இயக்குனர் மீரா கதிரவன் வாழ்க்கையில் விழித்திரு தந்த பாதிப்பு போல வேறு எந்த திரைப்படமும் இவ்வளவு பாதிப்பை கொடுத்து இருக்கின்றாது என்று நினைக்கிறேன்.2015 இல் முடிந்த படம் இரண்டு வருடம் வருமா வராதா என்று ஜல்லியடித்துக்கொண்டு ஒரு வழியாக வெளிவந்து இருக்கின்றது..
விழித்திரு படத்தின் கதை.
ஒரே இரவில் நடக்கும் நான்கு கதைகள் ஒரு புள்ளிளில் இணையும் ஒன்லைன்… ஆனாலும் சுவாரஸ்ய படுத்தி இருக்கின்றார்.
கிருஷ்ணா விதார்த் வெங்கட் பிரபு எரிக்கா பெர்ணான்டஸ் எல்லோரும் பாத்திரம் உணர்ந்து நடித்து இருக்கின்றார்கள்.
சின்ன சின்ன விஷயங்களில் ஒளிர்ந்தாலும் கொஞ்சம் கத்திரி படத்துக்கு தேவை என்பதை ஒத்துக்கொள்ளத்தான வேண்டும்.
ஒரே இரவில் நடக்கும் கதை என்பதாலேயே ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கொண்டு இருப்பார் விஜய் மில்டன் முழுக்க முழுக்க இரவு நேர சென்னையை கண் முன் நிறுத்துக்கின்றார்கள்.
லாஜிக் மிஸ்டேக் இருக்கின்றது ..
ஆனாலும் இந்த படத்தை ரசிப்பதில் மோசமில்லை. விழித்திரு நிச்சயம் டைம்பாசுக்கு கண்டிப்பாக பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?v=N5EyI4cMZUg