சரியாக இதே நாளில் (அக்டோபர் 2)நான்கு வருடங்களுக்கு முன்பு,கோகுல் இயக்கத்தில்,விஜய்சேதுபதி நடித்து வெளிவந்தபடம் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்பாலகுமாரா’. இப்படத்தில்இடம்பெற்ற வித்தியாசமானகாமெடிக் காட்சிகள் மூலம் ‘சுமார்மூஞ்சி குமார்’ ஆகபட்டிதொட்டியெங்கும் பரவலாகப்பேசப்பட்டார் நடிகர் விஜய்சேதுபதி.இப்போது மீண்டும் இதே தேதியில்(அக்டோபர் 2) தங்களது அடுத்தபடமான ‘ஜுங்கா’ படப்பிடிப்பிற்காக பாரிஸ் நகரத்தில்கைகோர்த்துள்ளது நடிகர்விஜய்சேதுபதி, இயக்குனர் கோகுல்,இசையமைப்பாளர் சித்தார்த் விபின்கூட்டணி. ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில்இந்த வெற்றிக்கூட்டணி நிகழ்த்தியகாமெடி கதகளி ஆட்டம்இப்போதுவரை சோசியல்மீடியாவிலும், தொலைக்காட்சிசேனல்களிலும் தொடர்ந்துபேசப்பட்டு வருகிறது.
இப்போது இதே போன்றதொரு காமெடி மாயாஜாலத்தை நிகழ்த்த ‘ஜுங்கா’ மூலம் பரபரப்பாக இயங்கி வருகின்றனர். இப்படத்திற்கான 30நாட்கள் கொண்ட முதல் ஷெட்யூல்படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 2)பாரிஸ் நகரத்தில் துவங்கியுள்ளது. ‘வனமகன்’ படத்தின் மூலம்ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகஅறிமுகமான சாயிஷா சாய்கல்‘ஜுங்கா’ படத்தின் நாயகியாகஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜாலிபாடல்களையும், மெலடிமெட்டுக்களையும் ‘இதற்குத்தானேஆசைப்பட்டாய் பாலகுமாரா’விற்காகஉருவாக்கித் தந்த சித்தார்த் விபின்இப்படத்திற்கும்இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார்.
இதுவரை விஜய்சேதுபதி நடித்துள்ளபடங்களிலேயேமிகப்பிரம்மாண்டமான படமாகஉருவாகவுள்ளது ‘ஜுங்கா’திரைப்படம். இப்படத்தைவிஜய்சேதுபதியே தன்னுடையசொந்த பேனரில் தயாரிப்பதால்,படம் மீதான ரசிகர்களின்எதிர்பார்ப்பு அதிகரித்து, படப்பிடிப்புதுவங்குவதற்கு முன்பே இப்படம்சம்பந்தப்பட்ட வியாபாரம்முடிந்துவிட்டது. படத்தின் பூஜைசமயத்திலேயே அப்படத்தின்வியாபாரங்கள் தொடங்குவதுஇதற்கு முன்பு சூப்பர்ஸ்டார்ரஜினிகாந்த் படங்களுக்கு மட்டுமேநிகழ்ந்துள்ள அதிசயம் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஏ அன்ட் பி குரூப்ஸ் இப்படத்தின்உரிமையை மிகப்பெரியவிலைகொடுத்து வாங்கியுள்ளதுதமிழ்த் திரையுலகில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
யோகி பாபு உட்பட பலநட்சத்திரங்கள் ‘ஜுங்கா’ படத்தில்நடிக்கிறார்கள். இவர்களின்கூட்டணியோடு விஜய்சேதுபதியின்‘கல கல’ காமெடி எபிசோடுகளைப்பார்க்க இப்போது ரசிகர்கள் பெரியஎதிர்பார்ப்பிலிருக்கின்றனர்.