இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் தான் மிக முக்கியமானது! “சைரன்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜெயம் ரவி!

 

Home Movie Makers சார்பில் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் “சைரன்”. பிப்ரவரி 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, திரைப்படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

ஜீவி பிரகாஷ் பேசியதாவது…

அந்தோணி டார்லிங் படத்திலேயே துணை இயக்குனராக வேலை பார்த்தவர். பல படங்களில் வேலை பார்த்துள்ளார். இந்தப் படம் இயக்குநராக முதல் படம் அவருக்கு வாழ்த்துக்கள். அவர் ஒரு கிஃப்டட் ரைட்டர். கண்டிப்பாக அவருக்கு இது வெற்றி படமாக இருக்கும். ஜெயம் ரவி மிக மெச்சூர்டா நடித்திருக்கிறார். இந்த வருடம் எனக்கு நல்ல வெற்றியுடன் துவங்கியுள்ளது. ஒரு சிலர் மட்டும் தான் என்னிடம் மெலடி கேட்பார்கள். இந்த படத்தில் அந்த மாதிரி நல்ல பாடல்கள் வந்துள்ளது. கேட்டுவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசியதாவது…

இந்தப் படம் எனக்கு கனவு மாதிரி. முதலில் ரூபன் என் காலேஜ் சீனியர். அவர் சொல்லி அனுப்பி தான் இரும்புத்திரை படத்தில் ரைட்டராக மாறினேன். பின்னர் இயக்குநராக வேண்டி அலைந்து கொண்டிருந்தேன். ரூபன் அண்ணா ஒரு நாள் ரவி சார் எப்படி இருப்பார் என்றார். உடனே அவரிடம் அனுப்பி வைத்தார், எல்லாமே நடந்தது. அவர் தான் சுஜாதா மேடத்திடமும் என்னை அறிமுகப்படுத்தினார். ரவி சாருக்கு கதை சொன்னேன். அவருக்கு கதை பிடித்து உடனே ஆரம்பிக்கலாம் என்றார். ரவி சார் என்னை முழுமையாக நம்பினார். நடிக்கும் போது என்ன எடுத்தீர்கள் என்று கூட அவர் கேட்டதில்லை. அவர் வைத்த நம்பிக்கையை உடைத்துவிடக்கூடாது என்பது தான் எனக்கு முக்கியமாக இருந்தது. புது இயக்குநர்கள் பெரிய ஹீரோக்கு செய்யும் படம் ஜெயிக்க வேண்டும். அப்போது தான் இனி புது இயக்குநர்கள் பலர் வர முடியும். அழகம் பெருமாள் சாரை ஷீட்டிங்கு முதல் நாளில் தான் கூப்பிட்டேன், எனக்காக வந்தார். கனி அண்ணனிடம் கதை சொன்ன போதே, இந்தக்கதை ஹிட்டுடா என்றார். இந்தக்கதையைத் தாங்கும் ஜெயம் ரவி இருக்கிறார், படம் ஜெயிக்கும் என்றார் நன்றி அண்ணா.

ஜீவி அண்ணாவின் மெலடி எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் மட்டும் தான் எனக்குத் தெரிந்த இசையமைப்பாளர், என்னை எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருப்பார். இந்தப்படத்திற்காக 20 ட்யூன் தந்துள்ளார். அவருக்கு நன்றி. செல்வா, வேறு வேறு களங்களில் படம் செய்தவர். இந்தப்படத்தை அவ்வளவு லைவ்வாக எடுத்துத் தந்தார். திலீப் மாஸ்டர் கதைக்குள்ளேயே யோசிப்பார், எனக்காக நிறையச் செய்தார். சுஜாதா மேடம் இந்தக்கதையை முழுசாக கேட்கவில்லை. ரவி சாருக்காக செய்தார். நானே காம்ப்ரமைஸ் செய்தாலும் அவர் செய்யவிட மாட்டார். ரொம்ப ரொம்ப நன்றி மேடம். இந்தப்படத்தில் உழைத்த அனைவருமே தங்கள் படம் போல வேலை செய்தார்கள். கீர்த்தி அற்புதமாக நடித்துள்ளார். அனுபமாவிற்கு முக்கியமான ரோல். தமிழில் இது அவங்களுக்கு முக்கியமான படமாக இருக்கும். மக்களிடம் கொண்டு போய் இப்படத்தைச் சேர்க்க உங்கள் உதவி முக்கியம். நன்றி.

இரண்டு வேடங்களில் கொஞ்சம் கஷ்ட்டப்பட்டு நடித்திருக்கிறேன்! - 'சைரன்' படம் பற்றி நடிகர் ஜெயம் ரவி ஓபன் டாக்

நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது…

மிகச் சந்தோஷமான தருணம். எல்லோரும் கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய படம். இப்படம் ரிலீஸுக்கு வருகிறது. நல்ல படத்திற்கு எப்போதும் ஆதரவு தருவீர்கள். இந்தப்படத்திற்கும் ஆதரவு தாருங்கள். முதன் முதலில் ரூபனிடம் இருந்து தான் இந்தப்படம் ஆரம்பித்தது. அடங்கமறு இயக்குநரை அவர் தான் அனுப்பி வைத்தார். அந்தப்படம் பெரிய வெற்றி. இந்தப்படமும் கண்டிப்பாக வெற்றியடையும். எப்போதும் எனக்கு அவர் ஃபேமிலி மாதிரி தான். இந்தப்படம் வேறு புரடியூசர் போகலாம் என்ற போது, சுஜாதா அம்மா விடவே இல்லை. கண்டிப்பாக நம்ம தான் பண்ணனும் என்று பிடிவாதமாக இருந்தார். ஒரு படத்தின் மீது தயாரிப்பாளருக்குத் தான் நம்பிக்கை இருக்க வேண்டும் , அந்த நம்பிக்கை அவரிடம் இருந்து ஆரம்பித்தது எனக்குச் சந்தோசம். இந்தப்படத்தில் எமோஷன் மிக முக்கியம், அதைத் திரையில் கொண்டுவருவது முக்கியம். ஜீவி தான் பண்ணனும் என ஆசைப்பட்டோம். அவரும் ஒத்துக்கொண்டார். இந்தியாவின் மிகச்சிறந்த மியூசிக் டைரக்டர்களில் ஒருத்தர் ஜீவி. இந்தப்படத்தில் பெண் கதாபாத்திரம் மிக முக்கியமானது. ஹீரோவுக்கு சரிசமமாக நிற்க வேண்டும். கீர்த்தி சரியாக இருப்பார் என்று நினைத்தோம், அதை நிரூபிக்கும்படி நடித்துள்ளார். மிகச்சிறந்த உழைப்பாளி. கனி அண்ணனுக்கு இன்னும் ஒரு முக்கியமான பாத்திரம். நிஜத்தில் எப்போதும் சமூக கருத்துக்கள் சொல்பவர், அவரை அதற்கு நேர்மாறாக நடிக்க வைத்துள்ளோம். என்னப்போய் இப்படிப் பேச வைக்கிறீங்களே என்பார், ஆனால் எனக்காக நடிக்க வந்தார் அருமையாகச் செய்துள்ளார் நன்றி.

அழகம் பெருமாள் சார் அடங்கமறு படத்தில் அவருடன் நடிக்க ஆரம்பித்தேன். அவருடனான ஜர்னி இன்னும் தொடர வேண்டும். இயக்குநரும் செல்வாவும் டிவின்ஸ் மாதிரி அத்தனை ஒற்றுமையாக இருப்பார்கள். அவர்கள் உழைப்பை மக்கள் பாராட்டுவார்கள். இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் இன்னும் நிறைய மேடைகளில், வெற்றி மேடைகளில் அவரை நீங்கள் பார்ப்பீர்கள். நான் புது இயக்குநர்கள் கூட படம் செய்கிறேன் என்கிறார்கள். நான் ஒரு கருவி அவ்வளவு தான். இயக்குநரின் உழைப்பு தான் படம் வெற்றிபெறக் காரணம், இந்தப்படம் ரெண்டு ரோல் கொஞ்சம் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன். யோகிபாபு நானும் டிவின்ஸ் மாதிரி ஒன்னாவே இருந்தோம். கோமாளி படம் மாதிரி இந்தப்படத்திலும் அழகான டிராவல். மக்கள் ரசிப்பார்கள். படம் நன்றாக வந்துள்ளது. படத்தைப் பார்த்து ரசியுங்கள்.