எழுத்தாளர்கள் சுபாவோடு சூப்பர் நாவல் காலத்தில் இருந்து கேவி ஆனந்துக்கு உள்ள நட்பு அனேகன் வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றது… இன்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரைம் திரில்லர் கதைகளை கையில் எடுத்துக்கொண்டு சேப்ட்டியாக பயணிக்கின்றார்கள்… அதில் பெரியசருக்கலை மாற்றன் திரைப்படத்தில் சந்தித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்….
அயன் திரைப்படத்துக்கு பிறகு… வெற்றி பெற்றாக வேண்டிய சூழல், சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயம்… தனுஷ்வுடன் முதல் முறையாக கை கோர்த்து இருக்கின்றார்கள்… ஒரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்… டாங்க மாரி சாங்குக்கு தியேட்டரே ஆடுகின்றது…
லவ்வர்சுக்கு கண்டிப்பாக பிடிக்கும் காரணம் ஒரே டிக்கெட்டில் மூன்று காதல்கள் அல்லவா-? காளி கேரக்டரில் சும்மா பூந்து ரவுண்ட் கட்டுகின்றார்…தனுஷ்,… ,இஷா தல்வார் சாயலில் இருக்கும் அமைரா அசத்தி இருக்கின்றார்.. நல்ல உடற்கட்டு… தமிழ் சினிமாவில் இரண்டு ரவுண்ட் வர நிறைய வாய்ப்பு இருக்கின்றது….
அனேகன் திரைப்படத்தின் ஒன்லைன்.
மூன்று ஜென்மங்களாக பல்வேறு காரணங்களால் பிரிந்து போன ஜோடி நிகழ்காலகாதலில் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் ஒன்லைன்.
===
அனேகன் படத்தின் கதை
1960 ஆம் ஆண்டு ஒருவிபத்தில் சிக்கும் பணக்கார பெண் அமைராவை (சமுத்ரா) காப்பாற்ற போய் காதலில் விழுகின்றார் தனுஷ் (முருகன்) ஆனால் அந்த காதல் கை கூடவில்லை.
அதன் பின் நிகழ்காலத்தில் தனுஷ்( அஸ்வின்) என்கின்ற சாப்ட்வேர் கம்பெனியின் சிஸ்டம் அட்மினாக வேலைக்கு சேர்கின்றார்.. அதே கம்பெனியில் அமைரா (மது) ஒர்க் செய்கின்றார்.. ஒரு கட்டத்தில் இரண்டு பேருக்கும் காதல் பூத்தாலும்.,தாம்முன் ஜென்மத்தில் காதலித்தோம் என்று சொல்கின்றார்.. அது மட்டுமல்ல… சைக்கியாரிஸ்ட் மூலம் கடந்த நினைவுகளை மீட்டு எடுக்க எத்தனிக்கும் போது 1987 இல் நடந்த ஒரு ஜென்மத்து கதையில் அவர்கள் ஒரு கயவனால் பழிவாங்கப்பட்டது தெரிய வர அது நிகழ்கால வாழ்க்கை வர துரத்த… அது என்ன என்பதை அறிய திரைப்படத்தை தியேட்டரில் சென்று பாருங்கள்.
=======
படத்தின் சுவாரஸ்யங்கள்.,
வழக்கமான கேவி ஆனந்த் சுபா கூட்டணியின் ஆக்ஷன் கிரைம் சைக்கிலாஜிங்ககல் திரில்லர்… இந்த படத்தின் மூலம் திரும்பவும் வெற்றிக்கோட்டை தொட்டு விட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.
வசனங்கள் படு ஷார்ப்… முக்கியமாக காளி போர்ஷன் வசனங்களில் கூடுதல் கவனம்.
தனுஷ் ஒரே படத்தில் நான்கு கெட்டப்… நான்கு மாடுலேஷன்.. காளி போர்ஷனில் பின்னி இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்… செமையான அண்டர் பிளே…
காயத்துல எச்சி தொட்டு சும்மா காத்துல ஆட்டினா போதும் என்று அசல்டாக சொல்லும் டயலாக்கிற்கு விசில் பறக்கின்றது.. அஸ்வின் கேரக்டரும் அருமையாக செய்து இருந்தாலும் காளி கேரக்டர் மனதில் நிற்கின்றது… பர்மா தனுஷ் மனதில் ஒட்டவில்லை.. ஏதோ தலையில குப்பையை கொட்டி வச்சா போல ஒரு விக்கு.. சகிக்கலை.
அதே போல 1960 பர்மாவில் எடுக்கப்பட்ட காதல் கதை ஒன்றும் பெரிய சுவாரஸ்யத்தை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்…
புதுமுகம் அமைரா.. இஷா தல்வாரின் ஜெராக்ஸ் போல இருக்கின்றார்.
செமையான உடம்பு…பிரம்மன் ஸ்பெஷல் ஒர்க் பண்ணி இருக்கான்.. தமிழில் இன்னும் நாலு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது. இடுப்பில் மருதானி வைத்தால் சிவக்கும் என்று இந்த படத்தின் மூலம் அறிந்துக்கொண்டேன்.. மார்டன் டிரஸ்சில்கலக்குகின்றார்.. அது மட்டுமல்ல.. பார்மா போர்ஷனில் கப்பலில் ஏறும் முன் கூறைப்புடவை போல சின்ன கட்டம் போட்ட புடைவையில் அப்படியே பச்சக் என்று நெஞ்சில் ஒட்டிக்கொள்கின்றார்.
அதே போல கேமராமேன் ஓம்பிரகாஷ்.. பிரேமுக்கு பிரேம் அசத்தி இருக்கின்றார்… அயன் பாக்ஸ் சூட்டினால் நாயகியின் வயிற்றில் ஏற்ப்பட்ட காயம். அதன் பின் அவர் சின்ன கட்டம் போட்ட புடவையில் நாயகனோடு ஒடுகின்றார் கடலில் குதிக்கின்றார்… ஒரு இடத்தில் கூட புடவை நகராத அளவுக்கு இடுப்பு தெரிந்துவிடக்கூடாது என்று பிரேம் வைத்து எடுத்ததோடு கண்டிணியுட்டி பார்த்து எடுத்து இருக்கின்றார்கள்..
ஜெகன் இந்த படத்தில் பெரியதாய் அலட்டவில்லை.. அடக்கியே வாசித்து இருக்கின்றார்.
கார்த்திக் சரியான என்ட்ரி… ஏன் இவ்வளவு நாள் காணமல் போனார் என்று கேட்க வைத்து இருக்கின்றார்… கார்த்திக் எதிரே தனுஷ் அவரை போலவே பேசி நடித்து காட்டும் இடம் அருமையிலும் அருமை.. தியேட்டரில் கரகோஷம்..ஹாரிஸ் ஜெயராஜின் டங்கா மாரி பாட்டுக்குதியேட்ட எழுந்து ஆடுகின்றது… என் எதிர் வரிசையில் ஏழு கல்லூரி பெண்கள் உட்கார்ந்து இருந்தார்கள் எல்லோருமே எழுந்து நின்று ஆடி கொண்டாடிவிட்டார்கள் போங்க…
ஆண்டனி எடிட்டிங் வழக்க போல இன்னும் ஷார்ப் என்றாலும் இன்னும் ஷார்ப்பாக இருந்து இருக்கலாம்..
நாயகிக்கு மனோதத்துவம் செய்யும் டாக்டர் செமையா இருக்காங்க.. ஒரு குளோசப்ல… லிப்ஸ்ட்க் அளவா வச்சிக்கிட்டு அவுங்க பேசும் போது நாம ஹிப்நாட்டிச ம் அடைஞ்ச பிலிங் வருது…ஏம்பா டாக்டர் பேர் என்னன்னு கேட்டு சொல்லுங்க்ப்பு..
கேவி ஆனந் முதல் படத்துல கந்து வட்டி வசூலிக்கவந்து பூந்தொட்டியில ஒன்னுக்கு அடிப்பாரே.. அவர் இந்த படத்துல காளி தனுஷை அட்டக் பண்ணும் கேரக்டரில் நடித்து இருக்கின்றார்..
காளி ஜெயிலில் இருக்கும் காட்சியை கோலங்கள் மூலம் நாட்கள் ஆகிவிட்டது என்று உணர்த்தும் காட்சி அருமை.
=
படத்தின் டிரைலர்
====
படக்குழுவினர் விபரம்.
Directed by K. V. Anand
Produced by Kalpathi S Aghoram
Kalpathi S Ganesh
Kalpathi S Suresh
Written by Subha
(Dialogue)
Screenplay by
K. V. Anand
Subha
Story by
K. V. Anand
Subha
Starring Dhanush
Karthik
Amyra Dastur
Aishwarya Devan
Jagan
Ashish Vidyarthi
Atul Kulkarni
Music by Harris Jayaraj
Cinematography Om Prakash
Edited by Anthony
Production
company
AGS Entertainment
Distributed by AGS Entertainment
Wunderbar Films
Release dates
February 13, 2015
Running time
160 minutes
Country India
Language Tamil
Budget INR40 crores
=====
அனேகன் படத்துக்கு நம்ம வீடியோ விமர்சனம்.
https://www.youtube.com/watch?v=IdnWvZznCRk
====
பைனல் கிக்.
முன்ஜென்மத்துக்கதைகள் தமிழுக்கு புதுசு இல்லை என்றாலும்… டிவைன் லவ்வர்ஸ் என்கின்ற ஒப்பற்ற ஆங்கில காவியத்தை யாரும் மறந்து இருக்கமாட்டார்கள்… கோவை அபஸ்ரா திரையரங்களில் 100 நாட்களுக்கு மேலாக ஓடிய திரைப்படம்…காஜூரோகா சிற்பம் செய்ய நிர்வாண நிலையில் இரண்டு பேரை மாடலாக நிற்க வைத்து சிற்பி செதுக்கு அவர்கள் இரண்டு பேருக்கும் மூட் வந்து மேட்டரை முடிக்க போகும் போது சிற்பி இரண்டு பேரையும் சாகடித்து விடுவான்.. மறுஜென்மத்தில் அதே காதலர்கள் எப்படி தங்கள் காதலையும் காமத்தை தணித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் பார்க்கும் போது அந்த திரைப்படம்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. மூன்று ஜென்ம காதல்.. அதில் ஒரு சஸ்பென்ஸ் என்று கலந்துக்கட்டி அடித்து இருக்கின்றார்கள்..அது போல 1960 மற்றும் 1987 ஆம் ஆண்டு பீரியட் சப்ஜெக்ட்டில் புகுந்து விளையாடி இருக்கின்றார்கள்…
அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
======
படத்தோட ரேட்டிங்.
பத்துக்கு ஏழு.
========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
தொடர்ந்து சினிமா செய்திகள்,வரவிருக்கும்திரைப்படங்கள் பற்றிய சுவையான செய்திகள் சினிமா விமர்சனங்கள் போன்றவற்றை அதாவது சினிமா சம்பந்தமான அனைத்து செய்திகளும் இனி http://www.jackiecinemas.com((ஜாக்கிசினிமாஸ்)) வலைதளத்துக்கு வருகை தந்து முன்பு போல ஆதரவு தர வேண்டுகின்றேன்….