படத்தை பார்த்து விட்டேன் ஈகோ கிளாஷ்தான் இந்தப்படம் ! பார்க்கிங்க் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குனர் லோகெஷ் கனகராஜ்!

 

ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்துள்ளது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது.

இந்த நிகழ்வில்,

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, “இந்தப் படம் நான் முன்பே பார்த்துவிட்டேன். பார்க்கிங் என்ற விஷயத்தை வைத்து எவ்வளவு பெரிய பிரச்சினையைப் படம் பேச இருக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறீர்கள். ‘மாநாகரம்’ படத்தை ஸ்ரீனிஸ்தான் முதலில் தயாரிப்பதாக இருந்தது. இரண்டு கதாபாத்திரங்களின் ஈகோ கிளாஷ்தான் இந்தப் படமாக இருக்கும். எம்.எஸ். பாஸ்கர் சாருடன் வொர்க் பண்ண வேண்டும் என்பது என் விருப்பம். அது கூடிய சீக்கிரம் நடக்கும் என நம்புகிறேன். எல்லோருமே நன்றாக நடித்துள்ளார்கள். வாழ்த்துகள்”.

நடிகர் எம்.எஸ். பாஸ்கர் பேசியதாவது, “இந்தப் படத்திற்கு 100ஆவது நாள் விழா நடக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்ட இயக்குநர் ராம், சுதன் சார், ஸ்ரீனிஸ் அனைவருக்கும் நன்றி. இரண்டு வீடு ஒரு பார்க்கிங், இரண்டு வீட்டிலும் கார் இருக்கிறது எனும்போது நடக்கும் பிரச்சினைகள்தான் படம். அதை ரசிக்கும்விதமாக சொல்லியிருக்கும் ராம்குமார் பாலகிருஷ்ணனை பாராட்டுகிறேன். படத்தின் நாயகன் ஹரிஷ், இந்துஜா, பிரார்த்தனா மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசியதாவது, “ஒரு படம் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள் கையில்தான் உள்ளது. ஆனால், அதற்கு முன்பு அப்படியான நல்ல படத்தை தவற விட்டிருந்தால் நிச்சயம் நான் வருத்தப்பட்டிருப்பேன். அப்படியான நல்ல கதையை எனக்குக் கொடுத்ததற்கு இயக்குநருக்கு நன்றி. உங்களுடைய படம் போல நினைத்து இந்தப் படம் மேல் நம்பிக்கை வைத்து மேடையில் பாராட்டிய இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி. எனக்கு நெகட்டிவ் ஷேட் செய்ய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வில்லத்தனம் இருக்கும். அந்த வில்லத்தனத்திற்கு ஒரு ஹீரோயிசம் கொடுத்துதான் இயக்குநர் எழுதி இருக்கிறார். இந்த கேரக்டர் எனக்கு கிடைத்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். ’அபூர்வ ராகங்கள்’ ரஜினி சார், கமல் சாருடைய பல படங்கள், விஜய் சாருடைய ‘ப்ரியமுடன்’, அஜித் சாருடைய ‘வாலி’ போன்ற படங்களை ரசிகர்கள் கொண்டாடி ஹிட் கொடுத்துள்ளனர். அது ஏன் என்றால் அந்த கதாபாத்திரங்களில் உண்மை இருந்தது. எல்லோருக்குள்ளும் ஒரு ஈகோ, வில்லத்தனம் இருக்கும். அது எப்படி, எந்த சூழலில் வெளிப்படுகிறது என்பதுதான் முக்கியம். அந்த ஸ்பேஸ் எனக்குக் கொடுத்த இயக்குநருக்கு நன்றி. எம்.எஸ். பாஸ்கர், ரமா, பிரார்த்தனா, இந்துஜா என அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். படத்தில் நிறைய பாடல்கள் இல்லை. ஆனால், அதற்கும் சேர்த்து சாம் நல்ல பின்னணி இசை கொடுத்துள்ளார். நல்ல கதை கொடுத்துள்ளோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.