இசை என்பதே, ஏகாந்தமான ஒன்று. அதிலும் சினிமா இசை, காலம்தோறும் தன்னை புதுப்பித்துக்கொள்கிறது. சினிமாவின் அடிநாதமாக இருக்கும் பாடல்களையும், பின்னணி இசையையும் உருவாக்குவதில் முக்கியமான அங்கம் வகிப்பவை ஒலிப்பதிவு கூடங்கள் என்று அழைக்கப்படுகிற ஸ்டுடியோக்கள்.
அந்த வகையில், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், இசைக்கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக உருவாகி உள்ளது, “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ. சென்னை அசோக் நகரில், அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அழகான அட்மாஸ்பியர் கொண்ட “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோவை அதிக பொருட்செலவில் உருவாக்கி உள்ளார், இசையமைப்பாளர் மாரீஸ் விஜய். ’விஞ்ஞானி’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மாரீஸ் விஜய். இந்த ஸ்டுடியோவின் திறப்பு விழா மார்ச் 9ம் தேதி நடைபெற்றது.
திறப்புவிழாவில் கலந்து கொண்ட ஸ்டுடியோவை பார்வையிட்ட, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, பாடகர்கள், மதுபால கிருஷ்ணன், ஹரி சரண், ரஞ்சித், அபய் ஜோத்பூர்கர், பாடகிகள் சின்மயி, வந்தனா சீனிவாசன், ப்ரியா ஹிமேஷ், அனிதா உள்பட சினிமா பிரபலங்கள் அனைவரும் டிரினிட்டி ஸ்டுடியோஸ், அமைப்பிலும் அழகிலும் தங்களுக்கும் மிகவும் பிடித்திருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
“டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோ”வின் சிறப்பம்சங்கள்!
· அதி நவீன ரெக்கார்டிங் தியேட்டர்கள்
· உலகத்தரம் வாய்ந்த அக்வாஸ்டிக்
· மிக்ஸிங்
· மாஸ்டரிங்
· 5.1 மற்றும் 7.2 மிக்ஸிங் வசதி
· 360 டிகிரி வளைவுத்திரை கொண்ட 4K தியேட்டர்
· பலவிதமான வண்ண விளக்குகள் (Different Type of Dancing Lights)
· விசாலமான கார் பார்க்கிங்
ஒரு சினிமாவின் பாடல்கள் மற்றும் இசையோடு சம்பந்தப்பட்ட அனைத்து போஸ்ட் புரொடக்சன் வேலைகளும் அதி நவீன தொழில் நுட்பத்துடன், ஒரே இடத்தில் அமைந்திருப்பது “டிரினிட்டி வேவ்ஸ்” ஸ்டுடியோவின் சிறப்பு.
இது குறித்து இசையமைப்பாளர் மாரீஸ் விஜய் கூறும்போது, ‘எனக்கு இசை மீது அதிக ஆர்வம். தரமான இசையை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே இந்த “டிரினிட்டி வேவ்ஸ்” (TRINITY WAVES – FIX THE MIX ) ஸ்டுடியோவை பலகோடி ருபாய் செலவில் உருவாக்கி உள்ளேன். இன்று ஸ்டுடியோவை பார்வையிட்ட அனைவரும் ஸ்டுடியோவின் தரத்தையும் அழகையும் பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்த ஸ்டுடியோவை உருவாக்குவதில் கொஞ்ச நாள் பிஸியாக இருந்தாலும், இப்போது தமிழ், கன்னடம் என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கிறேன். நேர்த்தியான இசை உருவாக்கத்தில், எனக்கு மட்டுமில்லாது, சினிமா, இசையுலக நண்பர்களுக்கும் டிரினிட்டி வேவ்ஸ், சிறப்பாக சேவை செய்யும் என்பது எனக்கு பெருமையாகவும் மகிழ்வாகவும் இருக்கிறது, என்கிறார் மாரீஸ் விஜய்.