ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பு – IDENTITY படத்திற்கு 40 கூடுதல் காட்சிகள் சேர்ப்பு!

சமீபத்தில் வெளியான ARM படத்தின் வெற்றிக்குக்குப் பிறகு டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடித்துள்ள “IDENTITY” படம் தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் ஆகியோர் இயக்கத்தில் டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய், மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோர் நடித்து இருக்கும் படம் தான் IDENTITY. இந்த படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகளவில் இருந்தது. இந்நிலையில் படம் ஜனவரி 2ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் IDENTITY படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

மலையாளத்தில் வெளியாகும் மிகச்சிறந்த திரில்லர் படங்களின் வரிசையில் தற்போது IDENTITY படமும் இணைந்துள்ளது. காட்சிக்கு காட்சி திருப்பங்களுடன் சிறந்த படமாக அமைத்துள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் படத்தை பற்றிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிளாக்பஸ்டர் ஹிட்டான ஃபாரென்சிக் படத்திற்குப் பிறகு டோவினோ தாமஸ், இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் கூட்டணி மீண்டும் வெற்றி அடைந்துள்ளது.

ராகம் மூவிஸ் பேனரின் கீழ் ராஜு மல்லையாத் மற்றும் கான்ஃபிடன்ட் குரூப் மூலம் சி.ஜே.ராய் IDENTITY படத்தை தயாரித்துள்ளனர். தென்னிந்திய சூப்பர் ஸ்டார் த்ரிஷா முதன்முறையாக டோவினோ தாமஸ் உடன் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தில் நடிகர் வினய் ராயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். IDENTITY படத்தின் அகில இந்திய விநியோக உரிமையை கோகுலம் மூவீஸ் வாங்கியுள்ளது, மேலும் படம் ட்ரீம் பிக் பிலிம்ஸ் பேனரில் திரையரங்குகளில் வரவுள்ளது. GCC விநியோக உரிமையை ஃபார்ஸ் பிலிம்ஸ் பெற்றுள்ளது.

IDENTITY படத்தை அகில் பால் மற்றும் அனஸ் கான் இணைந்து இயக்க, அகில் ஜார்ஜ் ஒளிப்பதிவும், சமன் சாக்கோ படத்தொகுப்பும் செய்துள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசை மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். பாலிவுட் நடிகை மந்திரா பேடி, அஜு வர்கீஸ், ஷம்மி திலகன், அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷக் நாயர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். IDENTITY படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளிலும் வெளியாகி உள்ளது. முதல் நாளில் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் தற்போது தமிழகத்தில் 40 காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக வசூல் செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.