தமிழரசன் பட விழாவில் இயக்குனர் மோகன் ராஜா, தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி , கே.விஜயகுமார், செளந்தர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் மிலன் தயாரிப்பாளர் கெளசல்யா ராணி, இயக்குனரும் தயாரிப்பாளருமான G.சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஜய் ஆண்டனியுடன் மாஸ்டர் பிரணவ் மோகன் நடித்த காட்சியை இளையராஜா துவக்கி வைக்க படமாக்கப் பட்டது.
விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்.
மாஸ்டர் பிரணவ் மோகன் முதன் முறையாக காமிரா முன் நின்றாலும் அவரது பின்னணி என்னவோ பலமானது. இவர் எடிட்டர் மோகனின் பேரன். டைரக்டர் மோகன் ராஜாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர் உயர்ந்து வந்தவுடன் தான் பட்ட கஷ்டங்களை நினைத்து தன் வாரிசுகளை அந்த துறையில் ஈடுபடுத்த மாட்டார்கள்..
ஆனால் எடிட்டர் மோகன் அவர்கள் தான் பெற்ற வெற்றியை தன் வாரிசுகளான மோகன் ராஜாவை இயக்குனராகவும், ரவியை ஜெயம்ரவியாகவும் வெற்றி பெற செய்திருக்கிறார்.அவர்களும் தங்கள் வாரிசுகளை திரைத்துறையில் நம்பி களம் இறக்கி இருக்கிறார்கள்.
ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கெனவே டிக் டிக் டிக் படத்தில் நடிகராக களம் இறங்கி வெற்றி பெற்றிருக்கிறார்.
இப்போது தமிழரசன் மூலம் பிரணவ் மோகன் களம் காணுகிறார்.
பிரணவ் மந்திரம் போல பிரணவ் மோகனின் பெயரும் திரையுலகில் ஓங்கி ஒலிக்கட்டும்.