இயக்குநர் – இளங்கோ ராம் ,
நடிகர்கள் – வைபவ் , சுனில், நிஹாரிகா, சாந்தினி ,பாலா சரவணன், முணிஷ்காந்த், VTV கணேஷ்
இசை – அருண் ராஜ்
தயாரிப்பு – ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ், கார்த்திகேயன்
தமிழில் அடல்ட் காமெடி, சிலாப்ஸ்டிக் காமெடி படங்கள் வருவதேயில்லை அந்தக்குறையைப் போக்கும் வகையில் வந்துள்ளது இந்த பெருசு படம்.
இலங்கையில உருவாகி உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்த இப்படம், தமிழில் ரீமேக்காகியுள்ளது.
ஊரில் மதிப்பும், மரியாதையும் உள்ள பெருசு ஒருத்தர் திடீரென இறந்து விடுகிறார். மகன்கள் ஒரு நாள் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்து பார்க்கும்போது டிவி பார்க்கும் பெருசு இறந்து கிடக்கிறார். ஆனால் அவரது மர்ம உறுப்பு ஸ்டாராங்காக நிற்கிறது, அந்த உடலை மற்றவர்களுக்கு காட்ட முடியாத சிக்கல் ஏற்படுகிறது. சடலத்தை காட்டாமல் இருக்கவும் முடியாது, அதே சமயம் அதில் இருக்கும் சிக்கலை மறைக்கவும் முடியாமல் திணறும் குடும்பத்தார், எப்படி பிரச்சனையை சமாளித்து இறுதிச் சடங்கு செய்கிறார்கள் என்பதை நகைச்சுவையாக சொல்வதே இந்த ’பெருசு’ படம்.
வைபவ் குடிகார மகனாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், எப்போதும் மது போதையில் இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் வைபவ், இயல்பான காமெடி மூலம் தனது கதாபாத்திரத்தை கையாண்டிருக்கிறார். அவரது டைமிங் ரியாக்ஷன் அனைவரையும் சிரிப்பில் ஆழ்த்தியுள்ளது ,
மற்றொரு பக்கம் வீட்டின் மூத்த பிள்ளை கதாபாத்திரத்திரல், பல பொறுப்புகளை கவனிக்கும் கதாப்பாத்திரத்தில் சுனில் அசத்தியிருக்கிறார், குடும்ப பொறுப்பை சுமக்கும் மூத்த மகன், மொத்தப் பிரச்சனையை சமாளிக்கும் கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
சுனிலின் மனைவியாக நடித்திருக்கும் சாந்தினி கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், வைபவின் மனைவியாக நடித்திருக்கிறார் நாயகி நிஹாரிகா, காதல் காட்சிகள் குறைவுதான் எனினும் தனக்கு கொடுக்கப்பட்ட கதபாதரித்தில் தன்னால் முடிந்த அளவு ஸ்கோர் செய்துள்ளார்,
பாலசரவணன், முனீஷ்காந்த் ஆகியோரது கூட்டணி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. ரெடிங் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் ஆகியோர் வரும் காட்சிகளும் சிரிப்பை வரவைக்கிறது. தனம், தீபா, கஜராஜ், சுவாமிநாதன், கருணாகரன் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் தலைகாட்டிச் செல்கிறார்கள்.
இந்தப் படத்தில் இசையமைப்பாளர் அருண் ராஜின் இசை பின்னணி இசையில் சொதப்பியிருக்கிறது, டிராமா நாடகத்தின் இசை போல ஒட்டவே இல்லை.
திரைக்கதை முழுக்க வசனங்களால் நிரப்பபட்டிருக்கிறது, ஆனால் அது திரைக்கு வருகையில் நடிகர்களின் ஒருங்கிணைப்பில் மிஸ்ஸாகியிருக்கிறது. மிக சிக்கலான ஆரம்பம் சுவாரஸ்யம் தந்தாலும் அதைத்தாண்டி படத்தில் வேறெதும் சிக்கலகளே இல்லை, அது படத்தை பின்னுக்கு இழுக்க ஆரம்பித்து விடுகிறது.
ஒரே வீட்டுக்குள் கதை நடந்தாலும், தனது வித்தியாசமான கேமரா கோணங்கள் மூலம் காட்சிகளை உயிரோட்டத்துடன் பயணிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சத்யா திலகம்.
இந்தப் படத்தை இளங்கோ ராம் எழுதி இயக்கியிருக்கிறார், அனைவரும் முகம் சுழிக்கும் ஒரு விசயத்தை எந்த ஒரு நெருடல் இல்லாமல், முழுக்க முழுக்க நகைச்சுவையாக நகர்த்தியில் ஜெயித்துள்ளார், ஆனால் திரைக்கதையில் வேறு ஆச்சரியங்களை சேர்த்திருக்கலாம். ஆனாலும் இப்படி ஒரு கதையை குடும்பங்கள் என அனைவரும் பார்க்கும்படி ஒரு நகைச்சுவை படமாக உருவாக்கியதற்கு பாராட்டலாம்.