சசியின் சொல்லமாலே திரைப்படத்தையும் அவர் எடுத்த மொழி படத்தையும் மிக்சியில் போட்டு சுவிட்ச் போட்டாலோ அல்லது.. கிரைன்டரில் அரைத்தா ரிசல்ட் பிருந்தாவனம் திரைப்படமாக இருக்கும்…
இன்னும் எத்தனை நாளைக்குதான் ராதாமோகன் அரைத்த மாவையே அரைக்க போகின்றார்.?
எம் எஸ் பாஸ்கரை அவர் படத்தில் பார்த்து போர் அடித்து விட்டது…
மொழி படத்தை பார்த்தது போல ஒரு எபெக்ட்… என்று இப்படியெல்லாம் பிருந்தாவனம் திரைப்படத்துக்கு என்னாலும் விமர்சனம் எழுத முடியும்..
ஆனால் ராதாமோகன் தமிழ் சினிமாவின் பாசிட்டிவ் வைபரேஷனுக்கு சொந்தக்காரர்..
அவருடைய எந்த திரைப்படத்திலும் நெகட்டிவ் வைபரேஷன் இருக்கவே இருக்காது..
இந்த திரைப்படத்திலும் அதேதான்.. அது மட்டுமல்ல வயிறு குலுங்க சிரிக்க மற்றும் சிந்திக்க வைக்கும் வசனங்கள் இந்த படத்திலும் உண்டு
https://www.youtube.com/watch?v=9Zs9cn06ap0