பல சர்ச்சைகளை தாண்டி டப்பிங் பணிகளை முடித்துக் கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்

4

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் டைரக்ட் செய்யறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கிறாய்ங்க. விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருது.

இந்த படத்தின் இயக்குனருக்கும் சிவகார்த்திகேயனுக்கும் சில கருத்து வேருபாடுகள் இருந்து வந்ததாக சில வதந்திகளும் வெளியானது,தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த மாதம் 29-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் , மேலும் படம் நன்றாக வந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்

Previous articleதளபதி 68 படம் மட்டுமில்லை படத்தின் பூஜையும் வித்தியாசமாகத்தான் இருக்கும்
Next article“கட்டிஸ் கேங்”படக்குழுவினர் உலக சுற்றுச்சூழல் தினத்தை வித்தியாசமாக கொண்டாடியுள்ளனர்