் காட்சியில் அருமையான நடிப்பு…

கீரவாணி இசையில் இரண்டு பாடல்கள் ஓகே ரகம்..

செந்தில்குமார் உழைப்பு பிரேமுக்கு பிரேம் ஒளிப்பதிவில் தெரிகின்றது..

எடிட்டர் வெங்கடேசராவ் போர் காட்சியில் அந்த 20 நிமிடத்தில் தன் திறமையை வெளிப்படுத்தி இருக்கின்றார்..

படத்தில் பிளஸ்கள்…

தமன்னா பிரபாஸ் காதல் போர்ஷன் அதன் பின்னனியில் அருவி… அசத்து ரகம்.. கிளிப்ஆங்க்ர், எம்ஐ2 என நிறைய ஆங்கில பட காட்சிகளை நினைவுபடுத்துகின்றன… பிரபாஸ் முதல் பாதியில் தன் புஜபலத்தை காட்டுகின்றார்..சுற்றிலும் அம்பால் அடிக்க கத்தியால் ஸ்டைலாக அனைத்து அம்புகளையும் துவம்சம் செய்வது ஸ்டைலோ ஸ்டைல்..

கடைசி 20 நிமிட போர்காட்சிகள் இந்திய சினிமாவுக்கு புதுசு.. அது பெரிய அளவில் பேசப்படும்.
maxresdefault

படத்தின் மைனஸ்கள்…

படத்தில் இடைவேளைக்கு பிறகு வரும் குத்து பாடல்… லலிலதா ஜூவல்லரி விளம்பரத்துல வரும் சப்பை தேக மாடல்களை அழைத்து வந்து ஆடவிட்டு இருக்கின்றார்… கொஞ்சமும் ஒட்டவில்லை..
அதே போல கிளைமாக்ஸ்…. திடுதிப்பென்று முடிந்து போனதால்… படத்தை பார்க்கும் அத்தனை பேரும் சல சலக்கின்றார்கள் என்பது நிஜம்… இரண்டு பாகம் என்று தெரிந்தவர்கள் மனநிலையில் ஓகே என்றாலும் புதியதாய் படம் பார்ப்பவன்…பாடு திண்டாட்டம்தான்..

ஆனால் திருப்பதில் அடுத்த எனது யூடியூப் வீடியோ காட்சிகளை தியேட்டருக்கு வெளியே எடிட் செய்துக்கொண்டு இருக்கும் போது படம் ஆரம்பித்ததில் இருந்து முடிவுவரை கரகோஷம் விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது..

அதே போல தெலுங்கு மீடியாக்கன் நிறைய தமிழ நடிகர்களை பயண்படுத்தியாதல் கோவத்தில் படத்தை அதீதத்துக்கு நக்கல் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

அதுக்கு பன்னீர் புஷ்பங்கள் சுரேஷ் தூபம் போட்டதும் ஒரு காரணம்.,..

====
படத்தின் டிரைலர்…

=======
படக்குழுவினர் விபரம்.

directed by S. S. Rajamouli
Produced by Shobu Yarlagadda
Prasad Devineni
Screenplay by S. S. Rajamouli
Story by V. Vijayendra Prasad
Starring Prabhas
Rana Daggubati
Tamannaah
Anushka Shetty
Ramya Krishnan
Sathyaraj
Sudeep
Adivi Sesh
Nassar
Prabhakar
Music by M. M. Keeravani
Cinematography K. K. Senthil Kumar
Edited by Kotagiri Venkateswara Rao
Production
company
Arka Media Works
Distributed by Telugu:
Arka Media Works
Tamil:
Studio Green
UV Creations
Hindi:
Dharma Productions
Malayalam:
Global United Media
Release dates
Part I
10 July 2015
Running time
159 Minutes (Part 1)
Country India
Language Telugu
Tamil
Budget ₹250 crore
==

====
பைனல் கிக்.
ஒரு முறை கண்டிப்பாக பாகுபலியை திரையில் குடும்பத்தோடு கண்டு ரசிக்கலாம்.. காரணம் ஹாலிவுட்டில் எல்லாம் அவதார் மிக பெரிய பட்ஜெட் ஆனால் இந்திய அளவில் இப்படியான முயற்சியை கண்டு அதனை வரவேற்கவேண்டும்….மூன்று வருஷம் படம் எடுத்து இருக்கானாம்… என்ன கிழிச்சி இருக்கான் என்ற வெறியோடு காலிசெய்கின்றேன் என்ற மன நிலையில் பார்த்தால் பாகுபலி குப்பை படம்தான்.. நிறைய பேர் ராஜமவுலி பெரிய மயிரா என்ற ரீதியில் படத்தை விமர்சிக்கின்றார்கள்… தப்பில்லை… அவர்கள் விருப்பத்தை சொல்ல முழு உரிமை இருக்கின்றது…ஆனால் சிலர் விமர்சனத்தை படிக்கும் போது காழ்புணர்ச்சி எழுத்தில் தெரிகின்றது.. இந்த படம் பிடிக்கவில்லை என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை… என்று சொல்ல முழு உரிமையும் இருக்கின்றது. ஆனால் ராஜமவுலி வேஸ்ட் என்ற ரீதியில் வரும் விமர்சகர்களை காணும் போது அவர்கள் நோக்கம் புரிகின்றது..

கண்டிப்பாக பாகுபலி பார்க்கவேண்டிய திரைப்படம்.

இந்த படத்தை திருப்பதியில் போய் பார்த்தேன்.,. காரணம் அவர்கள் சொந்த மண்ணில் இந்த படத்துக்கு எப்படி ஒரு வரவேற்பு இருக்கும்..?? எந்த அளவுக்கு அந்த படத்தை கொண்டாடுவார்கள் என்று பார்க்கும் ஆவலில் திருப்பதியில் ஜெய்ஷாம் தியேட்டரில் பார்த்தேன் திருப்பதியில் மட்டும் 12 தியேட்டர்களில் ஓடுகின்றது…
படம் பார்க்க போகும் முன்…

பார்க்க போன பயண அனுபவ வீடியோ பதிவு கீழே….. வீடியோ பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்….

வழக்கம் போல படத்தின் வீடியோ விமர்சனம்.

==

திருப்பதியில் முதல் நாள் ரசிகர்களின் கொண்டாட்ட வீடியோவை காண…