A HARD DAY-2014- KOREAN MOVIE REVIEW|கடினமான தினம்/உலகசினமா/ தென் கொரியா

Cover_-_A_Hard_Day

எந்த நாள் எல்லாம் நம்மை பொருத்தவரை கடினமான நாள்..?

காலையில் பிரஷ் பண்ணும் போதே திடிர்ன்னு வாயிலை குத்திக்கிறது… அதுவும் ஹார்ட் டேதான்.

குளிக்கும் போது டவல் எடுத்துக்காம போயி… பொண்டாடிக்கிட்ட டவல் கேட்டு அதுக்கு திட்டு வாங்கி டவல் வாங்கறது… அதுவும் ஹார்ட் டேதான்.

வெயில்காலத்துல கொடியில காய வச்ச ஜட்டியை ஏதோ ஒரு நியாபகத்துல உதறாம போட்டுக்கிட்டு போயிட்டு வரேன்னு சொல்லிட்டு இரண்டு படி இறங்கும் போது ஜட்டி எறும்புங்க கண்ட இடத்துல கடிச்சி வைக்க… அவசர அவசர டிரஸ்சை அவுத்து போட்டு அதுங்க கிட்ட மல்லுக்கட்டினா அது ஹார்ட் டே.,..
காலையில டிபனை வாயில வைக்கும் போதே கடன் கொடுத்தவன் போன் செஞ்சான்னா அன்னைக்கு புல்லா ஹார்ட் டேதான்.
பைக் ஸ்டார் பண்ணும் போது கிக்கர் திரும்ப வந்து காலை பேத்துச்சின்னா அதுவும் ஹார்ட் டேதான்.

பத்து நிமிஷத்துல ஆபிஸ் போயிடலாம்ன்னு நினைக்கும் போது போலிஸ் ஹெல்மெட்டுக்கு பிடிச்சா அதுவும் ஹார்ட் டேதான்.
உயிரை கொடுத்து வேலை செஞ்ச நாளுக்கு கையெழுத்து போடும் போது பார்த்தா ஹெச் ஆர் சனியன் காம் ஆபை கட் பண்ணி தொலைச்சி இருக்கும்… அதை பார்த்தலே பத்திக்கிட்டு வரும் அதுவும் ஹார்ட் டேதான்.

லேட்ட வந்ததோடு நம்மகிட்டதான் தப்புன்னு காலையில லவ்வர் சண்டை போட்டா…. அதுவும் ஹார்ட் டேதான்.

உசார் பண்ணி கிஸ் அடிக்கும் போது அந்த நேரம் பார்த்து கதவை தட்டுனா ஹார்ட் டேதான்.
இவ்வளவு ஏன்…
பாத்ரூம் போயிட்டு சரக்குன்னு ஜிப்பை இழுக்கும் போது ஜிஜ் ஜிலிப்பா சிக்கிடுச்சின்னா… அதுவும் ஹார்ட் டேதான்.

கடினமான நாள்ன்னு சில நாட்களை நாம் சந்தித்து இருப்போம்.. எல்லாமே தப்பா நடக்கும்… இந்த உலகமே நமக்கு எதிரா சதி பண்ணுறது போல தோனும்…
ங்கோத்தா யார் முகத்துல டா முழிச்சோம்ன்னு நம்மளையும்… முட்டாள் போல யோசிக்க வைச்சிடும்…
இந்த கொரிய படமும் அப்படித்தான்.,…
7-janvier-2015-11
=======
தென் கொரியாவுல போலிஸ் வேலை செய்யறான் ஹீரோ… அவுங்க… அம்மா செத்து போயிட்டதா தகவல் வருது…
பதட்டத்துல வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கான்… ஒரு சனியன் புடிச்சவன் காருல வந்து விழுந்து அப்படியே பரலோகம் போயிட்டான்…
இங்கேயே பாடியை விட்டு விட்டு போனா கண்டிப்பா சிக்கிக்குவோம்ன்னு பாடியை கார் டிக்கியில எடுத்துகிட்டு போய் அம்மா சவப்பெட்டியில வச்சி பொதைச்சிடுறான்….
ஆனால் அவன் தேடப்படும்ட குற்றவாளி… உயரோடு பினமாகவோ கொண்டு வந்த பிரைஸ் தாரோம்ன்னு சொல்றாங்க.. சரி நிம்மதியா இருக்காலாம்ன்னு பார்த்தா…
ஒரு போன் வருது செத்து போனவன் எனக்கு வேணும்.. அதுவும் உயிரோட வேணும்ன்னு ….
திருடனுக்கு தேள் கொட்டியது போல இல்லை..
அந்த போலிஸ்காரன் என்ன செய்யபோறான் என்பதுதான் கதை.

======
அருமையான திரைக்கதை…
ஒருத்தனை நேரம் எப்படி எல்லாம் வாட்டி வதைக்குமோ அந்தளவுக்கு வாட்டி வதைப்பது போலவும்… அடி மேல்அடி படுவமு போல செய்திகள் ஹீரோவை தாக்குவது நம்மையே தாக்குவது போல திரைக்கதை அமைத்து இருக்கின்றார்கள்.
Lee Sun-kyun படத்தின் அடிமேல்அடி வாங்கும் நாயகன் பாத்திரம்… முதல்ல கொரியாவுல தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டா அறிமுகம்… அப்படியே படிபடிப்படியா வளர்ந்து துண்டு துக்கடா கேரக்டர்ல எல்லாம் நடிச்சி…. அப்படியே நடிகராயிட்டார்.. Lee Sun-kyun
Lee Sun-kyun சான்சே இல்லை.. அந்த பதட்டம் உடல் மொழி படத்தின் பலம்.. ஒரு சின்ன சீன்ல சொதப்பிட்டா கூட மொத்த படமும் வீணாகி போய் இருக்கும்…

பொணத்தை அம்மாவோட சவப்பெட்டிக்குள்ள வைக்கறதுக்குள்ள அவன் படுற அவஸ்த்தை சான்சே இல்லை..

எல்லாத்தையும் விட ரொம்ப அற்புதம்… வில்லனாக நடித்தவன்… போலிஸ் டிப்பார்ட்மென்ட் உள்ளேயே வந்து ஏன் போன் எடுக்கவில்லை என்று நாயகனை பளீர் பளீர் என்று பொலக்காட்டு காட்டும் இடத்தில் அசத்தி இருக்கின்றார்.
==========

படத்தின் டிரைலர்.

=====

படக்குழுவினர் விபரம்.

Directed by Kim Seong-hun
Produced by Cha Ji-hyeon
Jang Won-seok
Written by Kim Seong-hun
Starring Lee Sun-kyun
Cho Jin-woong
Music by Mok Young-jin
Cinematography Kim Tae-seong
Edited by Kim Chang-ju
Production
company
AD406
Dasepo Club
Distributed by Showbox/Mediaplex
Release dates
May 18, 2014 (Cannes)
May 29, 2014 (South Korea)
Running time
111 minutes
Country South Korea
Language Korean

=========
பைனல் கிக்.
இதுதான் கிளைமாக்ஸ் என்று நினைக்கும் போது இது கிளைமாக்ஸ் இல்லை என்பதோடு… படத்தில் வரும் ரியல் கிளைமாக்ஸ்… சான்சே இல்லை… இந்த கிளைமாக்ஸ் ஷாட்டுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படலாம் என்று நினைத்தால் நீயும் என் நண்பனே.. பட் கிளைமாக்ஸ் ரொம்ப அருமையான ஷாட்டுல எடுத்து இருப்பாங்க… சின்ன பேக் வச்சிக்கிட்டு அவன் கேட்கறதும்…
அந்த பிரவேட் பேங்க் ஓனர் அவனை ஒரு மாதிரியா பார்க்கறதும் யப்பா சான்சேஇல்லை. பர்ஸ்ட் கிளாஸ் கிளைமாக்ஸ்.
கண்டிப்பாக பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.. நிறைய உலக திரைப்பட விழாக்களில் கலந்துக்கொண்டு பல விருதுகளையும் வெற்றியையும் பெற்றுள்ளது.

படம் கடந்த வருடம் இதே மே மாதம் தென் கொரியாவில் ரிலிஸ் ஆகி செம போடு போட்டது குறிப்பிடதக்கது. அக்ஷன் கிரைம் திரில்லர் ரசிகர்கள் டோன்ட் மிஸ் இட்.
=======
படத்தோட ரேட்டிங்..
பத்துக்கு ஏழு…
========
ஜாக்கிசேகர்.
21/05/2015

download