“நமது உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு Peace for children அறக்கட்டளையும் அதன் அனைத்து உறுப்பினர்களும் மற்றும் உலகத்தில் உள்ள அனைத்து குழந்தைகளின் சார்பாகவும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
மிக சிறப்பான இப்பிறந்தநாளை மேலும் முக்கியமான ஒன்றாக்க இந்நாளில் எங்களது கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் (TOLL FREE NUMBER) குழந்தை பாதுகாப்பிற்கான ஒரு செயலியையும் (APP) வெளியிடுகிறோம்.
இந்நன்னாளில் இதை வெளியிடுவதற்கு ஒப்புதல் கொடுத்த உயர்திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மீண்டும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.”