பேட்மிட்டன் அணியை வாங்கிய கேப்டன் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தற்போது ஸ்னூக்கர் லீக்கின் ( Snooker league) ன் சென்னை ஸ்ட்ரிக்கர்ஸ் அணியையும் வாங்கியுள்ளார்.சென்னை ஸ்மாஷர்ஸ் அணியில் பி,வி .சிந்து உள்ளிட்ட பல திறமை வாய்ந்த வீரர்களை தேர்வு செய்தது போல் இந்த சென்னை ஸ்ட்ரிக்கர்ஸ்(Chennai strikers) அணியிலும்
1)பெங்களூரை சேர்ந்த பங்கஜ் அத்வானி ( Mr. Pankaj Advani),2)சென்னையை சேர்ந்த வித்யா பிள்ளை ( Mrs.Vidhya Pillai) , 3)பஞ்சாப்பை சேர்ந்த தர்மிந்தர் லில்லி (Mr.Dharminder Lilly) ,4)டெல்லியை சேர்ந்த பைசல் கான் ( Mr. Faisal Khan)மற்றும் ஆந்திராவை சேர்ந்த பாண்டு ரங்கையா(Mr. Pandu Rangaiah) ஆகிய வீரர்கள் விளையாடுகிறார்கள்.இதன் தலைமை பயிற்சியாளராக ஜி.கிஷோர் கொரானா( Mr.G.Kishore Khurana) நியமிக்கப்பட்டுள்ளார்.
*இதில் பங்கஜ் அத்வானி என்பவர் ஆண்கள் பிரிவில் 16 முறை உலக சாம்பியன் பட்டமும்,ஆசிய விளையாட்டில் 2 தங்க பதக்கமும் ,7முறை ஏசியன் டைட்டில் வின்னராகவும் ,ஒருமுறை ஆஸ்திரேலியன் ஓப்பனராகவும் 29 முறை தேசிய அளவில் டைட்டில் வின்னராகவும் தேர்தெடுக்கப்பட்டவர் இந்திய அளவில் ஆண்கள் பிரிவில் முதன்மையானவர் ஆவார்.
*வித்யா பிள்ளை இந்த ஆண்டு (2017)ஈடன் வேர்ல்டு மகளிர் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப்பாகவும்,2016ம் ஆண்டு ஏகலவ்யா விருதையும், 2016 ஆண்டு
சர்வதேச பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர் ஃபெடரேஷன் ( IBSF ) பெண்கள் தர வரிசையில் சம்பியன்ஷிப்பாகவும் ,2013ம் ஆண்டு சர்வதேச அளவில் தங்க பதக்கமும்,2010ம் ஆண்டு ஆஸ்திரேலியன் பெண்கள் ஓப்பன் ஸ்னூக்கர் சாம்பியன் போட்டியில் தங்கமும் ,25 முறை தேசிய அளவில் சம்பியன்ஷிப் டைட்டில் வின்னராகவும் வெற்றி பெற்றுள்ளார்,பெண்கள் பிரிவில் இந்திய அளவில் முதன்மையானவர் ஆவார்.
இப்படியாக உலகில் சிறந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்களையே தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது இதில் சென்னை ஸ்டிக்கர்ஸ்(Chennai strikers) அணியுடன் ,டெல்லி டான்ஸ்(Delhi dons) அணியும்,பெங்களூரு பட்டிஸ்(Bengaluru buddies) அணியும் ,குஜராத் கிங்ஸ்(Gujarat kings) அணியும் கலந்து கொண்டது, இந்த ஸ்னூக்கர் ஸ்கூப் லேம்ப்
போட்டி வரும் ஆகஸ்ட் 19 முதல் 26 வரை அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது.