Tribute to Music Director mellesai mannar M.S. Viswanathan |மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதனுக்கு சமர்பணம்.

எம் எஸ் விஸ்வநாதன் எனும் சகாப்தம்.

05sept_tysms01__MU_1576721e

காலதேவன் மிகவும் விசித்திரமானவன் ….குப்பை மேட்டை கோபுரம் ஆக்குவான்… கோபுரத்தை குப்பை மேடாக்குவான்…. வாழ்வின் கணங்களை சீட்டு கட்டு போல கலைத்து போட்டு ஆடும் வல்லமை படைத்தவன் அவன்…

இல்லையென்றால், கேரளா திரையரங்குகளில் இடைவேளையின் போது வடை முறுக்கு விற்ற பையனை , கோவை ஜூபிடர் நிறுவனத்தில் காபி டீ வாங்கி கொடுத்து, எடு புடி வேலை பார்த்த பையனை ,தமிழ் திரைப்பட உலகில் 1200க்கு மேற்ப்பட்ட படங்களுக்கு இசையமைக்க வைத்து அழகு பார்த்து இருக்குமா????

அந்த எடுபிடி வேலை செய்த பையன்தான்… தமிழகத்தில் நான்கு தலை முறை மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட மெல்லிசை மன்னர் எம்எஸ்விஸ்வநாதன்.

மனயங்கத். சுப்பிரமணியன். விசுவநாதன் அல்லது எம். எஸ்.வி என்று செல்லமாக அழைக்கப்படும் மெல்லிசை மன்னர் … 1928 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் தேதி, கேரளாவில் உள்ள பாலக்காட்டில் பிறந்தார்.

மழைக்கு கூட பள்ளிகூடம் பக்கம் ஒதுங்காதவர். அது மட்டுமல்ல எம்எஸ்விக்கு சினிமாவில் பாடவும், நடிக்கவும் மிகுந்த விருப்பம் ஆனாலும் காலதேவன் ஆர்மோனிய பொட்டியை எம்எஸ்வி கையில் கொடுத்து அழகு பார்த்தான்.

இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் எம்எஸ்வி ஆர்மோனியம் வாசிப்பவராகவும் டி. கே. ராமமூர்த்தி வயலின் வாசிப்பவராகவும் பணிபுரிந்தார்கள்.
உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் இசையமைத்து முடித்துக்கொடுத்தார்கள் . டைட்டிலில் இணை இசையமைப்பாளர்கள் என்ற கிரீடத்தை சூட்டினார்கள்..

விஸ்வநானதன் ராமமூர்த்தி இருவரும் சேர்ந்து பணம் என்ற திரைப்படத்திற்குதான் முதன் முதலில் இசையமைத்தார்கள் . ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை 700 படங்களுக்கு மேல் இணை பிரியாது இசையமைத்தார்கள். அதன் பின் ராமமூர்த்தியின் ஒப்புதலோடு இவர் தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

1963ம் ஆண்டு மெட்ராஸ் ட்ரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் நடைபெற்ற விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது
புகழ் பெற்ற இயக்குனர்களான ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் போன்ற இயக்குநர்களிடம் மற்ற இயக்குனர்களை விட, அதிகமாக வேலை பார்த்திருக்கிறார்.

அரசு விழாக்களில் இன்றளவும் ஒலிக்கும் தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு, மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் மெல்லிசை மன்னர் எம்எஸ்விதான்..
மனித நேயத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக எம்எஸ் வி அவர்களை சொல்லலாம்… அவரது அசான் எஸ்.எம்.சுப்பையா நாயுடுவை கடைசி காலத்தில் தன் வீட்டில் வைத்து கவனித்ததுடன் அவர் மறைந்தபோது பெற்ற பிள்ளை போல ஈமச்சடங்கு செய்ததும் மெல்லிசை மன்னர்தான் . அத்துடன் சுப்பைய்யா நாயிடுவின் மனைவியையும் கடைசி மூச்சுவரை இவர் பாதுகாப்பில் இருந்தார் என்பது வரலாறு…

நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்ததும் மெல்லிசை மன்னர்தான்… காலம் சென்ற கவியரசு கண்ணதாசன் மெல்லிசை மன்னருக்கும் மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடதக்கது.

கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் எம்எஸ்வி..
மெல்லிசை மன்னர் தன் இசைத் துறையில் தனக்கு பின்னால் வந்த இளையதலைமுறையினர் வளர்ச்சியை பார்த்து ஒரு போதும் மனம் குமைந்தது இல்லை. அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு…. இளையராஜா, ஏஆர் ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற அனைத்து இசையமைப்பாளர்களிடமும் பின்னனி பாடி இருக்கிறார்

நடிகராகவும் பாடகராகவும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று நினைப்புக்கொண்ட விஸ்வநாதன் என்ற இளைஞனை 13 வயதில் ஆர்மோனிய பெட்டியை கையில் கொடுத்து நான்கு தலைமுறை ரசிகர்களை கட்டி போட வைத்து அழகு பார்த்ததும் இதே காலதேவன்தான்…
கடைசி வரை எம்எஸ்விக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பத்ம விருதுகளை அவருக்கு கொடுத்து கவுரவிக்காமல் ,வழக்கம் போல வடக்கே அரசியல் சதி செய்தது… ஆனால் அது பற்றி எம்எஸ்வி கிஞ்சித்தும் அலட்டிக்கொள்ளவில்லை… மக்கள் இதயங்களில் குடி கொண்டு இருக்கின்றேன்…. அதை விட பத்ம விருது பெரிதா ? என்று பொதுவெளியில் எம் எஸ் வி தெரிவித்தார்…

முதுமை எந்த நாயகனையும் உருகுலைத்து விடும் சக்தி கொண்டது.. அது மெல்லசை மன்னரையும் விட்டு வைக்கவில்லை. 14/07/2015அன்று விடியற்காலை 4,30 மணியளவில் மெல்லிசை மன்னர் இப்பூவுலகை விட்டு மறைந்தார்…

கலைஞர்கள் மரணிப்பது இல்லை…. அவர்களின் திறமையால் நம்மோடு வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள்… என்எஸ்கிருஷ்ணன், நாகேஷ், எம்ஆர் ராதா ,கண்ணதாசன், பாலச்சந்தர் வரிசையில் தற்போது மெல்லிசை மன்னரும்.
மெல்லிசை மன்னர் எம்எஸ்விஸ்வநாதன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்..

ஜாக்கிசேகர்
ஜாக்கிசினிமாஸ்

எம் எஸ் விஸ்வநாதன் எனும் சகாப்தம்.

காலதேவன் மிகவும் விசித்திரமானவன் ….குப்பை மேட்டை கோபுரம் ஆக்குவான்… கோபுரத்தை குப்பை மேடாக்குவான்….
வாழ்வின் கணங்களை சீட்டு கட்டு போல கலைத்து போட்டு ஆடும் வல்லமை படைத்தவன் அவன்…

இல்லையென்றால், கேரளா திரையரங்குகளில் இடைவேளையின் போது வடை முறுக்கு விற்ற பையனை , கோவை ஜூபிடர் நிறுவனத்தில் காபி டீ வாங்கி கொடுத்து, எடு புடி வேலை பார்த்த பையனை ,தமிழ் திரைப்பட உலகில் 1200க்கு மேற்ப்பட்ட படங்களுக்கு இசையமைக்க வைத்து அழகு பார்த்து இருக்குமா????

அந்த எடுபிடி வேலை செய்த பையன்தான் ….தமிழகத்தில் நான்கு தலை முறை மக்களை தன் இசையால் கட்டிப்போட்ட மெல்லிசை மன்னர் எம்எஸ்விஸ்வநாதன்

‪#‎msviswanathan

‪#‎msv‬

‪#‎msvRip‬

#msv

‪#‎எம்எஸ்விஸ்வநாதன்‬.