நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ரா.சவரி முத்து இயக்குனராக அறிமுகமாகும் படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது!

 

Dwarka Productions தயாரிப்பில், பிளேஸ் கண்ணன் – ஶ்ரீலதா பிளேஸ் கண்ணன் வழங்கும், அறிமுக இயக்குநர்  ரா.சவரி முத்து இயக்கத்தில், ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி நடிப்பில் கலக்கலான காமெடி படமாக உருவாகும் புதிய திரைப்படம், பூஜையுடன் இனிதே துவங்கியது.இப்படத்தின் பூஜை,  திரையுலக பிரபலங்களுடன் படக்குழுவினர் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

டார்லிங்க், இரும்புத்திரை, அண்ணாத்தே, ஹீரோ, மற்றும் மார்க் ஆண்டனி படங்களில், திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய  ரா.சவரி முத்து இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

ஒரு மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் கலகலப்பான காமெடியுடன், பரபரப்பான திரைக்கதையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் ரசித்துச் சிரிக்கும் ஒரு அருமையான படைப்பாக இருக்கும்.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பக்ஸ், சேஷு, மாறன், ஆதித்யா கதிர், கராத்தே கார்த்தி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.