கவுதம் கார்த்திக் வரும் போதே மோதிர கையால் குட்டு வாங்கி வந்தவர்… கடல் படத்தில் மணிரத்னம் குட்டு வைக்கும் போது..
மோதிரம் அணியவில்லை என்று எண்ணுகின்றேன்…
பெரிய பிரேக் இல்லாமல் விழுந்து புரண்டு கொண்டு இருந்தார்.
அவருக்கு அவருடைய கெரியரில் சொல்லிக்கொள்ள ஒரு படம் கிடைத்து இருக்கின்றது..
அதுவும் இயக்குனர் கண்ணன் மூலமாக… படத்தில் ஆர் ஜே பாலாஜிதான் நீண்ட நெடிய வசனங்களை பேசினாலும்… ரசிக்க வைக்கின்றார்..
முக்கியமாக ஆட்டோ டிரைவர்களிடம் . ஓலா உபர் வந்ததும்.. உங்களுக்கு காத்து வாங்குது இல்லை என்றதும் ஆட்டோ டிரைவர் ஆம் என்பார்..
அதுக்கு நீங்க மீட்டர் போட்டு ஒட்டி இருந்தா.. நாங்களும் இப்ப சப்போர்ட் பண்ணி இருப்போம் என்று சொல்லும் போது ரசிக்க வைக்கின்றார்..
இவன் தந்திரன்.. என்ஜினியரிங் கல்லூரி மாணவர்களின் இன்னல்களை பிரித்து மேய்ந்து இருக்கும் படம்
https://www.youtube.com/watch?v=sZSbQo-LaYE