Nanbenda Tamil Movie Review -2015

Nanbenda-Movie-Audio-Release-Posters-2

உதயநிதி நடிக்க  வந்த போது….. அவரது சிறு வயது போட்டோவை  போட்டு… காசு வந்தா காக்கா கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின்  சிறு வயது போட்டோக்களை நீங்கள்  பார்த்தீர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான்  சகிக்க முடியாத அளவுக்கு இருப்பார்கள்  என்பது வேறு விஷயம்…. ஆனால் அப்படி நக்கல் விடுவது போன்றுதான் அவர் நடிப்பும் நாடகத்தனமாக இருந்தது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.…

ஒரு அழகான  பழமொழி ஒன்று உண்டு. ஏழையாக பிறப்பது நம் தவறு இல்லை… ஆனால் ஏழையாக  இறப்பதுதான் தவறு என்று…. அது போல நடிக்க தெரியாமல் முதல் இரண்டு படங்களில் தடுமாறுவது சகஜம்.. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆன பிறகு…. அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு  வெற்றி அடைய வேண்டும்..

இந்த விஷயத்தில் உதயநிதியை நான்  கண்டிப்பாக பாராட்டுவேன்.. காரணம்… முதல் இரண்டு படங்களில்  தடுமாறினாலும்… இந்த படத்தில் நிமிர்ந்து  நின்று இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..

இந்திய சினிமாவில் சிவாஜி எம்ஆர்ராதா போல நடித்தாலும்  நடனம் அடத்தெரியவில்லை என்றால்  தான் அம்பேல் என உதயநிதி  உணர்ந்து இருக்கின்றார்…  நீ சன்னோ …நீ மூனோ  பாடலில்  ஆடும் அந்த  நடனம் ஒன்று போதும்….  அவருடைய டெடிகேஷனுக்கு….

=======

நண்பேண்டா படத்தின் கதை என்ன??

கதை என்ற வஸ்துவெல்லாம்  இந்த படத்தில் கிடையாது… இருந்தாலும் ஒரு லைன்ல சொல்லறேன்…. தஞ்சாவூர்ல இருக்கும் உதயநிதி…. வேலை வெட்டிக்கெல்லாம் போகாம ஊரை சுத்திக்கிட்டு வராரு..

அவுங்க அம்மா ஒரு சுபயோக சுபதினத்துல சொல்றாங்க… தம்பி.. ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் ஒரே பெண்ணை பார்த்தி விட்டாய் என்றால் அவள்தான் உன் லைப்பு.. அவதான்  ஒன் ஒய்ப்பு என்று மந்திரம் ஓதி விட…  திருச்சியில்  இருக்கும் நண்பன் சந்தானத்தை பார்க்க வரும் போது நயனை மூன்று இடத்தில் வைத்து பார்க்க… இரண்டு பேருக்கும் கொஞ்சம் நாள் கழித்து காதல் பிறகு மோதல் பிரிவு என்று போய்… அந்த காதல் என்னவாகின்றது என்பதுதான் இந்த திரைப்படத்தின்  வித்தியாசமான கதை..

====

படத்தின் சுவாரஸ்யங்கள்…

உதயநிதி நடிப்பில் முன்னேற்றம் காமெடி சென்சில் கூச்சப்படாமல் பேசுகின்றார்.. தனக்கு என்ன வருகின்றதோ… அதை முடிந்த அளவுக்கு பெஸ்ட்டாக  கொடுக்க முயற்சி  செய்கின்றார்…

இன்னமும் நடிகைகளோடு  நெருங்கி நடிக்க அவர் இன்னும் கூச்சத்தை விட்ட பாடில்லை.. நயன்தாராவை தொடும் இடங்களில் வீட்டு நியாபகம்… அப்பா  நியாபகம்.. சமுகவலைதள பயம் என்று கலந்துக்கட்டி  யோசித்து தொடுகின்றார்…

இருந்தாலும்,.. இந்த படத்தில் நயனை  திரும்ப திரும்ப கட்டி பிடித்து நயன் ரசிகர்களுக்கு டரியல் கொடுக்கின்றார்.

நயன் சான்சே இல்ல…. பின்னி இருக்கின்றார்… சில காட்சிகளில் வயதாவதை மறைக்க முடியவில்லை  என்றாலும்… அந்த  போதைக்கண்ணும் கள்ள சிரிப்பும்  சான்சே இல்லை…

முதல் பாடலில்  லோ ஆங்கலில் கருப்பு உடையில் தொடை அதிர நடக்கும் போது… இன்னும் பத்து காதல்   சர்ச்சையில் நயன் ஈடுபட்டாலும் சரி…. இன்னும் பத்து வருடத்துக்கு தமிழக சினிமாவை ஆட்சி செய்வார் என்று அடித்து கூறுகின்றேன்…

நீ சன்னோ சாங்கில் வரும் உடைகளில் கலக்குகின்றார்…. அந்த நடன துடிப்பும்  போதை என்றும் கண்ணும்தான் இன்னும்  நயனை வாழ வைத்துக்கொண்டு இருக்கின்றன…

1990 களின் ஹாலிவுட் கனவு தேவதை… ஷரன் ஸ்டோனின் கண்ணையும்  அந்த செக்சியான புன்னகையும்  நயனை அதிக அளவு நேசிக்க வைக்கின்றன என்பேன்…  இதற்கு மேல்   எழுதினால்   வீட்டில்  பிரச்சனை அதிகரிக்கும்… குளிக்கும் போது துண்டு எடுக்க மறந்து போனால் கூட  நயனை வம்பிக்கிழுக்கும் வைபவம் நடைபெறும் என்பதால் இதோடு அப்பிட் ஆகின்றேன்

சந்தானம்,,. படத்தின் பலம்… அதே டெம்லெட் காமெடி என்றாலும் இரட்டை அர்த்த வசனங்கள் பெருமளவு குறைந்து இருக்கின்றன.. கருணாகரன் நடித்து இருந்தாலும் மற்ற படங்கள் போல இதில் பெரிதாய் அவர்   சோபிக்கவில்லை..

நீண்ட  நான் கழித்து  ஷெரின்…மிக பிரமாண்டமாய் சந்தானத்துக்கு ஜோடியாக  என்ட்ரி ஆகி இருக்கின்றார்… பளபளப்பு இருந்தாலும்… துள்ளுவதோ இளமை படம் பார்த்து விட்டு  அந்த  ஒன்றரை கண்ணோடு வாழ்ந்த கணங்களையும்…. அசைபோடும் மனதையும்  தடுக்கமுடியவில்லை.. ச்சே இந்த காலம்தான் எப்படிபட்ட கொடுங்கோலனாய் இருக்கின்றான் என்று சபிக்காமல் இருக்க முடியவில்லை.

ஒளிப்பதிவு பாலசுப்ரமணியன்.. சான்சே இல்லை.. பெரிய பட்ஜெட்… அதை காட்சிகளில் மிக அழகாக  உள்வாங்கி இருக்கின்றார். முக்கியமாக  உரெல்லாம்  உன்னைக்கண்டு நயன்தாரா பாட்டில் பிரேமும் காஸ்ட்யூடுமும்… அந்த கலர் சென்சும்… பின்னனியில் ஆடும்.. அந்த ரிச்  கேர்ள்சும் கண்களில் ஒத்திக்கொள்ளலாம்…

காஸ்ட்யூமர் ஒளிப்பதிவளார் இரண்டு பேருக்கும் ஸ்பெஷல் பொக்கே பார்சல்… அதே போல நீ சன்னோ பாடலில்  நயனின் காஸ்ட்யூம் அருமை…

ஹாரிஸ்… மூன்று பாடல்களை   தேற்றி இருக்கின்றார்….. நீ சன்னோ என்னோட பேவரைட்..

=========

படத்தின் டிரைலர்..

========

படக்குழுவினர் விபரம்.
Directed by Jagadish
Produced by Udhayanidhi Stalin
Written by Jagadish
Starring Udhayanidhi Stalin
Nayantara
N. Santhanam
Music by Harris Jayaraj
Cinematography Balasubramaniem
Edited by Vivek Harshan
Production
company
Red Giant Movies
Distributed by Red Giant Movies
Lotus Five Star (Malaysia)
Release dates
2 April 2015
Running time
151 minutes
Country India
Language Tamil
Budget 5 crores

==========

பைனல் கிக்.

லாஜிக் எல்லாம் பார்க்காமல் வயிறு குலுங்க சிரித்து விட்டு வர  நண்பென்டா  பெஸ்ட் சாய்ஸ்… நயன் ரசிகர்கள் அவசியம் பார்க்க வேண்டும்… நீ சன்னோ பாடலில் உதயநிதி ஆடும் ஸ்டைல் இம்புரூவ்மென்ட் ஆட்டத்திற்கு அவசியம் பார்க்கலாம்.

====

படத்தோட ரேட்டிங்

பத்துக்கு ஆறு,.

========

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

 

வீடியோ விமர்சனம் பிடித்து இருந்தால் வீடியோவை  ஷேர் செய்யுங்கள்.

 

நன்றி.

 

https://youtu.be/CsM87SuTsRs