நடிப்பிலிருந்து ஒய்வு பெறப்போகிறாரா நடிகர் விஜய்! இனி அரசியல் தான் எல்லாமே!

இனிமேல் அடிக்கடி ரசிகர்களை சந்திக்கவுள்ளார் நடிகர் விஜய், அவர்களுடன் ஆலோசனை செய்வார், மாவட்ட அளவில் பூத் கமிட்டியை அமைப்பார் என்றும் செய்திகள் வர தொடங்கி உள்ளன.

இந்த நிலையில்தான் திடீர் திருப்பமாக நடிகர் விஜய் சினிமாவில் இருந்து 2-3 ஆண்டுகள் ஓய்வு எடுக்க இருப்பதாக திடீரென சினிமா வட்டாரத்தில் செய்தி ஒன்று பரவி வருகிறது.2026ஆம் ஆண்டு தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கொண்டு விஜய் இந்த முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படியு திரைப்படங்கள் நடிப்பதிலிருந்து 3 ஆண்டுகள் விலகியிருக்க நடிகர் விஜய் முடிவு செய்துள்ளார். இப்போது கையில் உள்ள படங்களை அவர் விரைவில் முடிப்பார்.

Image

லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிப்பார். அடுத்த பிப்ரவரிக்குள் நடிப்பை முடித்துவிட்டு பின் 3 ஆண்டுகள் இடைவேளை எடுக்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அதை மனதில் வைத்தே வெங்கட்பிரபு படத்திற்கான சம்பளத்தை உயர்த்தி உள்ளார் என்றும் கூறப்படுது. வெங்கட் பிரபு படமே விஜயின் கடைசி படமாக இருக்கவும் வாய்ப்புள்ளதாக ஒரு செய்தியும் பரவி வருகிறது,