டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது

5

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும், தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது !!!

கொச்சி 15 மே 2023 : டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தங்களது முதல் மலையாள வெப் சீரிஸான “கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸின் டீசரை, பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியிட்டுள்ளது.

விரைவில் வெளியாகவிருக்கும் இந்த வெப் சீரிஸில் முன்னணி நட்சத்திர நடிகர்களான லால், அஜு வர்கீஸ் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். க்ரைம் இன்வஸ்டிகேசன் பின்னணியில், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும் வகையில் பரபரப்பான திரைக்கதையுடன் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் மலையாளம் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள புதிய டீசரில் லால் மற்றும் அஜு வர்கீஸ் பாத்திரங்கள் பாலியல் தொழிலாளியின் சவால்மிகுந்த கொலை வழக்கினை விசாரிக்கிறார்கள்

அவர்களுக்குக் கிடைக்கு ஒரே ஒரு க்ளூ ஒரே ஒரு பெயர் மற்றும் லாட்ஜின் லெட்ஜரில் பொறிக்கப்பட்ட – “ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” எனும் போலி முகவரி. இந்த சிக்கலான சவால் மிகுந்த வழக்கை காவல்துறையினர் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை சுற்றியே இந்த சீரிஸின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படு சுவாரஸ்யமான திருப்பங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒரு ஆழமான திரில்லர் வெப் சீரிஸாக இந்த சீரீஸ் உருவாகியுள்ளது.

‘“கேரளா க்ரைம் ஃபைல்ஸ் – ஷிஜு பரயில் வீடு, நீந்தக்கரா” சீரிஸை First Print Studios சார்பில் ராகுல் ரிஜி நாயர் தயாரித்துள்ளார், இயக்குநர் அஹம்மது கபீர் இந்த சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸின் கதையை, திறமை மிகு கதாசிரியர் ஆஷிக் ஐமர் எழுதியுள்ளார், ஜித்தின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார், மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Kerala Crime Files' teaser promises intense journey of crime and  investigations | Onmanorama
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

Previous article‘தி லிட்டில் மெர்மெய்ட்’ திரைப்படம் மே 26 ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது
Next articleஅசோக் செல்வன் – சரத்குமார் இணையும் ‘போர் தொழில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு