1998 ஆம் ஆண்டு…
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள…. மலையில் இருக்கும் ஹயக்கீரிவர் சன்னதியின் கிழக்கு பக்கம் இருக்கும் வாயில் படியில் வைத்து,ஓகே உன்னை நான் கல்யாணம் செய்துக்கொள்கின்றேன் என்று அவளிடத்தில் சொன்னேன்…
இந்த வார்த்தையை சொல்ல சில மாதங்கள் எடுத்துக்கொண்டேன்…. காரணம்… நிறைய யோசித்தேன்….பிளஸ் மைனஸ்,… சரி வருமா வராதா? எல்லாம் யோசித்து பார்த்து அதன் பிறகே சொன்னேன்…
நான் சொன்ன ….அன்றே எங்கள் திருமணம் முடிந்து விட்டது…
அதன் பிறகு பத்து வருடம் கழித்து திருமணம் ….
திருமணத்துக்கு முன் ஒன்றரை வருடம் லிவிங் டூ கெதர் வாழ்க்கை…
சமுக அங்கீகாரத்துக்குதான் கல்யாணம், தாலி, வீடியோ, போட்டோ, பதிவு திருமணம் எல்லாம்.
வீட்டுக்கு தெரியாமல் முதல்முதலாக நாங்கள் சென்ற சினிமா அலைபாயுதே… உதயம்.. சந்திரன் தியேட்டரில்… வியர்த்து வழிய… வெதுக்கலோடு பார்த்த திரைப்படம்.. பயந்து பயந்து பார்த்த படம்…..
15 வருடம் கழித்து மணி இயக்கத்தில் ஓ காதல் கண்மணி…
இப்போது எங்களோடு யாழினியும்….
என் காதலை திரையில் பார்த்தது போல இருந்தது…
ஆயுத எழுத்து திரைப்படத்தில் சித்தார்த் திரிஷா போர்ஷன் சான்சே இல்லை… அதே பார்ட்டை ஒரு இரண்டு மணி நேர திரைப்படமாக மாற்றி விட்டார் மணி…. அள்ள அள்ள குறையாத காதலுடன்…
==
ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் கதை என்ன?
வேவ்வேறு இலக்கு கொண்ட ஆண் பெண் நண்பர்கள்… ஒன்றாய் சிலகாலம் லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் சேர்ந்து வாழலாம் என்று எண்ணுகின்றார்கள்… ஆனால் அப்படியான வாழ்க்கை சரியா தவறா? அவர்கள் இலக்கை எப்படி அடைந்தார்கள் என்பதுதான் ஓ காதல் கண்மணி படத்தின் கதை…
=======
மணி ரத்னம் மற்றும்… மற்றும் ஓகாதல் கண்மணி படம் பற்றி சற்று விரிவான அலசல்…
மணிரத்னமே ஆனாலும்… படம் நல்லா இல்லை என்றால் நல்லா இல்லை என்றுதான் சொல்லுவார்கள்… கடல், இராவணன் எல்லாம்…படுதோல்வி படங்கள்…
ஆனால் ஓ காதல் கண்மணி அப்படியில்லை….
என்னை பொருத்தவரை தமிழ்சினிமாவின் ரசனையை அக்னி நட்சத்திரம் படத்தில் இருந்தே மடை மாற்றி விட்டவர் மணிரத்னம்…
மணிரத்னம் ஒரு போதும் கற்பு என்ற விஷயத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியதே இல்லை எனலாம்…
இல்லை என்றால் 1987 இல் நாயகன் படத்தில் விபச்சார விடுதியில் இருக்கும் சரண்யாவை கணக்கு பாடம் படிக்க வைத்து விட்டு யாரையாவது கல்யாணம் செய்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் போது விபச்சாரவிடுதியில் இருக்கும் சரண்யாவை.. நெற்றியில் பொட்டு வைத்து தாலி காட்டுவார்… அந்த தாலியை கையோடு ஏந்தி விபச்சாரியான தனக்கு வாழ்க்கை கொடுத்தவனை பார்த்து கண்ணீர் நீர் மல்க கட்டிப்பிடிப்பார்.. நீ ஒரு காதல் சங்கீதம் பாடல் வரும்….
தளபதி படத்தில் சின்ன வயதில் தெரிந்தோ தெரியாமலோ பருவ வயதில் தப்பு செய்த மனைவி ஸ்ரீவித்யாவை அப்படியே ஏற்றுக்கொள்வார் ஜெய் சங்கர்.… நீ ஊர் மேஞ்சிட்டு வந்தவதாண்டின்னு ஒரு நாளும் குத்திக் காண்பிக்கமாட்டார்… ரஜினியை தன் மகனாகவே பாவிப்பார்..
அவ்வளவு ஏன் விதவை பானுப்பிரியாவை குழந்தையோடு திருமணம் செய்துக்கொள்வார்….
அதே போல அவர் தயாரிப்பில் வெளியான சத்ரியன் படத்தில் கூட ரெயிலில் கற்பழிக்கப்பட்ட ரேவதியை விஜயகாந்த் திருமணம் செய்துக்கொள்வார்…
ஆண் மட்டும் எல்லா தவறையும் செய்யலாம்.. பெண் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தை தமிழ் சமூகத்தில் தன் கதையின்பாத்திரங்கள் மூலம் மாற்றியவர்….
அதே போல எந்த கேரக்டருக்கும் படம் வரைந்து பாகம் குறிக்கவே மாட்டார்… கதைக்கு தேவையில்லாத விஷயத்தை… டயலாக்கிலோ…. அல்லது காட்சியிலோ சொல்லவே மாட்டார்… மேம்போக்காக சொல்லி விட்டு செல்வது அவரது பாணி.. அதனை பார்வையாளம் யூகத்திற்கு கடத்துவது அவர் ஸ்டைல்..
உதாரணத்துக்கு ஸ்ரீவித்யா யார்…?? சின்ன வயதில் யார் அவருக்கு அல்வா கொடுத்தது…??? எப்படி ஸ்ரீவித்யாவை ஜெய்சங்கரை ஏற்றுக்கொண்டார் ??என்று சொல்லி இருக்கவே மாட்டார்.. அது மட்டுமல்ல… இயக்குனர் நீதிபதி அல்ல… இதுதான் சரி என்று சொல்ல… எல்லா ஊகங்களையும் படம் பார்க்கும் ரசிகர்கள் பார்வைக்கே விட்டு விடுவார்… வலிந்து தேவையில்லாமல் இப்படித்தான் என்று சொல்லும் விஷயங்கள் வெகு குறைவு…
படம் பார்க்கும் போது ஆயுத எழுத்தின் சித்தார்த் திரிஷா போர்ஷனை எனக்கு நினைவு படுத்தியதை வீடியோ விமர்சனத்தில் பகிர்ந்து இருக்கின்றேன்……
புது புது அர்த்தங்கள் ரகுமான், சித்தாரா,பூர்ணம் விஸ்வநாதன் , சவுக்கார் என்று படம் பார்க்கும் போதே என் மனைவியிடம் சொன்னேன்… இணையத்திலும் சில நண்பர்கள் அதை குறிப்பிட்டு இருக்கின்றார்கள்….
ஆனால் என்னை பொருத்தவரை மணி படங்களில் அப்பா அம்மா கேரக்டர் மென்மையாக அந்த கேரக்டர்கள் மட்டுமல்ல… ஆண் பெண் கேரக்டர்கள்…பொதுவாக பரஸ்பரம் விட்டுக்கொடுத்தலை. புரிதல் உணர்வை கேரக்டர்களோடு இழைய விடுவார்.
மவுனராகம்… மோகன்.. ரேவதி
அக்னிநட்சத்திரம்… விஜயகுமார், சுமத்ரா ஜெயசுதா
தளபதி ஜெய் சங்கர்… ஸ்ரீவித்யா வின் நீட்சிதான் …. ஓ காதல் கண்மணி பிரகாஷ்ராஜ் லீலாசாம்சன் என்பேன்….
மணிரத்னம் புது புது அர்த்தங்கள் அளவுக்கு எல்லாம் போக வேண்டாம்…… தன் படங்களில் இருந்தே நிறைய காட்சிகளை எடுத்தாளுவார்….அதற்கு உதாரணம் சொல்கின்றேன்……
உதாரணத்துக்கு திடும் என்று பார்வையாளனை பரவசப்படுத்து மணிக்கு பிடித்த ரொம்ப பிடித்த விஷயம்…
ரோஜா படத்தில் யாரும் எதிர்பார்க்கா நேரத்தில் மனைவி வாயில் தம்மை வைத்து திக்கு முக்காட செய்வது…
நாயகன் படத்தில் கோவிலுக்கு வந்த சரண்யாவுக்கு எதிர்பாராத விதமாக தாலி கட்டுவது…
அக்னிநட்சதிரத்தில் சென்னை மீயூசியம் மதில் சுவரில் இருக்கும் கார்த்திக்கை வெள்ளை மாருதி 800 காரில் வரும்( அப்போது அதுதான் பெரிய கார் )நிரோஷா ஐ லவ்யூ சொல்லி விட்டு செல்வது…
அந்த படம் வந்த போது யாருமே கேட்கவில்லை.. எந்த சந்திப்புமே நிகழாத நிலையில் நிரோஷா எப்படி கார்த்திக்கை லவ் பண்ணுகின்றார் என்று…????
அதன் நீட்சிதான்.,.. முதல் பார்வையிலேயே துல்கர் நித்யாவிடம் நம்பர் கேட்பது…..
அதுவும் தற்கொலை செய்துக்கொள்ள போகின்றோம் என்று நினைத்து பதறியவனுக்கு அடுத்த கணமே நம்பர் கொடுக்கின்றார்…. இந்தகாலத்தில் காலையில் சந்தித்து தேன் ஒழுக பேசி மாலையில் அந்த பெண்ணை மையல் கொள்ளசெய்வது… தகவல் தொழில்நுட்பஉலகில் சாத்தியம் என்பது என் அபிப்பராயம்… அதே போல பிடித்த ஆணிடம்தான் பெண் பேசுவாள்… தற்கொலை செய்துக்கொள்ள போகின்றோம் என்று தனக்காக பதறியவனை எந்த பெண்ணுக்கும் பிடித்து விடுவது இயல்பே…..
இதற்கு எல்லாம் நீட்டி முழங்க வேண்டாம்… காரணம் தன் ரசிகர்களை மிஷ்கின் போல பல வருடங்கள் மூன்பே மோல்ட் பண்ணி வைத்தவர்…
பாருங்கள் டாபிக் எங்கோ போய்க்கொண்டு இருக்கின்றது…
என்ன சொல்லிக்கொண்டு இருந்தேன் திடுக்கிட செய்வது மணிக்கு பிடித்த விஷயம்..
அக்காவை திருமணம் செய்துக்கொள்ள வந்து தங்கை மதுபாலாவை இந்த பெண்ணை பிடித்து இருக்கின்றது என்று சொல்வது.
மவுனராகத்தில் கார்த்திக் ரேவதியிடம் காதலை படார் என்று சொல்வது…. என்று சொல்லிக்கொண்டே போகலாம்…
அதே போலத்தான் அகமதாபாத் போகும் நித்யா ரயிலில் துல்கர் இருப்பது… காபிஷாப்பில் வெயிட் செய்கின்றேன்.. என்று ஆபிஸ் வாசலில் உட்காருவது எல்லாம் மணி படத்தின் டெம்ப்லெட் விஷயங்கள்தான்… இதை ஏன் சொல்கின்றேன் என்று சொன்னால் அவர் படத்தில் இருந்தே நிறைய காட்சிகளை மாற்றி மாற்றி கொடுத்து இருக்கின்றார் என்பதுதான்…
காரணம் எழுத்தாளர் சுஜாதா சொல்வது போல நாம் எல்லோரும் ஒரு மாதிரியான வாழ்க்கையை வாழ்த்துக்கொண்டு இருக்கின்றோம்… அது போலத்தான் இதுவும்…
இப்படி திடும் என்று காதலை வெளிப்படுத்தும் நீட்சியான காட்சிகளை கவுதம் மேனன் படத்தில காணலாம்.. காரணம் மணிரத்னம் திரைப்படம் பார்த்து வளர்ந்தவர்கள் அல்லவா..??
ஆனால் மணி தன் திரைப்படங்களில் தலைமுறைகளை அப்படியே பதிவு செய்பவர்.
தாலி செண்டிமென்ட் 1987 நாயகன் திரைப்படத்தில் கமல் கட்டிய தாலியை கையில் ஏந்தி சரண்யா கண்ணீர் வடிப்பார்… மவுனராகம் படத்தில் தாலி பற்றி டயலாக்குகளில் வரும்..
2000த்தில் அலைபாயுதேவில் தாலி கட்டிக்கொண்டாலும் அது ஆணியில் தொங்கும்….
2015 இல்… தாலியே இல்லாமல் வாழ்க்கை வாழும் இளைய தலைமுறையின் வாழ்க்கை அவர்கள் யோசித்து இருக்கும் வேல்யூஸ் பேன்டசியாக பதிவு செய்கின்றார்…
ஆனால் என்னை பொருத்தவரை இந்த திரைப்படத்தில் தாலிகட்டாமல் வாழ்ந்து அவர் அவர் இலக்கை நோக்கி பயணம் செய்து.. வெற்றி பெற்ற பின் ஒரு வெறுமை இருக்குமே.. அப்படியான வெறுமையில் குடும்பம் என்ற அமைப்பின் மீது நம்பிக்கைகொள்வது போல படத்தை முடித்து இருக்கலாம் என்பது என் அபிப்பராயம்….
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் அப்படியான கிளைமாகஸ் எடுப்பதில் பெரிய பிரச்சனையை மணி சந்திக்க வேண்டாம் என்று நினைத்துதான் டெம்ப்லெட் கிளைமாக்சில் சிக்கிக்கொண்டார் என்றே தொன்றுகின்றது…
அது மட்டுமல்ல…
மணி ரத்னத்துக்கு ஒரு வெற்றி தேவையாய் இருக்கின்றது… சின்ன வெற்றியாவது அல்லது அங்கீகாரமாவது கிடைக்கக் பெற்றால்தான் இன்னும் மிச்ச காலத்துக்கு ஓட வேண்டிய நிலையில் அந்த என்ர்ஜியை அவருக்கு தேவையாய் இருக்கின்றது…
அதனால்தான்….. பத்திரிக்கையாளர்களை இதுவரை சந்திக்காத மணிரத்னம். பத்திரிக்கையாளர்களை சந்திக்கின்றார்.. விஐய் டிவி …டிடி யோடு வெள்ளைதாடியோடு சிரிக்கின்றார்… இனி இப்படி பொதுவெளியில் வந்து தன் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் ‘ என்று நினைத்து இருக்கலாம்… அல்லது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கலாம்…
எது எப்படி இருந்ததாலும் மாற்றம் ஒன்று மட்டுமே மாறது ஒன்று… ஒரு படைப்பாளி அவனுக்கு எது சரியாக வருகின்றதோ அந்த தளத்தில்தான்அவன் விளையாடுவான்… அப்பர் மிடில் கிளாஸ் என்ற களம்தான் மணிரத்னம் விளையாடும் களம்.. அவரிடம் புதுப்பேட்டை போன்ற படங்களை எதிர்பார்ப்பது எந்த விதத்தில் சேர்த்தி..???
மணிரத்னம்… ஒன்னும் கடவுள்இல்லை…
அவருக்கு தேவையான அவருடைய பார்வைக்கு ஏற்ற வகையில் சில காட்சிகளை அவருடைய படங்களில் சித்தரித்ததை மறுப்பதற்கு இல்லை.. ஆனால் அவர் கருத்தை அவருடைய திரைப்படங்களில் தெரிவித்து விட்டார்.. மாற்றுக்கருத்தை யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம்… திரைப்படங்கள் மூலமாகவோ… அல்லது எழுத்தின் மூலமாகவோ… அல்லது அவர் படைப்புகள் எல்லாம் குப்பை என்று கூட சொல்லலாம்.. அது அவர்வர் கருத்து
அதே போல ..
சசியின் பூ, கமலின் மகாநதி, போன்ற நிறைய கதையம்சமுள்ள படங்கள் எல்லாம் தமிழ் சமுகத்தில் மண்ணை கவ்வின என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது…அதனால் நல்ல படத்தை எடுத்தால் ஒடும் என்று சொன்னால் 100 படங்களில் 5 படங்கள் ஓடும் என்பது என் அபிப்ராயம்… மற்றது எல்லாம்…???
மணி பிசினஸ்மேன்தான் அதை மறுப்பதிற்கில்லை… யார்தான் பிசினஸ் செய்யவில்லை.. நான் சிறந்த சிற்பி … அதனால்சிலை வடித்து வீடு வீடாக சென்று இலவசமாக கல்லில் வடித்த சிலையை சென்று எந்த சிற்பியாவது கொடுப்பதை பார்த்து இருக்கின்றீர்களா?-
நான் நல்ல பெயிண்டர் கேன்வாஸ் ஓவியங்களை வரைந்து வீடு வீடாக கொடுக்கின்றேன் என்று எந்த பெயிண்டராவது கொடுப்பதை பார்த்து இருக்கின்றீர்களா??
அதை விட நாட்டு மக்களுக்கு விழப்புணர்ச்சி கொடுக்க கூடிய கருத்துக்களை கொண்ட புத்தகம் இது.,… அதனால் இலவசமாக எல்லா மக்களுக்கும் கொடுக்கின்றோம் என்று இலவசமாக புத்தகத்தை கொடுப்பதை பார்த்து இருக்கின்றீர்களா??
அதனால் மணிரத்னம் பிசினஸ்மேன்தான்…
சிறந்த தொழில்நுட்பகலைஞர்களை வைத்துக்கொண்டு வெற்றிபெற்றுவிடுகின்றார் என்று சொல்வது எப்படி தெரியுமா? இருக்கின்றது… நல்ல சமையல்காரர்களை வைத்துக்கொண்டு சரவணபவன் வளர்ந்துவிட்டது என்று சொல்வது போல இருக்கின்றது…
சினிமா என்பது கூட்டு முயற்சி… தன் அலைவரிசை ஒத்த மனிதர்களிடம் பேசி அவர்களிடம் தனக்கு வேண்டியதை பெறுவது சாதாரண விஷயம் இல்லை…
வயதான மரத்தில் இருந்து நல்ல கனிகள் கிடைப்பதில்லை என்று சொல்வது…. அகிரா குரோசோவா, கிளின்ட் இஸ்ட் உட், மார்டின் ஸ்கார்சசி, ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், இசைமேதை ஜான் வில்லியம்ஸ் போன்றவர்களை அவமானப்படுத்துவது போலாகும்…
வயதானவர்கள் சறுக்கலை சந்திக்கலாம்… ஆனால் எல்லோரும் அல்ல.. பாலச்சந்தர் இயக்கத்தில் வந்த டுயட்., பாத்தாலே பரவசம்… உதாரணங்கள்…
சென்சார் கட்டுப்பாடுகள்… 100க்கு மேற்ப்பட்ட சாதிச்சங்களை வைத்துக்கொண்டு ஒரு படைப்பாளி தான் நினைத்த விஷயத்தே தமிழக திரையில் கொண்டுவருவது பெரிய விஷயம்…
ஓகாதல் கண்மணி படத்தில் துல்கர் நித்யா இரண்டு பேரும் புணரும் போது அந்த கால ஸ்டைலில் கடிகாரம் சுவர் என்று கேமரா திரும்பும்….
இன்னும் காட்டியிருக்கலாம்… சென்சார் ஏ கொடுக்கும்… அப்புறம் சேனலில் படத்தை விற்க முடியாது…. வணிகசமரசங்கள் மற்றும் சென்சார் போன்ற விஷயங்களோடு படைப்பாளியின் கை கட்டப்பட்டே இங்கு படைப்புகள் வெளிவருகின்றன… மணியும் விதிவிலக்கில்லை..
ஓ காதல் கண்மணி கொண்டாடி தீர்க்க கூடிய திரைப்படம் போன்ற படைப்பு இல்லை என்றாலும்… காதலை திரும்பி பார்த்த நினைவுகளை இந்த திரைப்படம் மீட்டுக்கொடுப்பதுதான் இந்த திரைப்படத்தின் வெற்றி…
இந்த படம் எந்த படத்தின் காப்பியும் இல்லை… அவர் பழைய திரைப்படங்களின் காட்சிகளின் தலைமுறை நீட்சியே இந்த திரைப்படம் என்பது என் அபிப்ராயம்…
நல்லவேளை பால்ட் இன் அவர் ஸ்டார் திரைப்படம் 2014 இல் வெளிவந்த சக்கை போடு போட்ட திரைப்படம்.. ஆண் பெண் கென்சர் பேஷண்டுகள் காதல்வயப்படுவதுதான் படத்தின் ஒன்லைன்… நல்லவேளை இதயத்தை திருடாதே திரைப்படத்தை இதே ஒன்லைனில்…மணிரத்னம் 1987 இல் எடுத்து விட்டார்… இப்போது அதே கதையை எடுத்து இருந்தால் பால்ட் இன் அவர் ஸ்டார் படத்தை அவர் காப்பியடித்தே எடுத்தார் என்று சொல்லி இருப்பார்கள்…
ஆனால் மணிரத்னம் காட்பாதர் திரைப்படத்தில் இருந்து காட்சிகளை இன்ஸ்பயர் ஆகி அக்னிநட்சத்திரத்தில் காட்சியாக வைக்கவில்லை என்று சப்பைக்கட்டு கட்டவில்லை…
அதே போல எல்லா படத்தையும் இந்த மணிரத்னம் திரைப்படத்துக்கு இணையவெளியில் அதீத எதிர்ப்புக்கு காரணம் அவர் மனைவி சுஹாசினி பேசிய பேச்சு என்பதையும் நாம் மறுப்பதற்கு இல்லை.
மணிரத்னத்திற்கான வக்காலத்து அல்ல… ஒரு காலத்தில் ரசனை மாற்றத்துக்கு வித்திட்ட படைப்பாளியின் சார்பாய் சற்றே யோசித்ததின் விளைவாய் இந்த கட்டுரை…
இது அபத்த குப்பையாகவும் சிலருக்கு படலாம்… நான் நினைத்தைதை பகிர்ந்து இருக்கின்றேன்…
நன்றி
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
20/04/2015
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
20/04/2015
வீடியோ விமர்சனம்.