ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!

ஹாலிவுட் நிறுவனமான MOB SCENE ஐ கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!

இளையராஜா பயோபிக்கை தயாரிக்கும் கன்நெக்ட் மீடியா நிறுவனம், ஹாலிவுட் நிறுவனமான மாப் சீன் நிறுவனத்தைக் கைப்பற்றியது !!

ஆவதார், ட்யூன், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஜுராசிக் வேர்ல்ட், பார்பி, மற்றும் ‘ஏ கம்ப்ளீட் அன்நோன்’ ஆகிய ஹாலிவுட் வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்த MOB SCENE நிறுவனத்தைக் கைப்பற்றியது CONNEKKT MEDIA நிறுவனம் !!

ஆசியாவின் வேகமாக வளர்ந்து வரும் மீடியா மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான CONNEKKT மீடியா, ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான மார்க்கெட்டிங் ஏஜென்சியான மாப் சீனை தற்போது கைப்பற்றியுள்ளது. ஹாலிவுட்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்கள் மற்றும் சீரிஸ்களின் பாராட்டைப் பெற்ற மார்க்கெட்டிங் விளம்பரங்களை உருவாக்குவதில் மாப் சீன் கடந்த இருபது ஆண்டுகளாக முன்னணி சக்தியாக இருந்து வருகிறது.

மாப் சீன், ஆவதார், ட்யூன், ஜுராசிக் வேர்ல்ட், பஸ்ஸ் இன் பூட்ஸ், தி லாஸ்ட் ஆஃப் அஸ், மார்வலஸ் மிஸ்ஸஸ் மைசெல் மற்றும் ‘‘ஏ கம்ப்ளீட் அன்நோன்’ போன்ற வெற்றிப் படங்களுக்கு வெற்றிகரமான மார்க்கெட்டிங்க் விளம்பரங்களை உருவாக்கியுள்ளது. மேலும், பாஸ்ட் & ஃப்யூரியஸ், ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ், குங்-ஃபூ பாண்டா, மினியன்ஸ் ஆகிய பிரபலமான படைப்புகளின் பிரச்சாரங்களிலும் மாப் சீன் குறிப்பிடத்தக்க சாதனைகளைச் செய்துள்ளது.

தற்போதைய இந்த ஒப்பந்தத்தின் மூலம், CONNEKKT மீடியா, உலகளாவிய மீடியா மற்றும் பொழுதுபோக்கு துறையில் தன்னுடைய நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ், மும்பை, துபாய், டெல்லி NCR ஆகிய நகரங்களில் உள்ள கிளைகளுடன், மாப் சீனை சேர்த்துக் கொண்டிருப்பதன் மூலம், CONNEKKT மீடியா உலகளாவிய சந்தையில் ஒரு பெரிய சக்தியாக மாறியுள்ளது. மாப் சீனுக்காக இந்த ஒப்பந்தத்தை க்ரெக் பெட்ரோசியன் மற்றும் மோகித் பாரீக் (Drake Star) ஆகியோர் வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளனர்.

மாப் சீன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் CEO டாம் கிரேன் கூறியதாவது..,
“CONNEKKT மீடியாவுடன் இணைவது மாப் சீனுக்கான ஒரு புதிய உற்சாக அத்தியாயமாகும். அவர்களின் முன்னணி ஊடக தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு துறையின் ஆழமான புரிதல், எங்களின் படைப்பாற்றல் கண்ணோட்டத்துடன் மிகச்சரியாக இணைகிறது. இந்த கூட்டணியின் மூலம், உலகளாவிய சந்தைகளில் எங்கள் பாதை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களின் மனங்களைக் கவரும் எமோஷனல் பிரச்சாரங்களை, விளம்பரங்களை இணைந்து உருவாக்குவதன் மூலம், புதிய எல்லைகளுக்குச் செல்வது சாத்தியமாகியுள்ளது,” என்று தெரிவித்துள்ளார்.

CONNEKKT மீடியாவின் இணை நிறுவனர் வருண் மத்தூர் கூறியதாவது..,
“மாப் சீன், ஹாலிவுட் திரைப்பட மார்க்கெட்டிங்கில் நிகரற்ற தரத்தைக் கொண்ட நிறுவனமாக உள்ளது. அவர்களின் படைப்பாற்றல் திறனை எங்கள் பங்குதாரர்களான ஐக்கிய நாடுகள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா மற்றும் ஆசியாவுக்குப் பரப்புவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவில் தொடங்கிய ஒரு உலகளாவிய மீடியா நிறுவனமாக, இந்த ஒப்பந்தம், எங்களுக்கான அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் பெற்ற ஒரு மாபெரும் வளர்ச்சியாகும். மாப் சீனின் முன்னணி படைப்பாற்றல் திறனையும், எங்களின் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தையும் இணைக்கும் போது, புவியியல் எல்லைகளைக் கடந்து, பல புதிய வடிவங்களில் மிகத் தீவிரமான மார்க்கெட்டிங் தாக்கத்தை, எங்கள் வாடிக்கையாளர்களுக்கும், பயனர்களுக்கும் வழங்க முடியும் ”