இயக்குனர் அறிவழகன் இயக்கி, அருண் விஜய் நடிப்பில் மெடிக்கோ – கிரைம் – திரில்லராக உருவாகி வரும் ‘குற்றம் 23’ திரைப்படமானது அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகளவில் பெற்று வருகிறது. வலுவான கதை களத்தையும், திறமையான கலைஞர்களையும் கொண்டு உருவாகியுள்ள குற்றம் 23 படத்தின் இரண்டவாவது போஸ்டரை இன்று மாலை 4.30 மணிக்கு வெளியிட்டார் நடிகை திரிஷா.
‘வெற்றிமாறன் ACP’ என்று அழைக்கப்படும் இந்த போஸ்டரை நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆர்த்தி அருணின் ‘இன் சினிமாஸ் என்டர்டைன்மெண்ட்’ நிறுவனத்தோடு இணைந்து ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் உரிமையாளர் இந்தெர் குமார் தயாரித்து இருக்கும் குற்றம் 23 திரைப்படம், அருண் விஜய்யை வேறொரு பரிமாணத்தில் காட்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.