முன்னணி நட்சத்திர நடிகர் மாதவன் நடிப்பில், கடந்த ஆண்டின் “சைத்தான்” பட வெற்றிக்குப் பிறகு, அடுத்த அதிரடி திரைப்படமான ‘ஹிசாப் பராபர்’ மூலம் மீண்டும் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறார். இப்படம் இப்போது ZEE5 இல் ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட இப்படம், மிகப்பெரும் பாராட்டுக்களைக் குவித்தது. ஹிசாப் பராபரில், ஊழலுக்கு எதிராகப் போராடும் ஒரு சாதாரண மனிதனாக, மாதவன் நடித்துள்ளார். அஷ்வினி திர் இயக்கியுள்ள இப்படத்தை, ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் எஸ்பி சினிகார்ப் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் நீல் நிதின் முகேஷ் மற்றும் கிர்த்தி குல்ஹாரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நையாண்டி பாணியில் சமூக அக்கறை மிக்க படைப்பாக, ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு சாதாரண ரயில்வே டிக்கெட் பரிசோதகரான ராதே மோகன் ஷர்மா (ஆர். மாதவன்), ஒரு பெரிய வங்கி மோசடியின் பின்னணியில், எதிர்பாராதவிதமாக ஊழலின் கொடிய வலையில் சுழலும் நிதி முரண்பாட்டைக் கண்டுபிடிக்கிறார். அதை விசாரிக்க ஆரம்பிக்கும் போது, இரக்கமற்ற வங்கியாளர் மிக்கி மேத்தா (நீல் நிதின் முகேஷ்) தலைமையிலான அதிகார சக்திகளுக்கு எதிராக மாட்டிக்கொள்கிறார். அவரது நேர்மை மற்றும் அவரைச் சுற்றியுள்ள உலகின் அதிர்ச்சிகரமான உண்மைகளுக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் ராதே, என்ன முடிவெடுக்கிறார். என்பதை இப்படம் சொல்கிறது. இப்படம் இப்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
நடிகர் R. மாதவன் கூறுகையில்..,
“ZEE5 உடனான எனது முதல் முயற்சியான ஹிசாப் பராபரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்!. ராதே மோகன் ஷர்மாவாக நடித்தது மிகச் சவாலான பணியாக இருந்தது. அவர் ஒரு அசாதாரண சூழ்நிலையில் தள்ளப்பட்ட மிகச் சாதாரண மனிதர், அவரது பயணம் அசாத்தியமானது. ஹிசாப் பராபர் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம், ஒரு சாதாரண மனிதனும், முறையான ஊழலுக்கு எதிரான அவனது போராட்டமும், ராதேவின் விடாமுயற்சியும், பின்னடைவும் பலரை ஊக்குவிக்கும் என்பதால், இந்தப்படம் சிறியவர் முதல் பெரியவர் வரை, அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். மிக உண்மையான ஒரு எழுச்சி மிக்க இந்தக்கதையை, மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும்.
நீல் நிதின் முகேஷ் கூறுகையில்…,
“ஹிசாப் பராபரின் ஒரு அங்கமாக இருப்பதும், மிக்கி மேத்தாவாக ஒரு இரக்கமற்ற வங்கியாளராக நடிப்பதும் சவாலாகவும். நம்பமுடியாத அளவிற்கு நிறைவான பயணமாக இருந்தது. இருண்மை கொண்ட பாத்திரங்கள் மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு உண்டு. மிக்கி பாத்திரம் தனித்துவமானது. மேலும், ஆர். மாதவனுடன் இணைந்து பணியாற்றியது ஒரு முழுமையான மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அவர் ஒரு அற்புதமான மனிதர் மட்டுமல்ல, ஒரு அற்புதமான சக நடிகரும் கூட, எங்களின் அட்டகாசமான கெமிஸ்ட்ரியை படத்தில் பார்த்து மகிழுங்கள். ஹிசாப் பராபர் படத்தை ZEE5 இல் பார்த்து ரசியுங்கள்”.
கீர்த்தி குல்ஹாரி மேலும் கூறுகையில்..,
“ஒரு நடிகராக எனக்குச் சவால் விடும் மாறுபட்ட வேடங்களில் நடிப்பதை நான் எப்போதும் விரும்புவேன், ஹிசாப் பராபரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒரு அசத்தலான கதாபாத்திரம் மட்டுமின்றி, எனது சக நடிகரான ஆர் மாதவனுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். மற்றும் இயக்குநர் அஷ்வினி திர், செட்டில் உள்ள சூழ்நிலை மிகவும் அழகாகவும், ஆக்கப்பூர்வமாகவும் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். அனைத்து இந்தியர்களையும் மகிழ்விக்கும் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், சிந்தனையைத் தூண்டும் படமாகவும் இப்படம் இருக்கும். குடியரசு தின வார இறுதிக்கு இது சரியான படம், எனவே ரசிகர்கள் அனைவரும் இதை ZEE5 இல் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும் ஹிசாப் பராபரை இப்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கண்டுகளியுங்கள் !!