பொங்கல் பண்டிகைக்கு வெளியான படங்களில் முதல் படமாக வெற்றியை கொண்டாடி இருக்கு மிஷன் திரைப்படம். அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க லண்டன்ல படமாக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு முழு ஆக்சன் படமா உருவாகியிருந்த, இந்த படம் முதல் நாள் தியேட்டர்கள் கிடைக்காம சில தியெட்டர்கள்ல மட்டுமே ரிலீஸானது. ஆனால் மறுநாளே பிக்கப் ஆகி, இப்ப பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புல்லா ஓடிட்டு இருக்கு. இதை கொண்டாடுற விதமா இந்த படத்தோட டீம், பத்திரிகையாளர்களை சந்தித்து இன்று நன்றி தெரிவித்தார்கள்.
வித்தியாசமான படங்கள் மூலமாக ரசிகர்கள மகிழ்விச்சுட்டு வர்ற அருண் விஜய் இந்த படம் மூலமா ஒரு ஆக்சன் விருந்த தன்னோட ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். இயக்குனர் விஜயோட முழு ஆக்சன் கதை ரசிகர்களுக்கு பிடித்ததால இந்த படம் இப்ப முன்னணியில் வர ஆரம்பிச்சிருக்கு.இந்த படத்தோட பட்ஜெட்டை தாண்டி, இந்த படம் இப்ப சம்பாதிக்க ஆரம்பிச்சதுல படத்தோட டீம் ரொம்பவே சந்தோஷமா இருக்காங்க.
இந்தப்படத்த வெளியிட்ட லைகா நிறுவனமும் மகிழ்ச்சியில் இருக்காங்க.
இந்த படத்தோட நன்றி தெரிவிப்பு விழாவில பேசிய இயக்குனர் விஜய் இந்த படத்தில் உழைத்த எல்லோரும் தான் இந்த படத்தோட வெற்றிக்கு முக்கிய காரணம் என்றும், படத்தை மக்களிடம் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றியும் தெரிவித்தார்.
நடிகர் அருண் விஜய் இந்த படத்துல ஒர்க் பண்ணத மறக்கவே முடியாது, மேலும் இரண்டு பெரிய படங்கள் ரிலீசான சமையத்துல, என்னோட படமும் ரிலீஸ் ஆகி, அது ரசிகர்கள் கொண்டாடினது மிகப்பெரிய மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்று கூறினார்.
இரண்டு பெரிய படத்துக்கு இடையில ரிலீஸ் ஆன இந்தப்படம் அந்த இரண்டு படத்தையும் தாண்டி ரசிகர்களைக் கவர்ந்து தியேட்டர்லையும் சக்சஸ்சா ஓட்டுறது உண்மையிலேயே பெரிய விஷயம் தான்
இப்படம் உலகளவில் ரூ. 4 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. முதல் நாளில் இருந்து இப்படத்தின் வசூல் தற்போது வரை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாக கூறப்படுகிறது.