சென்னை. பிரபல குச்சுபுடி கலைஞர் ஷைலஜாவுக்கு பாரதீய வித்யா பவன் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. சென்னையில் வரும் சனிக்கிழமை நவ.19 நடைபெறும் விழாவில் ஷைலஜாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த விருதை வழங்குகிறார்.
சென்னையைச் சேர்ந்த ஷைலஜா பரதநாட்டியம், குச்சுபுடி போன்ற பாரம்பரிய நாட்டியக் கலைகளில் தேர்ச்சி பெற்றவர். குச்சுபுடி நடனக் கலைக்காக கடந்த 40 ஆண்டுகளாக இவர் ஆ்ற்றி வரும் சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான நடன நிகழ்ச்சிகளை நடத்தியவர். வெளிநாட்டு மாணவர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குச்சுபுடி நடனக் கலையைப் பயிற்றுவித்தவர்.
பாரதீய வித்யா பவன் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறும் முதல் குச்சுபுடி நடனக் கலைஞர் ஷைலஜா என்பது குறிப்பிடத்தக்கது.