’ராபர்’ – குற்ற உலகின் சைக்காலஜி

இயக்குனர் – எஸ் எம் பாண்டி
நடிகர்கள் – சத்யா , டேனியல், ஜெய பிரகாஷ், தீபா
இசை – ஜோஹன் சிவனாத்
தயாரிப்பு – இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் – கவிதா

மெட்ரோ என ஒரு படம் வந்தது சென்னையின் செயின்பறிப்பின் பின்னணி ஒரு பகுதியாக அப்படத்தில் சொல்லப்பட்டிருந்தது, மெட்ரோ திரைப்படத்தில் ஒரு பகுதியாக இருந்த அந்த செயின் பறிப்பு சம்பவத்தை, முழு திரைக்கதையாக்கி இத்திரைப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறார்கள். செயின் பறிப்பில் யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள், அவர்களின் பின்னணி என்ன?, அவர்களின் சைக்காலஜி எப்படி வேலை செய்கிறது ? என்பது தான் படத்தின் மையம்.

மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார், அறிமுக இயக்குனர் எஸ் எம் பாண்டி இயக்கியுள்ளார்.

ஐடியில் வேலை இருந்தாலும், பெண்களைக் கவர பணம் தேவைப்படும் இளைஞன் அதற்கு செயின் பறிப்பில் ஈடுபடுகிறான், அவன் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறான், அந்த நகை எங்கு போகிறது, அந்த தொழில் அவனுக்கு எப்படி சிக்கலைத் தருகிறது?, அவனால் பாதிக்கப்பட்டு மகளை இழந்த தந்தை என்ன செய்கிறர என்பது தான் இந்தப்படம்.

சைக்கோ இளைஞனாக சத்யா நடித்திருக்கிறார், அந்த இளைஞனின் சக்கோத்தனத்தை, முதல் படத்திலேயே தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார். ஒரு பக்கம் அப்பாவித்தனம், இன்னொரு முகம் சைக்கோ இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்து காட்டி அசத்தியிருக்கிறார். குற்ற செயல்களில் ஈடுபடும் போது படம் பார்ப்பவர்களையும் பதற வைத்துவிடுகிறார். ஆக்ஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்துள்ளார். அறிமுக நடிகராக ஜெயித்திருக்கிறார்.

இதில் ஹீரோவே வில்லன் தான், ஆனால் இன்னொரு வில்லனாக டேனியல் போப் நடித்திருக்கிறார். அவர் ஐடி வேலையில் இருந்து கொண்டு, ஒரு குற்ற நெட்வொர்க்கை இயக்கிக் கொண்டிருக்கும் வில்லனாக கலக்கி இருக்கிறார். அவரது நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

ஜெயப்பிரகாஷ், தீபா சங்கர், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் தான் படத்தின் பலம், அவர்களின் கதாப்பாத்திரங்கள் சொல்வது தான் படத்தின் கரு ஆனால் அவர்களின் பார்வை படத்தில் குறைவாக உள்ளது.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமார், தனது கேமரா மூலம், காட்சிகளுக்குள் அழைத்து சென்றுவிடுகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜோகன் செவனேஷ், இசை அதிகம் ஒட்டவில்லை. பின்னணி இசை சிறப்பாக உள்ளது.

செயின் பறிப்பின் குற்ற பின்னணியை சொல்ல முயன்றது நல்லது தான் ஆனால் அது தான் படத்தை முழுமையாக ஆக்கரமித்துள்ளது அது ஹீரோயிசமாக காட்டப்படுவது இன்னும் ஆபத்து. கதை வில்லனின் பார்வையில் இருப்பது சோகம்.

ராப்பார் குற்றங்களின் கதை நாம் தான் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என சொல்லும் கதை.