Komban Tamil Movie Review

???????????????????????????????????????????????????

சென்சார்  செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டி இருக்கின்றது…  தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது  ஏப்ரல்  ஒன்றாம்  தேதி மாலை  வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்…    கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில்   வெளியாகி இருக்கும் கொம்பன்.

படம் வந்தால்  தென்மாவட்டத்தில் ரத்த ஆறு ஓடும்… சாதீச்சண்டை மூளும் என்று   டாக்டர் கிருஷ்ணசாமி… சண்டியர் திரைப்படத்துக்கு  பிறகு மடித்து வைத்து ஓய்வு கொடுத்த சாட்டையை   மீண்டும் சுழற்ற… கொம்பன் டீம் கலங்கித்தான் போனது….

ஆனால் படத்தில் எந்த சாதியையும் குறிப்பிடவில்லை.. அது மட்டுமல்ல.. சாதி ,  ஊர் பஞ்சாயத்துன்னு போய் வெட்டியா மீசையை முறுக்கிகிட்டு சுத்தாதிங்கடான்னு செவிட்டுல அடிச்சி சொல்லி இருக்கார் இயக்குனர் முத்தையா…

விகடனில் அட்டை படத்தில் கண்டு கொண்டேன்  கண்டு கொண்டேன் திரைப்படத்துக்கு பிறகு  கொம்பன் புகைப்படம் மனதை அள்ளியது என்பேன்… படத்துக்கு எதிர்பார்ப்பும் கூடியது.. காரணம் எட்டு வருடத்துக்கு பிறகு அதாவது பருத்தி வீரன் வந்து  எட்டு வருடத்துக்கு  பிறகு  கிராமத்து சண்டியர் சப்ஜெக்ட்டில்  கார்த்தி நடித்துள்ளார் என்பதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை  அதிகரிக்க செய்தது எனலாம்.

==

கொம்பன் படத்தின்  கதை என்ன?

கார்த்தி(கொம்பன்)  ….   தனக்கும் தன் ஊருக்கும் நீதி  நேர்மைக்கு பங்கம் வரும்  எந்த விஷயத்தையும்  அவனால் ஆதாரிக்க முடியாது… அதனாலே பல பிரச்சனைகளை  ஊருக்கா சந்திக்கின்றான்.. அவனுக்கு  லட்சுமிமேனனை (பழனி)யை மனம் முடிக்க நினைக்கின்றார்கள்..அதனால் லட்சுமியின் அப்பா ராஜ்கிரன் (முத்தையா) நிறைய இடங்களில்  கொம்பனை  பற்றி விசாரிக்கின்றார்… திருமணம் நடந்தாலும் தன்னை பற்றி அதிகம் விசாரித்த மாமனார் ராஜ்கிரனை கார்த்திக்கு பிடிக்காமல் போகின்றது… ஊரில் முன் பின் மிச்சம் வைத்த பகை…  பிடிக்காத மாமன் , ஆசை  மனைவி என்று  தவித்து போகும் கார்த்தி எவ்வாறு  பிரச்சனைகளை சமாளித்தான் என்பதுதான் கொம்பன் படத்தின் கதை.

=======

படத்தின் சுவாரஸ்யங்கள் .. ( ஸ்பாய்லர் அலர்ட்)

சாதி செனத்தோடு போய் சாமி கும்பிடலாம் என்று ராஜ்கிரணிடம் ஊர் பெரியவர்கள் சொல்ல…  சாமி கும்பிட போங்க.. ஆனா சாதியை கூப்பிட்டுக்கிட்டு போனா… வம்புதான் வரும்.. அதனால நான்  கோவிலுக்கு வரலைப்பா… என்று முதல் காட்சியிலேயே சாதிக்கு எதிராக சவுக்கை வீசி இருக்கின்றார் இயக்குனர்.

பூ படத்துக்கு  பிறகு தீப்பெட்டி  தொழிற்சாலையில்  ஐந்துக்கும்  பத்துக்கும் நம் பெண்கள் எந்த அளவுக்கு   அவமானபடுகின்றார்கள் என்பதை பதிவு செய்து இருப்பதோடு.. ஆறு மணிக்கு குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு போகும் பெண்களை  காட்டி விட்டு …. குண்டியில் வெயில் படும் வரை தூங்கி .. பத்து  மணிக்கு விழித்து மீசை முறுக்கிக்கொண்டு… பத்து மணிக்கு மேல்  பஞ்சாயத்து பேச  வெள்ளையும் சொள்ளையுமாக செல்லும் கணவன்மார்களை செவிட்டில் அறைந்து காட்சிகள்  மூலம் புத்தி சொல்லி இருக்கின்றார் இயக்குனர் முத்தையா… அது மட்டுமல்ல… நல்ல படிடா என்று பையனுக்கு புத்தி சொல்வது போல பஞ்சாயத்துக்கு  கிளம்பும் ஆட்களை  ஒரு  பிடி பிடித்து இருக்கின்றார்..

கார்த்தி பருத்தி  வீரன் சாயல் இல்லாமல்  நடிப்பில் வசன உச்சரிப்பில் கலக்கி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்….

லட்சுமிமேனன் சான்சே இல்லை.. இவருக்கும் ராஜ்கிரனுக்கும் உள்ள அப்பா மகள்  பாசத்தை  மிக அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.. இப்படியான மகள் கிடைப்பது வரம்.

மாப்பிள்ளை மாமனார் பாசத்தை  வெகுநாட்களுக்கு பிறகு இந்த திரைப்படம்  பதிவு செய்து இருக்கின்றது.. முக்கியமாக முதலில் வெறுத்து அதன் பின் ராஜ்கிரனோடு நட்புபாரட்டும்  காட்சிகள்  நெகிழ்ச்சியின் உச்சம்.

ராஜ்கிரண் நடிப்பில் பின்னிஇருக்கின்றார்… லட்சுமிமேனனிடம் அதுதான்  உனக்காக கொம்பன் ரெடி பண்ணி இருக்கும் அறை என்று சொல்ல…  வசனமே இல்லாமல் முகத்தில் இருக்கும் எக்ஸ்பிரஷனில் மன நிறைவை ராஜ்கிரண் மிக அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.

கோவை சரளா மனரோமா ஆச்சி இடத்தை பிடித்து விட்டார் என்றே  சொல்ல வேண்டும்… வெகு நாட்களுக்கு பிறகு கருணாசை திரையில் பார்க்க  முடிந்தது…

அதே போல மிக  நீண்ட  நாட்களாக்கு பிறகு சூப்பர்சுப்பராயன்… கலக்கி இருக்கின்றார்…

வேல்ராஜ் ஒளிப்பதிவு படத்துக்கு  பெரிய பலம்…. அதே போல ஜிவி பிராகாஷின் இசையில் பாடல்கள் தாளம் போட வைக்கின்றன… எடிட்டர் பிரவின் அவருடைய வேலையை  செவ்வனே செய்து இருக்கின்றார்..

===

படத்தின் டிரைலர்.

 

======

படக்குழுவினர் விபரம்.

 

Directed by M. Muthaiah
Produced by K. E. Gnanavel Raja
S. R. Prakashbabu
S. R. Prabhu
Written by M. Muthaiah
Starring Karthi
Lakshmi Menon
Rajkiran
Music by G. V. Prakash Kumar
Cinematography Velraj
Edited by Praveen K. L.
Production
company
Studio Green
Release dates
April 1, 2015
Running time
135 minutes
Country India
Language Tamil
Budget INR15 crore

======

பைனல் கிக்..

முத்தையாவின் வசனங்கள் செம ஷார்ப்.. வந்து இருக்கறது  என் புருஷன்… நீ எனக்கு கண்ணு மாதிரி… அவரு எனக்கு கை மாதிரி என்று  வசனங்கள்  செம ஷார்ப்.

கார்த்தி கூடவே சுத்தும் செவ்வாழையாக  தம்பிராமைய்யா வருகின்றார்..இரண்டு பேருக்குமே.. ஆடு வெட்டி அதன்  தோலை விற்று பிழப்பு நடத்தும்  வேலை… இரண்டு பேருமே ஆட்டுதோலை விற்க வருவதோடு சரி.. ஆட்டை எந்த இடத்திலும் வெட்டி வியாபாரம் செய்வதாய் காட்சிகள் இல்லை என்பது படத்தின் சின்ன மைனஸ்,.

வன்முறை  அதிகம் இருந்தாலும் அவசியம் இந்த கொம்பனை கண்டிப்பாக் பார்த்து மகிழலாம்.

==========

படத்தோட ரேட்டிங்….

பத்துக்கு ஆறரை…

====

பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.

 

வீடியோ விமர்சனம்..

 

https://youtu.be/xSgd4nAemD0