டிஸ்னி நிறுவனம் தயாரிப்பில் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கும் அமீர் கான் நடிப்பில் வெளி வந்த ‘யுத்தம்’ [ ஹிந்தியில் தாங்கல் ] பல் வேறு சாதனைகளை முறியடித்து வெற்றி கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.கதை தான் படத்தின் வெற்றிக்கு மைய கருத்து என்பதை மீண்டும் நிரூபணம் செய்து இருக்கும் படம் தான் யுத்தம். படம் வெளி வருவதற்கு முன்னரே படத்துக்கு இருந்த எதிர்ப்பார்ப்பு , நாயகன் அமீர் கானின் ரசிகர்களை வசிய படுத்தும் திறமை ஆகிய அம்சங்கள் திரைக்கு ரசிகர்களை வரவழைக்கும் பணியை மேற்கொண்டாலும் , ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெறுவது படத்துக்காக மேற் கொண்ட திறமையான டப்பிங் ஆகும்.கதையின் ஜீவன் கெடாதவாறு செய்யப்பட்ட இந்த தமிழாக்கம் ரசிகர்களிடம் பிரமாதமான வரவேற்பை பெற்று கொண்டுஇருக்கிறது.தமிழாக்கமான யுத்தம் வெளி வந்த நாளிலேய தாங்களும் வெளி வந்து சாதனை படைத்துக் குறிப்பிட தக்கது என்று திரை வட்டாரத்தினர் பாராட்டு பாத்திரம் வாசிக்கின்றனர்.