பல சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து பாக்ஸ் ஆபிஸ் கிங் என இந்தி திரையுலகின் வசூல் சக்ரவர்த்தியாக வலம் வருபவர் ஷாருக்கான். ஜனவரி மாதம் வெளியான ஷாருக்கானின் பதான் திரைப்படம் பாய்காட் பிரசாரங்களை கடந்தும் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது. பதான் படத்தைத் தொடர்ந்து ஷாருக்கான் தற்போது நடித்து வரும் ஜவான் செப்டம்பர் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க இருக்கார் ஷாருக்கான். மேலும் ஒரு படத்திற்காக 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் ஷாருக், ஏராளமான விளம்பரங்களில் நடித்தும் கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார். அதேநேரம் ஷாருக்கானின் மேனேஜர் பூஜாவின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி நம் அனைவரையும் தலை சுற்ற வைத்துள்ளது.
கடந்த 11 வருடங்களா ஷாருக்கானின் மேனேஜராக வேலை பார்த்து வாறார் பூஜா தத்லானி. ஷாருக்கானின் நிழலாக பின்தொடரும் பூஜா, கிட்டத்தட்ட அவரது குடும்ப உறுப்பினராகவே வாழ்ந்து வருகிரார் . ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கிய நேரத்தில் அனைத்து வேலைகளையும் செய்து அவரை வெளியே கொண்டு வந்ததும் பூஜா தான்.
முக்கியமாக ஆர்யன் கான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கண்கலங்கி நின்றார் பூஜா. அப்போது தான் அவருக்கும் ஷாருக்கான் குடும்பத்துக்கும் இடையேயான ஆத்மார்த்தமான நெருங்கிய உறவு குறித்து பலருக்கும் தெரிய வந்தது. ஷாருக்கானின் கால்ஷீட், அவர் எங்கு யாரை எப்போது சந்திக்க வேண்டும் என்ற அனைத்து விவரங்களையும் பூஜா தான் கவனித்துக்கொள்கிறாராம். ஷாருக்கான் பிஸியாக இருக்கும் போது மட்டும் இல்லாமல், தொடர் தோல்விகள், படமே ரிலீஸாகாத நேரத்திலும் அவருக்கு பக்கபலமாக நின்றவர் பூஜா. அதேபோல், ஷாருக்கானின் பயணங்களில் அவருடன் எப்போதும் பயணிப்பதும் பூஜா மட்டும் தான். ரெட் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகமும் பூஜாவின் கண் அசைவில் தான் நடக்கிறது.
40 வயதாகும் பூஜா மாஸ் கம்யூனிகேசன் படித்துள்ளார். கடந்த 2008ல் தொழிலதிபர் ஹிதேஷ் குர்னானி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட பூஜாவிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஷாருக்கானிடம் மேனேஜராக வேலைப் பார்த்து வரும் பூஜாவுக்கு இப்போது ஆண்டுக்கு 10 கோடி ரூபாய் வரை சம்பளமாம்
மெர்சிடிஸ் கார் உட்பட 50 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து வைத்துள்ளார் பூஜா. அதேபோல், ஷாருக்கான் கூப்பிட்டால் உடனே வரவேண்டும் என்பதற்காக பூஜா தனது வீட்டை பாந்த்ரா பகுதிக்கே மாற்றிவிட்டாராம். இதனால் அந்த வீட்டின் இண்டீரியர் வேலைகளை ஷாருக்கானின் மனைவி கெளரி கான் தான் செய்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.