எழுத்தாளர் பாலகுமாரனுக்கு அஞ்சலிகள்

நான் சட்டென உடைவது ரொம்பவும் ரேராக நடக்கும்… மதியமே ஐயா பாலகுமாரன் வீட்டுக்கு நண்பர் ஜெகனோடு சென்று விட்டேன்…. ஐயாவுக்கு இறுதி அஞ்சலியை மனம் உருக செய்துவிட்டு வெளியே நின்றுக்கொண்டு இருந்தேன்… சுவாச பிரச்சனையில் சில காலமாக சிரமப்பட்டு இருந்தார்… 71 வயது என்று சொல்லி மனதை தேற்றி அமைதியாய் நின்றுக்கொண்டு இருந்தேன்… யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் என்று சன்னமாக பெண்கள் பாடிய படி இருந்தார்கள். அழுகை ஏனோ வரவில்லை.. சாந்தாம்மா வந்தார்கள்.. ஆதரவாய் கை பற்றினேன்… ஜாக்கி அப்பா போயிட்டாரு என்றார்கள்… ஒரே ஒரு வார்த்தை அவ்வளவுதான்… சட்டென துக்கம் தொண்டையை அடைக்க வெடித்து அழுகை அடிவயிற்றில் இருந்து புறப்பட்டது… #Bhalakumaaran #balakumaran #writterbalakumaran #பாலகுமாரன் #பாலா #யோகிராம்சுரத்குமார் ஐயாவுக்கு அஞ்சலிகள்.

Read More

“மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும்”; ‘ஒரு குப்பை கதை’க்கு உதயநிதி பாராட்டு..!

பல படங்களுக்கு நடன அமைப்பாளராக பணிபுரிந்து, தேசிய விருதையும் வென்றவர் தினேஷ். இவர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பை கதை’. கதாநாயகியாக வழக்கு எண் புகழ் மனிஷா நடித்துள்ளார் இயக்குநர் அஸ்லம் தயாரித்திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். இந்தப்படத்தை தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார் உதயநிதி.. மே-25ஆம் தேதி இந்தப்படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, சிவகார்த்திகேயன், ஸ்ரீகாந்த், நாகேந்திர பிரசாத், இயக்குனர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட உள்ளிட்ட பலர் கலந்தகொண்டனர். இந்த விழாவில் இயக்குனர் சீனுராமசாமி பேசும்போது, “குப்பை அள்ளக்கூடிய மனிதர்களை கதையின் நாயகர்களாக்கியதற்கும்,…

Read More

“அரும்பே” பாடல் மூலம் ரசிகர்கள் மனதில் அரும்பும் ஷில்பா

வரும் 18ஆம் தேதி வெளி வர உள்ள “காளி” மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்றால் மிகை ஆகாது.விஜய் ஆண்டனி நடித்து , இசை அமைக்க , விஜய் ஆண்டனி பிலிம் கார்பொரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கும் “காளி” படத்தில் வரும் “அரும்பே” இணைய தளத்தில் ரசிகர்கள் இடையே ஏக வரவேற்பை பெற்று உள்ளது.அந்த பாடலில் விஜய் ஆண்டனியுடன் காதல் ரசம் சொட்ட நடித்து இருக்கும் இந்த படத்தின் கதாநாயகிகளில் ஒருவரான ஷில்பா மஞ்சுநாத், இப்போதே ரசிகர்களின் கனவு கன்னியாகி தனக்கென்று ஒரு தனி இடத்தை நிர்மானித்துக் கொண்டு உள்ளார். ” காளி படத்தில் ஒரு கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமாவது மிக மிக பெருமைக்கு உரியது. சற்றும் கவனத்தை திசை திருப்பாத திரைக்கதை, மற்றும் தமிழ் திரை உலகின் திறமைகள் அனைத்தும்…

Read More

Antony Audio Launch Stills

இயக்குனர் குட்டி குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் ” ஆண்டனி ” .இந்த படத்திற்கு 19 வயது இளம்பெண் ( ஷிவாத்மிக்கா) இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு S .A சந்திரசேகர் மற்றும் ,ஜெயசித்ரா ஆகியோர் கலந்துகொண்டனர் . இந்த படத்தில் சண்டக்கோழி புகழ் “லால் ” ,நிஷாந்த் ,வைசாலி ,நடிகை ரேகா ,சம்பத் ராம் ,’வெப்பம் ‘ ராஜா.சேரன் ராஜ் ஆகியோர் நடித்து உள்ளனர். இந்த விழாவில் பேசிய S .A சந்திரசேகர் பேசியவை ” இந்த படக்குழுவில் உள்ள அனைத்து கலைஞர்களும் சிறிய வயது உடையவர்கள்.படத்தின் ட்ரைலர் பிரமிக்க வைக்கிறது. எடிட்டிங் மிக அருமையாக உள்ளது.படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் .அனைவருக்கும் வாழ்த்துக்கள்…

Read More