தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நடிப்பில், ‘விக்ரம்’, ‘நட்சத்திரம் நகர்கிறது’ படங்கள் வெளியாகி பிரமாண்ட வெற்றி பெற்றது. அதற்கு பிறகு வெளியாகும், அடுத்த திரைப்படம் ‘அவள் பெயர் ரஜ்னி’ என்பது குறிப்பிடதக்கது.தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம், நொடிக்கு நொடி திருப்பங்களுடன் ரசிகர்களை இருக்கை நுனியில் வைக்கும், துப்பறியும் வகை திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது
இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, நமீதா பிரமோத், ரெபா மோனிகா ஜான் மற்றும் சைஜு குருப், அஸ்வின் குமார், கருணாகரன், ஷான் ரோமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது , இந்த நிகழ்வில் லோகெஷ் கனகராஜ் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்,
இந்த நிகழ்வில்,
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது,
என்னை பெரிய படங்களை இயக்கும் இயக்குனர் என்று கூறி வரவேற்றனர் , ஆனால் என்னுடைய முதல் படம் மாநகரம் அது சிறிய படம்தான் அதற்கு பத்திரிக்கையாளர்களின் ஆதரவு இருந்தது அதனால் தான் என்னால் பெரிய படங்களை இயக்க முடிந்தது, நான் இங்கு காளிதாசுக்காக மட்டும்தான் வந்தேன், பல விஷயங்கள் படத்திற்காக மெனக்கெட்டு செய்வார், நடிகரையும் தாண்டி டிஸ்கசன் போன்ற விஷயங்களிலும் கலந்து கொள்வார் , ஒரு படம் வெற்றியடைய தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுப்பர் , இந்தப் படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என வாழ்த்துகிறேன் ,, தலைவர்171 படத்தின் எழுத்து வேலைகளை அடுத்த வாரம் தான் ஆரம்பிக்க போகிறேன், படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் நன்றி
நடிகர் காளிதாஸ் ஜெயராம் பேசியதாவது ,
இந்த சிறிய படத்தை பெரிய படமாக மாற்ற உதவிய லோகேஷ் கனகராஜ் சாருக்கு நன்றி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் நன்றி இத்தனை நாட்கள் கழித்தும் படத்தை தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று உறுதியாக இருந்தனர், கண்டிப்பாக என் படங்களில் இருந்து இந்தப் படம் மாறுபட்டு இருக்கும் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன், படத்திற்கு உங்கள் ஆதரவை கொடுங்கள் நன்றி,
நடிகை நமீதா பிரமோத் பேசியதாவது ,
இங்கு வந்துள்ள அனைவருக்கும் வணக்கம், இரண்டு மொழியில் வெளியாகும் முதல் படம் எனக்கு , இந்தப் படம் ஒரு திரில்லர் படம் ஆனால் படப்பிடிப்பை காளிதாஸ் கலகலப்பாக வைத்துக் கொள்வார் , அவருடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது , இயக்குனர் திறமையானவர் மீண்டும் அவருடன் இணைந்து படம் பண்ண ஆசை , அனைவரை போலையும் நானும் படம் ரிலீஸாக காத்திருக்கிறேன் , நன்றி ,