ரஜினியின் 170வது படத்துக்கு வில்லனாக விக்ரம்! ரஜினியின் ஆசையை நிறைவேற்றுவாறா?

2

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிரது . இதில் ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிரது.

லால் சலாம் படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170 ஆவது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை மார்ச் 23 அன்று லைகா நிறுவனம் வெளியிட்டது, இந்த படத்தை ‘ஜெய்பீம்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு (2024) வெளியாகும் என கூறப்பட்டிருந்தது.

Lal Salaam Shoot Starts Today Superstar Rajinikanth Aishwarya Vishnu Vishal  Vikranth Lal Salaam Shooting Begins | Lal Salaam Shooting: “இன்னைக்கு  ஷூட்டிங் தொடங்குறோம்” ... மாஸ் அப்டேட் விட்ட லால் சலாம் படக்குழு..!

இந்தப்படத்துக்கான திரைக்கதை எழுதும் பணிகள் நிறைவடைந்துவிட்டது . இந்நிலையில், அந்தக்கதையில் மிகவும் சக்தி வாய்ந்த வில்லன் வேடம் இருக்கிறதாம். அந்த வேடத்தில் விக்ரம் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று டைரக்டர் நினைத்திருக்கிறார். அதை ரஜினியும் ஒப்புக்கொண்டாராம். தயாரிப்பு நிறுவனத்துக்கும் அதில் மகிழ்ச்சி.

இதனால், விக்ரமை தொடர்புகொண்டு தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். அவர், உடனே மறுத்துட்டாராம்.
ஆனாலும் விடாமல், கதையைக் கேட்டுப்பாருங்கள் உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும் என்று வலியுறுத்தினார்களாம். அதனால் இயக்குநர் த.செ.ஞானவேலை அழைத்து கதை கேட்டிருக்கிறார்.
அதன் பின்பும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. அவரை ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன என்று தகவல்

Previous articleமீண்டும் இணையும் நிவின் பாலி – ஜூட் ஆண்டனி ஜோசப் ‘ஓம் சாந்தி ஓஷானா’ கூட்டணி
Next articleவிஜய் ஆண்டனி நடித்து, இயக்கி, இசையமைத்துள்ள ‘பிச்சைக்காரன் 2’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு