நடிகர் கார்த்தியின் ஜப்பான் படத்தின் படப்பிடிப்பி தற்போது முடிந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் திருவாரூர் முருகன் என்ற நகைக்கடை கொள்ளையன் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லலிதா ஜுவல்லரி கடையில் ஏற்பட்ட நகை திருட்டுக்கு திருவாரூர் முருகன் தான் காரணம் என காவல் துறையால் அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திருவாரூர் முருகன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.
அந்த திருவாரூர் முருகன் நகைக்கடை கொள்ளையை தழுவி தான் ’ஜப்பான்’ படத்தின் கதை அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, ஆனால் அதே நேரத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு காலமான நிகழ்வை மட்டும் இயக்குனர் ராஜூ முருகன் மாற்றியமைத்து கார்த்தியிடம் கூறியதாக தெரிகிறது, ஆனால் கார்த்தி அதனை மாற்ற வேண்டாம் என்றும் உண்மை கதையில் இருந்தபடி ’ஜப்பான்’ படத்தின் கதையில் இருக்கட்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்த படம் தீபாவளிக்கு வெளியாகிறது
இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கிறார். அவருக்கு ஜோடியா கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் கார்த்தி தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடிக்க உள்ளார் . அதனால் இந்த படத்திற்கு ரத்தத்தின் ரத்தமே மற்றும் வா வாத்தியாரே போன்ற தலைப்புகளை வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.