சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், ஷங்கரின் 2.0

லைகா புரோடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட வரலாறில் மிகப்பெரிய படமான கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குனர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது. இப்படம் 2010ம் ஆண்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் பாகம். 2.0 படத்தின் துவக்க விழா பிரம்மாண்டமான முறையில் அரங்கேற்ற முடிவு செய்யப்பட்டது. ஆனால் சமீபத்தில் தமிழகத்தில் பெய்த வரலாறு காணாத மழையினாலும், வெள்ளத்தாலும் மக்கள் அவதிக்குள்ளானதை கருத்தில் கொண்டு இவ்விழா கைவிடப்பட்டது. பெரும் பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 2.0 படத்திற்காக பிரபல ஹாலிவுட் திரைப்படங்களான ஜுராஸிக்பார்க், ஐயர்ன் மேன் உள்ளிட்ட படங்களுக்கு பணிபுரிந்த லீகசி எபக்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு இன்று படபிடிப்பில் கலந்து கொண்டனர். இப்படத்தின் மற்றொரு…

Read More

ar rahman music to director priyadharshan new film???

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் THINK BIG STUDIOS சார்பில் தயாராகும் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பதாக வதந்திகள் பரவி வரும் நிலையில். இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறியதாவது ” எனது குரு பிரியதர்ஷன் சார் அவர்களின் மானசீகமான படம் இது. தேசிய, சர்வதேச தரத்திலான படத்திற்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை அறிந்துள்ளோம். சர்வதேச அடையாளத்தை எதிர்நோக்கும் இப்படத்தில் எல்லைகளை தாண்டி உணர்வுகளை கொணரும் இசையும் அவசியம். தற்போது பிரியதர்ஷன் சார் படப்பிடிப்பிற்கான வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். முழு படபிடிப்பும் முடிந்த பின்னர் படத்தை ரஹ்மான் சாருக்கு காண்பிக்க இருக்கிறோம். படத்தை பார்த்த பிறகு ஏஆர் ரஹ்மான் அவர்களுக்கு பிடித்திருந்தால் இப்படத்திற்கு பின்னணி இசையமைப்பார். பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன் மற்றும் ஸ்ரியா ரெட்டி ஆகியோரது நடிப்பின் பெரும் பங்கும், திறன்…

Read More