ஏசி ரூமில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு இசையமைப்பாளரை… தரை டிக்கெட்டு ரேஞ்சுக்கு இறக்கி ஆட விட்டு இருக்கின்றார்கள்..
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் போதாது… இறங்கி உஷ்னத்தோடு வெட்கம் மறந்து ஆடவேண்டும்..
ஜிவி பிரகாஷ் ஆடி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்…
எனக்கு தெரிந்து சமீபத்தில் வந்த கலர் புல்லான டிரைலர்… திரிஷா இல்லைன்னா நயன்தாரா டிரைலர்தான்..
தெலுங்கு படத்துக்கே சவால் விடும் வகையில் பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்… சான்சே இல்லை…
‘ படத்தில் ஆர்ட் டிப்பார்ட்மென்ட்டை பிரித்து மேயவிட்டு இருக்கின்றார்கள்..
என் முத்தத்தை திருப்பிக்கொடுடி…
என் கழுத்துல கொடுத்த முத்தத்தை திருப்பிக்கொடுடி என்று சொன்னதும் செருப்பு வந்து விழ சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு ஜிவி பிரகாஷ் என் முத்தத்தை திருப்பிக்கொடுத்துட்டா என்று சொல்லும் போது அவரை பிடித்து விடுகின்றது…
ஆனந்தி நடனத்தில் செம குத்து குத்துகின்றார். அதுக்காகவே முதல் நாள் படம் பார்க்க உத்தேசம்.. மனிஷாயாதவ் குண்டடித்து செக்சியாக இருக்கின்றார்
லிப்லாக் சீனுக்கு 34 டேக்காம்…
போங்கய்யா… போங்க வயித்தெறிச்சலை கிளப்பிக்கிட்டு அடுத்த ஜென்மத்திலாவது இசையமைப்பாளாரா பொறக்கனும்…
டிரைலர் அசத்தியவர்கள்..
மெயின் பிக்சரிலும் அசத்த ஜாக்கிசினிமாஸ் சார்பாக வாழ்த்துகள்.
ஜாக்கிசேகர்
ஜாக்கிசினிமாஸ்