சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் வெளியான தினத்தில் இருந்து இப்போது வரை திரையரங்களில் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்க்கும் ஒரு படமாக இருப்பதாக படம் பார்த்த அனைவருக்கும் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தை தவிர அண்டை மாநிலங்களிலும் ஜெயிலர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இயக்குனர் நெல்சன் பேசியதாவது
சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பு பொறுப்புகளை கண்ணன் மற்றும் செம்பியன் இருவருமே எடுத்துக் கொண்டார்கள். கலாநிதி மாறன் சாரிடம் ஒற்றை வரியில் கதை சொல்லி தப்பித்து விடலாம் என நினைத்தால் அவரோ இரண்டரை மணி நேரம் அல்ல 5 மணி நேரம் வரை கூட பொறுமையாக அமர்ந்து கதை கேட்பார். இந்த படத்தை தனது இதயத்திற்கு நெருக்கமாக நினைத்தார் கலாநிதி மாறன். இந்த படத்தை ரசிகர்கள் இவ்வளவு கொண்டாட காரணம் ரஜினி சார் இந்த படத்தின் ஸ்கிரிப்ட் மீது ரொம்பவே நம்பிக்கை வைத்திருந்தார். படம் பார்த்துவிட்டு, நான் நினைத்ததை விட பத்து மடங்கு நல்லா வந்திருக்கு என்று பாராட்டினார். நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தபோது ரஜினி சார் என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தார். இந்த படம் இங்கே வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அவர் இப்போது இமயமலையில் ஆன்மிக பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் வந்ததும் அவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்” என்று கூறினார்.

நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேசியதாவது ,
“போன முறை ஒரு வருடத்திற்கு முன்பு ஏதோ ஒரு பிரஸ்மீட்டில் இங்கே பேசும்போது நெல்சன் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கேட்டார்கள். வெறித்தனமாக கதை எழுதிக் கொண்டிருக்கிறார் என்று கூறினேன். அதற்காக அவரிடம் திட்டும் வாங்கினேன். ஆனால் இப்போது அந்த அளவுக்கு வெறித்தனமாக ஒரு படத்தை கொடுத்து விட்டார். பத்து தீபாவளிகள் ஒரே நாளில் வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது ஜெயிலர் பட கொண்டாட்டம். எப்படியும் ஆயிரம் கோடியை இந்த படம் தொடும்” என்று கூறினார்.
நடிகர் ஹர்ஷத் பேசும்போது, “இயக்குனர் நெல்சனுடன் 12 வருடமாக பழகி வருகிறேன். இவ்வளவு குறுகிய காலத்திலேயே அவர் இந்த பெரிய இடத்திற்கு வந்து விட்டாரே என பலரும் நினைக்கிறார்கள் ஆனால் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர் பட்ட கஷ்டங்களை நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். ஜெயிலர் படத்தின் கடைசி ஐந்து நாள் படப்பிடிப்பின்போது கடுமையான காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார் நெல்சன். சினிமாவிற்கு வரும்போது நானும் ரஜினியாக வேண்டும் என்கிற எண்ணத்துடன் தான் வந்தேன். அவரை நேரில் பார்ப்போமா என்று நினைத்த எனக்கு இந்த படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைத்தது. என்னுடைய நடிப்பை பாராட்டி அவர் கை கொடுத்தபோது உறைந்து போய் அந்த உணர்வில் இருந்து வெளிவருவதற்கே எனக்கு ஒரு மாதம் ஆனது” என்று கூறினார்.