தவறான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம் ! ஹாட் ஸ்பாட் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக்!

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களை பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்..

தயாரிப்பாளர் மணிவண்ணண் பேசியதாவது
ஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாக பழக்கம். லாக்டவுன் டைமில் ஒரு ஷார்ட் ஃபிலிம் செய்தோம். திட்டம் இரண்டு படம் செய்த போதே இப்படத்ததின் கதை சொன்னார். எனக்குப் பிடித்திருந்தது. டிரெய்லர் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறைய கருத்துக்கள் வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்து சொல்லுங்கள்

நடிகை அம்மு அபிராமி பேசியதாவது…
என்னை இந்தப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்த விக்னேஷ் அவர்களுக்கு நன்றி. முதலில் கதை சொன்ன போது பயந்தேன், திட்டம் இரண்டு பார்த்த பிறகு தான் அவரின் கதை சொல்லும் முறை புரிந்தது. என்னோட கதாப்பாத்திரம் மிக நன்றாக வந்துள்ளது

Christopher Kanagaraj on X: "#Hotspot Press Meet 📸 https://t.co/4VMJenOHsZ" / X

நடிகர் கலையரசன் பேசியதாவது…
இந்தப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே திரையுலகில் இருந்து, பலர் போன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டு இருக்கலாம், ஆனால் அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. யுவர்ஸ் ஷேம்ஃபுலி என தொடர் எடுத்தார். அதுவும் இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது ஆனால் அது முடியும் போது மிக அழகாக நம்மை சிந்திக்கும்படி செய்யும். அவர் படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…
ஹாட் ஸ்பாட் என் நண்பர்கள் தான் தயாரித்துள்ளனர் என் மீதான் நம்பிக்கை மட்டும் தான் காரணம் அவர்களுக்கு நன்றி. நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர் எல்லோரும் கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். யுவர்ஸ் ஷேம்ஃபுலி என தொடர் எடுத்தேன் அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத் தான் இந்தப்படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தை சொல்லிவிடக்கூடாது என்பதில் மிக கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.