“ 1947 ஆகஸ்ட் 16” திரைப்பட அதிகாரப்பூர்வ டீசர் வெளியானது !

 

நம்மைப் பெருமைப்படுத்தும் ஒரு காலகட்டத்தின் கதை! ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் ‘1947 ஆகஸ்ட் 16’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டது

A.R. Murugadoss production மற்றும் Purple Bull Entertainment நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் 1947 ஆகஸ்ட் 16 படத்தின் முதல் பார்வை வெளியானதிலிருந்தே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ரசிகர்கள் படம் குறித்த செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

இப்போது, இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தின் புனிதமான மற்றும் பிரமாண்டமான சந்தர்ப்பத்தில், தயாரிப்பாளர்கள் இறுதியாக இப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசரை வெளியிட்டுள்ளனர். கௌதம் கார்த்திக் மற்றும் அறிமுக நடிகை ரேவதி நடிப்பில், இந்திய சுதந்திர போராட்ட காலகட்டத்தில், ஒரு தொலைதூர கிராமத்தில் ஒருவன் பிரிட்டிஷ் படைகளுடன் போராடும் புகழ்மிகு கதையை இப்படம் சொல்கிறது.

டிராமா, உணர்ச்சி மிகு தருணங்கள், காதல் மற்றும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த டீஸர், பார்வையாளர்கள் அனைவரிடத்திலும், தேசிய உணர்வு மற்றும் பெருமையுடன் அவர்களின் உணர்வுகளை தூண்டும் ஒரு சிலிர்ப்பான பயணத்தை தரும்படி அமைந்துள்ளது.

Purple Bull Entertainment வழங்கும், “1947 ஆகஸ்ட் 16”, திரைப்படத்தை A.R. Murugadoss production சார்பில், A.R. முருகதாஸ் ஓம் பிரகாஷ் பட் மற்றும் நரேஷ் சௌத்திரி தயாரிக்கின்றனர். ஆதித்யா ஜோஷி இணை தயாரிப்பு செய்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.