Jackiecinemas

RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் ஆன்மாவே பிரம்ண்டமான ஆக்சன் காட்சிகள் தான் – இயக்குநர் ராஜமௌலி !

Indian Movies Tamil Cinema Telugu Cinema

 

 

Lyca Productions சார்பில் திரு. சுபாஸ்கரன் அல்லிராஜா & DVV Entertainment சார்பில் திரு. தானய்யா இணைந்து வழங்கும், இந்திய திரைத்துறையில் மொழி மாநில எல்லைகள் கடந்து இந்தியாவில் உள்ள அனைத்து ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பு RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) திரைப்படம் ஆகும். பாகுபலி திரைப்படத்தின் உலகளாவிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களான ஜூனியர் என் டி ஆர், ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் RRR திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் இந்திய திரைத்துறையின் பல மொழிகளிலுருந்தும் பெரும் நட்டத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். பாலிவுட் நாயகி ஆலியா பட், நாயகன் அஜய் தேவ்கன், நடிகர் சமுத்திரகனி உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, தற்போது படத்தின் முன் வெளியீட்டு பணிகள் துவங்கியுள்ளது. இன்று சென்னையில், இப்படத்தின் தமிழ் பதிப்பின், பிரமாண்ட விழாவில் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியீடு செய்யப்பட்டது. இவ்விழாவில் இயக்குநர் S S ராஜமௌலி, Productions சார்பில் தமிழ்குமரன், தயாரிப்பாளர் NV பிரசாத், DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் Lyca Productions சார்பில் தமிழ்குமரன் பேசியதாவது..

பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி உடன் எங்கள் தயாரிப்பு இணைவது எங்களுக்கு பெருமை. உலகளவில் பெரும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கும் பிரமாண்ட படைப்பாக RRR இருக்கிறது. இது நட்பு ரீதியிலான சங்கமம். இது இன்னும் பல படைப்புகளில் தொடருமென நம்புகிறோம். நன்றி.

DVV Entertainment சார்பில் தயாரிப்பாளர் தானய்யா பேசியதாவது..

இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இது எங்களுக்கான மிக முக்கியமான படைப்பு. உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென்று நம்புகிறோம் நன்றி.

இயக்குநர் S S ராஜமௌலி பேசியதாவது…

சில வருடங்கள் கடந்து உங்களை சந்திப்பது மகிழ்ச்சி. நீண்ட நாட்கள் கழித்து உங்களை தனியாக சந்திப்பதற்கு மன்னிக்கவும். அடுத்த மாதம் எங்கள் மொத்தப் படக்குழுவினருடன் உங்களை கண்டிப்பாக சந்திப்போம். அதற்கு மிகப்பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறோம். அப்போது உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கிறோம்.
RRR (இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தில் மிகப்பெரிய ஆக்சன் காட்சிகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளுக்கு பின்னும் பெரிய எமோஷன் இருக்கும், அந்த எமோஷன் தான் படத்தின் உயிர்நாடி. அந்த எமோஷனை ஆத்மாவை வெளிக்காட்டும் ஒரு இசை தான் உங்களுக்கு இன்று அறிமுகப்படுத்தும் உயிரே பாடல். அண்ணா மரகதமணி அவர்கள் தான் இசையமைத்துள்ளார். அவர் எப்போதும் படத்தின் காட்சிகளுக்கு இசையமைக்க மாட்டார். படத்தின் உயிர் என்ன எதைப்பற்றியதோ, படம் என்ன சொல்ல வருகிறதோ அதற்கு தான் இசையமைப்பார். அப்படி RRR ( இரத்தம் ரணம் ரௌத்திரம்) படத்தின் மொத்த ஆத்மாவையும் இந்த பாடலில் கொண்டு வந்திருக்கிறார். மதன் கார்கி இந்தப்பாடல் கேட்டபோதே கண்ணீர் சிந்தி ரசித்தார், அருமையான பாடல் வரி தந்திருக்கிறார். இதை இன்னும் உலகிற்கு காட்டவில்லை, உங்களுடன் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.

தொழில்நுட்ப குழு:

திரைக்கதை, இயக்கம் – S S ராஜமௌலி
கதை – விஜயேந்திர பிரசாத்
வசனம் – கார்கி
இசை – MM மரகதமணி
ஒளிப்பதிவு – K K செந்தில்குமார்
படத்தொகுப்பு – ஶ்ரீகர் பிரசாத்
மக்கள் தொடர்பு – நிகில்

Related posts

𝑲𝑨𝑳𝑨𝑴 𝑺𝑨𝑳𝑨𝑨𝑴 – 𝑽𝑰𝑹𝑻𝑼𝑨𝑳 𝑻𝑹𝑰𝑩𝑼𝑻𝑬 𝑻𝑶 𝑻𝑯𝑬 𝑷𝑬𝑶𝑷𝑳𝑬’𝑺 𝑷𝑹𝑬𝑺𝑰𝑫𝑬𝑵𝑻 𝑶𝑵 𝑯𝑰𝑺 5𝑻𝑯 𝑹𝑬𝑴𝑬𝑴𝑩𝑹𝑨𝑵𝑪𝑬 𝑫𝑨𝒀 𝑭𝑹𝑶𝑴 7.00𝑷𝑴 𝑶𝑵𝑾𝑨𝑹𝑫𝑺

admin

കൊലമാസ്സ് – Kammara Sambhavam Malayalam Movie Review

admin

ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது

admin

ஹைடெக் கார் திருடும் நட்டி – ருஹி சிங் போங்கு

admin

ஹீரோவானார் ‘உச்சத்துல சிவா’ ஆண்ட்டி ஹீரோ

admin

ஹீரோயின் அம்மாவுக்கு ரூட் விடும் ரவிமரியா- ’பகிரி’ படத்தில் ரகளை

admin

ஹிரோ சினிமாஸ் கதிர் நடிக்கும் ஒன்பதிலிருந்து பத்துவரை (9 டு 10

admin

ஹிப்ஹாப் தமிழாவின் நான் ஒரு ஏலியன்

admin

ஹிப்ஹாப் ஆதியின் இசையில் “கோமாளி”

admin

ஹிப்பி பட நாயகி டிகங்கான சூர்யவன்ஷிக்கு 2018 ம் ஆண்டிற்கான தாதாசாகெப் பால்கே விருது

admin

ஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக்

admin

ஹிந்தியிலும் கலக்கும் இருமுகன்

admin