ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் தமிழ், கன்னட இருமொழி திரைப்படம் ‘நிபுணன்’ மற்றம் ‘விஸ்மயா’. அர்ஜுனோடு இணைந்து சக அதிகாரிகளாக கைகோர்த்துள்ளனர் பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார். ‘லூசியா’ என்ற கன்னட வெற்றிப் படத்தின் கதாநாயகி ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுனுக்கு மனைவியாக நடிக்கிறார். சுமன், சுஹாசினி மணிரத்னம் வைபவ் மற்றும் பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். தமிழில் ‘நிபுணன்’, கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்ற தலைப்புகளில் தயாராகிக்கொண்டிருக்கும் இந்த இருமொழி திரைப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு மற்றும் தமிழகத்தில் நடைபெற்றது. அமெரிக்கா வாழ் தமிழர் அருண் வைத்யநாதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் ஏற்கனவே அச்சமுண்டு அச்சமுண்டு, பெருச்சாழி (மலையாளம்) படங்களை இயக்கியவர். நிபுணன் படப்பிடிப்பு சமீபத்தில் முழுவதுமாக முடிவடைந்து குரல் பதிவு, இசைக்கோர்வை மற்றும் அனைத்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முடுக்கிவிடப்பட்ட நிலையில், இதன் கதையைக்கேட்டு உற்சாகமடைந்த ஒரு பிரபலம் தற்போது நிபுணன் குழுவில் இணைந்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, சமீபத்தில் உலகம் முழுக்க பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான ‘நெருப்புடா’ பாடலுக்கு சொந்தக்காரர் அருள்ராஜ்’. ‘நெருப்புடா’ பாடலுக்கு இணையாக நிபுணன் பாடலும் இருக்கும் என்கிறார் அருள்ராஜ். நிபுணன் படத்தினை பேஷன் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம், உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம் மற்றும் அருண் வைத்யநாதன் தயாரிக்க, ஒளிப்பதிவு செய்கிறார் அர்விந்த் கிருஷ்ணா. இசை : எஸ்.நவீன், படத்தொகுப்பு : சதீஷ் சூர்யா, ஆர்ட் : ஆறுசாமி, ஸ்டண்ட் : அன்பறிவ் மற்றும் சுதேஷ், மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா மற்றும் நிகில். வெகுவிரைவில் ‘நிபுணன்’ ரசிகர்களை குஷிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை.