காமெடி பேய் படங்கள் கல்லா கட்டிக்கொண்டுஇருக்கும் வேளையில் முழுக்க முழக்க திரில்லர் ஜானரில் வெளிவந்து இருக்கும் திரைப்படம்தான் டிமான்டி காலனி…
டிமான்டி காலனி என்பது சென்னை ஆழ்வார் பேட்டையில் இன்றளவும் இருக்கும் காலனி….வெள்ளைகாரன் காலத்தில் இருந்தே இந்த காலனியில் பேய்கள் ஊலாவுதாக யாரோ கொளுத்தி போட… இயக்குனர் அஜய்ஞானம் படம் எடுக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது..
====
டிமான்டி காலனி திரைப்படத்தின் கதை என்ன??
நான்கு பேர் கஞ்சிக்கு லாட்ரி அடித்துக்கொண்டு பட்டினபாக்கம் அவுசிங் போர்டில் காலம் தள்ளி வருகின்றனர்… நால்வரில் யாருக்கு பணக்கஷ்டம் என்றாலும் அருள்நிதி நிதி கொடுத்து உதவுவார்.. அவருக்கு எப்படி நிதி வருகின்றது என்பதை படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்…
ஒரு நாள் மழை இரவில் போதையில் .. திரில்லாக எதாவது செய்ய வேண்டும் என்று நண்பர்கள் பேச அந்த கூட்டத்தில் இருக்கும் எதிர்கால சினிமா இயக்குனர்… நான் ஒரு பேய் படத்துக்கு ஸ்கிரிப்ட் பண்ணும் போது டிமார்ட்டி காலனி பத்தி கேள்வி பட்டு இருக்கேன்… அங்க இருக்கற‘ பங்களாவுக்கு நாம் இப்ப போலாம் என்று போகின்றார்கள்.. பயந்து சாகின்றார்கள்… படம் பார்க்கும் நாமும்.. தான் ஆனால் அந்த பங்களாவுக்கு போய் வந்ததில் இருந்து நால்வருடைய வாழ்க்கையிலும் பெரிய பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள் அது என்ன என்பதை தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.
=======
நடிப்பில் வம்சத்தில் கவனிக்கப்பட்டு, மவுனகுருவில் மெருகு ஏறி, இந்த படத்தில் இன்னும் நிறைய மெருகு ஏறி இருக்கின்றார்… பார்ன் இன் சில்வர் ஸ்பூன் ஆர்ட்டிஸ்ட் அருள் நிதி… ஆனாலும் அவரை அமெச்சூர் தனம் இல்லாமல் நடிக்க வைத்து இருக்கின்றார்கள்…
சூது கவ்வும் ரமேஷ் திலக் வழக்கம் போல நடித்து இருக்கின்றார்.. கொஞ்சம் கிச்சி கிச்சி மூட்டுகின்றார்கள்.. அதுவும் அந்த பன்னி மூஞ்சி வாயன் ஒரு சீன்ல வந்தாலும் சிரிப்பையும் நிதர்சனத்தையும் புட்டு புட்டு வைத்து இருக்கின்றார்கள்..
பொதுவாக பேய் படம் என்றால் அந்த பேயின் பிளாஷ் பேக்கில் ஒரு வருத்தம் தோய்ந்த கதை இருக்கும் பேய் பழிவாங்கும் போது அது சரி என்று என்ன தோன்றும் இந்த படத்தில் அது இல்லை அதுதான் என்னை பொருத்தவரை இந்த படத்தின் மைனஸ்..
அதுமட்டுமல்ல… படத்தின் இளைவேளைக்கு பிறகு ஒரே அறையில் இருக்கும் திரைக்கதை தொய்வை அளித்தாலும்… சின்ன சின்ன டுவிஸ்ட்டுகள்.. படத்தை நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைக்கின்றன..
படத்துக்கு ஒளிப்பதிவு அரவிந் சிங்… இவர் சந்தோஷ் சிவனின் உதவியாளர்..பட்டினபாக்கத்தை பாரின் போல காட்டி இருக்கின்றார்…
முக்கியமான லைட் அவுஸ் மீது எடுத்து இருக்கும் ஏரியல் வீயூவ் அசத்தல்…
கெபா ஜெராமியின் இசை பயமுறுத்துகின்றது…
=======
படத்தின் டிரைலர்…
==
படக்குழுவினர் விபரம்.
Directed by R.Ajay Gnanamuthu
Produced by M.K.Tamilarasu
Written by R.Ajay Gnanamuthu
Starring Arulnithi
Music by Keba Jeremiah
Cinematography Aravinnd Singh
Edited by Bhuvan Srinivasan
Production
company
Sri Thenandal Films
Mohana Movies
Release dates
22 May 2015
Country India
====
பைன்ல் கிக்.
டிமான்டி காலனி திரைப்படத்தை நிச்சயம் திகில் விருப்பிகள் கண்டிப்பாக கண்டு ரசிக்கலாம்… பிளாஷ் பேக்கின் ஆழம் மற்றும் இன்டர்வல்லுக்குபிறகான ஒரே அறை போன்றவை… தொய்வை எற்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை…
கண்டிப்பாக டைம் பாஸ் திரைப்படமாக இந்த திரைப்படத்தை கண்டு களிக்கலாம்.
=======
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஆறு
========
ஜாக்கிசேகர்.
ஜாக்கிசினிமாஸ்
22/05/2015